அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படாமலே பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரை தொடர்ந்து,எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று அதிமுக அடிப்படை உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் மனு அளிந்திருந்தார்.பொதுச்செயலாளர் வழக்குகளில் இபிஎஸ் வெற்றி பெற்றாலும் இறுதியாக,எடப்பாடியை அங்கீகரிக்க வேண்டியது தேர்தல் ஆணையம்தான்.
திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்கீழ் தேர்தல் நடந்தது என்று தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட, திருத்தப்பட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை ஒப்புதல் தரவில்லை.திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் தராத ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை, எப்படி தேர்தல் ஆணையம் ஏற்கும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.
இபிஎஸ்-க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு அளித்திருந்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு …





குழுவில் இணைய