என்கவுண்டர்களுக்கு எதிராக ஹைகோர்ட் சரமாரி கேள்வி.. வெள்ளத்துரை மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவு


போலீசிடமிருந்து தப்ப முயற்சிப்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது விசித்திரமான முறையில் அதிகரித்து வருகிறது என உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் மதுரையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற என்கவுண்ட்டர் தொடர்பாக கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த குருவம்மாள். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2010 ஆம் ஆண்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், கூறியிருந்தாவது:- எனது மகன் முருகனை கடந்த 2010 ஆம் ஆண்டு, மதுரை மாநகர காவல் உதவி ஆணையராக இருந்த வெள்ளத்துரை மற்றும் உதவி ஆய்வாளர் தென்னவன், ஏட்டு கணேசன் ஆகியோர் சேர்ந்து சுட்டுக்கொலை செய்தனர்.

இது தொடர்பாக நான் அளித்த புகாரின் பேரில் வெள்ளைத்துரை (கூடுதல் டிஎஸ்பியாக இருந்து தற்போது ஓய்வு…
Share on:

Continue Reading

ரூ.10 கோடி நில மோசடி.. 8 முறை மாறிய வில்லங்க சான்றிதழ்.. பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது…


சென்னையில் ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் பத்திரப்பதிவு டிஐஜியாக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத்… இவர் கடந்த 2021-ம் ஆண்டு, தென்சென்னை பத்திரப்பதிவு டிஐஜியாக பணியாற்றி வந்தார்..

அப்போது, தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்வதற்கு ரவீந்திரநாத் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள், இதற்கான ஆதாரங்களுடன் புகார்களை தந்தார்கள்.

சென்னையை சேர்ந்தவர் சையத் அமான், பதிவுத்துறை ஐஜியிடம் ஒரு புகார் மனு அளித்திருந்தார்.. அந்த மனுவில், தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் நிலம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை எனது தந்தை 1980ம் ஆண்டு எனக்கு எழுதிக் கொடுத்தார். சமீபத்தில் இந்த நிலத்தை இசி செய்து பார்த்தபோது எனது தந்தை, இந்த நிலத்தை காந்தம்மாள் என்பவருக்கு விற்பனை செய்ததுபோல காட்டுகிறது. எனக்கு எனது தந்தை 1980ம் ஆண்டு எழுதிக் கொடுத்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், உத்தரவிட்டிருந்தார்… அதன்படியே, புகாரில் தெரிவித்திருந்தது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி சங்கர்ஜிவாலுக்கு பதிவுத்துறை ஐஜி கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது…

சிபிசிஐடி ஐஜி அன்பு உத்தரவின்பேரில், எஸ்பி வினோத் சாந்தாராம், டிஎஸ்பி புருஷோத்தமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், தற்போதைய சேலம் பதிவுத்துறை டிஐஜியாக இருந்த ரவீந்திரநாத், தென் சென்னை உதவி ஐஜியாக பணியாற்றியபோதுதான், இந்த தவறு நடந்திருப்பது தெரியவந்தது.

அதாவது, ரவீந்திரநாத்தே, அதில் விரல் ரேகை பதிந்து லாகின் செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, 8 முறை முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றி வைத்திருக்கிறாராம்.

அனைத்து புகார்களும் உறுதியானநிலையில்தான், நேற்றைய தினம் கைது செய்வதற்காக சிபிசிஐடி தனிப்படை போலீசார், சேலத்தில் உள்ள ரவீந்திரநாத் வீட்டுக்கு சென்றுள்ளனர்.. அங்கிருந்து போலீஸ் வேனில் சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

நேற்று இரவு முழுவதுமே, சென்னையிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி. புருஷோத்தமன் அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.. முழுமையான விசாரணைக்கு பிறகே அவர் கைது செய்யப்பட்டார்… இப்போது அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பு : சென்னையில் ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருவது, வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Share on:

கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷின் தந்தையிடம் சிபிசிஐடி விசாரணை.. பரபரப்பை கிளப்பும் வழக்கு!


கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், தற்கொலை செய்துகொண்ட கோடநாடு எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷின் செல்போன் குறித்து அவரது தந்தையிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாக தெரிகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இரவு காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் சில பொருட்கள் கொள்ளை போயின. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அடுத்த சில நாட்களில் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது விபத்து அல்ல, கொலை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்த மரணங்கள் கோடநாடு வழக்கில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தின.

பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்திற்கும் தினேஷின் தற்கொலைக்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். தினேஷ் தற்கொலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 500க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேக வளையத்தில் இருப்பவர்களின் செல்போன் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முன்பு விசாரணையின்போது தினேஷின் செல்போனை பறிமுதல் செய்யாமல் அதில் நடந்த தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்களை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட கணினி ஆபரேட்டர் தினேஷின் செல்போன் குறித்து அவரது தந்தையிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான சிபிசிஐடி போலீசார், கோத்தகிரி அருகே உள்ள தினேஷ் வீட்டுக்குச் சென்று அவரது தந்தையிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினேஷின் தந்தை போஜனிடம், தினேஷ் பயன்படுத்திய செல்போன் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவரது தந்தை, தினேஷின் செல்போன் குறித்து எதுவும் தெரியாது என்றும் தினேஷ் இறந்து 7 ஆண்டுகள் ஆவதால் செல்போன் பற்றி எந்த விபரமும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 2 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share on:

மின்கட்டண உயர்வை தொடர்ந்து 100 யுனிட் இலவச மின்சாரத்தில் கை வைக்கும் திமுக அரசு!


தமிழ்நாட்டில் ஒரே வளாகத்தில் பல மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

அதிமுக ஆட்சியில் வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுகவும் இந்த திட்டத்தை தொடர்ந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட இந்த ஆண்டும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது.

அதாவது தற்போது, 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை. 0-400 யூனிட் மின் பயன்பாட்டுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 லிருந்து 20 காசுகள் அதிகரித்து ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டது. 401-500 யூனிட்டுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15 என்பதில் இருந்து ரூ.6.45 ஆக அதிகரித்துள்ளது. 501 முதல் 600 யூனிட் மின் நுகர்வுக்கு ரூ.8.15 கட்டணம் பெறப்பட்ட நிலையில், இப்போது ரூ.8.55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 601-800 யூனிட்டுகளுக்கு ரூ.9.20 ஆக இருந்த மின் கட்டணம் ரூ.9.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த மின் கட்டண உயர்வால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மின்சார வாரியம் திட்டவட்டமாக மறுத்தது. 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியுள்ளது. அதாவது ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து அதில் ஒன்றில் மட்டும் 100 யூனிட் இலவசமாக கழித்து மின் கட்டணம் செய்யும் புதிய நடைமுறை சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் மின்வாரியம் அறிவித்த போதே ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை மெர்ஜ் செய்து, அதில் ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு ஆகியவை ஏற்கனவே மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் தற்போது 100 யூனிட் இலவச மின்சார திட்டத்திலும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து, வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் மாநிலத் தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பதில் கடிதம்!


உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தும் வகையில், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை பெற, இந்திய தேர்தல் ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளித்து மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மாற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர் களுக்கான பதவிக்காலம், இந்தாண்டு டிசம்பர் மாதத் துடன் முடிவடைகிறது.

இவை தவிர, கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, தேர்தல் நடத்தப்படாத நகர்ப்புற உள் ளாட்சிஅமைப்புகள் மற்றும் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தலை நடத்தியது.

திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட தேர்தலில் தேர்வான உறுப்பினர்கள் பதவிக் காலம் வரும் 2026ஆம் ஆண்டு முடிவடைகிறது.

வரும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலும் வரு வதால், உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலை ஒரே காலகட்டத்தில் நடத்தி முடிக்கஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. இதையொட்டி, வாக்குப் பெட்டிகளை சரிபார்க்கும் பணிகளுக்காக, சமீபத்தில் நிதி ஒதுக்கி, அதற்கான அறிவுறுத்தல்களை வழங் கியது. முன்னதாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் வாக்காளர் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் கோரியது.
Share on:

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்.. ஐகோர்ட் வார்னிங்


கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து கள்ளச்சாராய உற்பத்தி மையமாகச் செயல்படும் கல்வராயன் மலைப் பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், என். மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி அடையாள அட்டைகளை வழங்குவதற்காக முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் அதில் 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

அதனை பரிசீலித்து அடையாள அட்டைகளை வழங்க மூன்று மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அடையாள அட்டைகள் வழங்கிய பின்னர் அது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், எங்களுக்கு அறிக்கை வேண்டாம் எனவும் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை தான் வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதற்கு மூன்று மாதங்கள் என கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தனது வாதத்தில் சாலை வசதிகள், பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கல்வராயன் மலைப் பகுதியில் இரண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்குவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், அரசு அளிக்கும் விவரங்கள் போதுமானதாக இல்லை எனவும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட முடியாது எனக்கூறிய நீதிபதிகள் ஆனால் அந்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தான் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கல்வராயன் மலைப் பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, கல்வராயன் மலைப் பகுதியில் மினிப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து விழுப்புரம் மற்றும் சேலம் கோட்ட போக்குவரத்து மேலாண் இயக்குநர்கள் நேரிலோ அல்லது காணொளி மூலமாகவோ நாளை பிற்பகல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், ஆசிரியர்களுடன் பள்ளிகள் இயங்குவது தொடர்பாகவும், மருத்துவர்களுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுவது தொடர்பாகவும், சாலை வசதிகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Share on:

2026-ல் திமுக vs பாஜக-அதிமுகவை அகற்ற சதி- சென்னை பவள விழா மாநாட்டில் அம்பலம்..கேசி பழனிசாமி வார்னிங்!


2026 தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் இருந்து அதிமுகவை அகற்ற திமுகவும் பாஜகவும் இணைந்து சதி செய்து வருவதையே சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பவள விழா மாநாடு அம்பலப்படுத்தி இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். அதிமுக ஒன்றுபடாமல் போனால் 2026 தேர்தலில் திமுக vs பாஜக என்ற நிலைமைதான் உருவாகும் எனவும் கேசி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கமான எக்ஸ்-ல் கேசி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது: நேற்று திமுகவின் பவள விழா நடைபெற்றது, பொதுவாக திமுக மாநாடுகளில் அதிமுகவுக்கு எதிரான தீர்மானங்களும், அறிவிப்புகளும், நிலைப்பாடுகளும் வெளிப்படும். அதேபோல் அதிமுக மாநாடுகளில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாடுகள் வெளிப்படும், ஆனால் நேற்றைய திமுக மாநாட்டில் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கருத்துக்கள் மட்டுமே வெளிப்பட்டது.

“Cool Lip” போன்ற போதை பொருட்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரை அதிகம் புழங்கிக்கொண்டிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருக்கிறது.

அதேபோல் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக 850 போலீஸ் அதிகாரிகள் உள்ளனர் என்று உளவுத்துறை பட்டியல் தயரித்துள்ளது. இதன் உண்மைத்தன்மை என்ன?

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை 10 லட்சம் கோடி முதலீடு ஈர்த்துள்ளது என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையாக எவ்வளவு முதலீடுகள் இதுவரை வந்தடைந்துள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பார்கள் அதுபோல அந்த 10 லட்சம் கோடி ஏட்டில் மட்டும் உள்ளதா நாட்டுக்குள்ள வந்துவிட்டதா என்பது தெரியவில்லை.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திமுக ஆட்சியில் தமிழக அரசாங்கத்தின் கடன் சுமார் 2 லட்சம் கோடி உயர்ந்துள்ளது மற்றும் டாஸ்மாக் வருமானம் கிட்டத்தட்ட சுமார் 2 மடங்கு உயர்ந்துள்ளது.

விடியல் ஆட்சியில் அதிகாலை விடிந்தவுடன் பால் பாக்கெட் கிடைக்கிறதோ இல்லையோ, தமிழகம் முழுவதும் மதுபானம் தாராளமாக கிடைக்கிறது.

இவைகளை மறைத்து உணர்ச்சிவையப்படக் கூடிய சித்தாந்த அரசியல் மூலமாக மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி செய்கிறது. அதேபோல மத்திய பாஜக அரசாங்கமும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. அதிமுகவை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்துகிற பணியை பாஜகவும் திமுகவும் ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறார்கள்.

அதிமுக தொண்டர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பயணிக்கிற அணி வழக்குகளுக்காக திமுகவிடம் அடைக்கலம் தேடியுள்ளதாலும், ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் போன்றோர் பாஜகவிடம் அடைக்கலம் தேடியிருக்கிற காரணத்தாலோ சட்டமன்ற எதிர்க்கட்சியான அதிமுகவை புறக்கணித்து தாங்கள் மட்டுமே திராவிட கட்சி, திராவிட சித்தாந்தங்கள் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று பறைசாற்றுகிறவகையில் இந்துத்துவா, திராவிட அரசியலை முன்னெடுத்துள்ளது. இது அதிமுகவுக்கு மிகவும் ஆபத்தானது.

அதிமுக தொண்டர்கள் அனைத்து மட்டங்களிலும் இதை உணர்ந்து வலிமையான ஒன்றுபட்ட_அதிமுக -வை கட்டமைத்து ஒரு திராவிட சக்தியாக அதிமுகவை நிலைநிறுத்த வேண்டும். வெறும் அறிக்கை அரசியலை மட்டுமே நம்பியியிருக்க கூடாது. இதை செய்ய தவறினால் 2026 தேர்தல் களம் திமுக VS பாஜக என்பதாக அமைந்துவிடும். இவ்வாறு கேசி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
Share on:

3 ஆம் பாலினத்தவர் என்பதால் கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்பத்தை நிராகரிப்பதா? ஹைகோர்ட் அதிரடி


மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிவேதா என்ற மூன்றாம் பாலினத்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடப்பு 2014-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில், மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. எனவே கால்நடை மருத்துவ படிப்புக்கான விளக்க குறிப்பேட்டை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு பிரிவில் மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கால்நடை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை கோரி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டால் போதுமானது எனக் கோரப்பட்டது. இதற்கு மாணவர் சேர்க்கை குழு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை இரு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என மாணவர் சேர்க்கை குழுவுக்கு உத்தரவிட்டார். மேலும், மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என மாணவர் சேர்க்கை குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் முடித்து வைத்தார்.
Share on:

சென்னையில் கோர விபத்து! அரசு பஸ் விழுந்து ஆட்டோ நொறுங்கியது.. டிரைவர் பலி!


சென்னை மதுரவாயல் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநகர பேருந்து சாலையின் பக்கவாட்டு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து விழுந்ததில் சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ நொறுங்கியதில் ஆட்டோ ஓட்டுநர் பலியாகியுள்ளார்.

செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் சென்று கொண்டிருந்தது 104 வழித்தட சென்னை மாநகர பேருந்து. மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சாய்ந்து, சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது.

அப்போது, சர்வீஸ் சாலையில் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், அதன் மீது விழுந்து ஆட்டோவை அப்பளம் போல் நொறுக்கியது பேருந்து. இதில், ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Share on:

அண்ணா: சரித்திரம் படைத்த சாமானியன்!


சுதந்திரத்திற்கு பின் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளே செல்வாக்கு பெற்றிருந்த சமயம் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கி தமிழ்நாட்டில் முதன் முதலில் மாநில கட்சி ஒன்றின் ஆட்சிக்கு வித்திட்டவர் சி.என்.அண்ணாதுரை என்னும் அறிஞர் அண்ணா.

அறிஞர் அண்ணா அவர் காலத்தில் செய்த சாதனைகள் சில

* 1967ல் முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா அதுவரை மெட்ராஸ் என்று இருந்த மாநிலத்தின் பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றி பெயரிட்டார்.

*சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாவதற்கான அரசாணையை நிறைவேற்றினார்.

*நாடு முழுவதும் இந்தி மொழி படிப்பது கட்டாயமாக்கப்பட்டு மும்மொழி கொள்கை அமலில் இருந்தபோது, தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் படித்தால் போதும் என இருமொழி கொள்கையை கொண்டு வந்தார்.

*பேருந்து சேவைகள் அரசுடைமை ஆக்கப்பட்டு போக்குவரத்துக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

*ஏழைகளுக்கு பி.யு.சி வரை இலவச கல்வி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

*கலப்பு திருமணம் செய்து கொள்வோரை ஊக்கப்படுத்த தங்க விருதுகள் வழங்கப்பட்டன.

*1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார்.

*சென்னை கடற்கரை சாலையில் திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், ஔவையார் உள்ளிட்ட தமிழ் சான்றோர்களுக்கு சிலை நிறுவப்பட்டது.

*அரசு அலுவலகங்கள் எந்தவித மத கடவுளர் படங்களும் இல்லாமல் நீக்கப்பட்டது.

*விதவை திருமணம் செய்து கொள்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தார்.

இவை மட்டுமல்லாமல் அண்ணா மறைந்த பின் சென்னையில் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 1.5 கோடி மக்கள் கலந்து கொண்டனர். இன்று வரையிலும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட தலைவரின் இறுதி ஊர்வலமாக அவரது இறப்பும் சாதனையாகவே தொடர்கிறது.
Share on: