பாஜக கூட்டணிக்காக காத்திருக்கும் ஓபிஎஸ் இபிஎஸ்- அதிமுகவுக்கு அவமானம் !!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ பன்னீர் செல்வம் அணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. <br/>இதனால் இரட்டை சிலை சின்னத்துக்கு உரிமை கோரினால் அது முடக்கப்பட வாய்ப்புள்ளது. இது நடந்தால் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடும் சூழல் உருவாகும். இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு முக்கியமானது. இதனால் இருதரப்பும் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். நேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். அதன்பிறகு ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அவரது அணியின் கமலாலயம் சென்று பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்.

இதுபற்றி கேசி பழனிச்சாமி , ‛‛அம்மா காலத்தில், பிரதமரே ஆயினும் போயஸ் கார்டன் வாசலில் காத்திருந்து சந்தித்து சென்ற கம்பீரமான தலைமையை கொண்ட அதிமுகவில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரின் கடைக்கண் பார்வைக்கு முந்தி கொண்டு நிற்கும் சுயநலவாதிகள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினரால் அதிகவிற்கே அவப்பெயர் என தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுக தொண்டர்களே புறக்கணித்து விடுவார்கள். ஜெயலலிதா பாஜகவை புறக்கணித்தவர் “மோடியா லேடியா” என நரேந்திர மோடிக்கு எதிராக செயல்பட்டவர். தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பாஜக கூட்டணிக்காக காத்திக்கொண்டிருப்பது கட்சிக்கே அவப்பெயரை வாங்கி கொடுத்துவிட்டது. சாதிய மதவாதத்தை ஆதரிக்கும் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு அதிமுக தனித்து நின்று தேர்தலை சந்தித்தாலே தொண்டர்கள் வெற்றி பெற செய்வார்கள் .

இந்த தொகுப்பினை வீடியோவடிவில் காண
https://youtu.be/2joGRwAkQ6Y

Share on: