அதிமுகவின் அடுத்தது என்ன என்ற என்ன என்ற தலைப்பில் தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் அதிமுக மாஜி அமைச்சர் கே. சி பழனிசாமி பங்கேற்றார்.விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,2024 பொதுத் தேர்தலில் அதிமுக தலைமை பாஜக அல்லாத கூட்டணியில் போட்டியிட்டால் தான் அதிமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.அதிமுக பாஜக-வை எதிர்க்க வேண்டும்:பாஜக கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் கலத்தை திமுகவிற்கும் பாஜக விற்கும் உரித்தானதாக அமைப்பதற்காக எண்ணி செயல்படுகிறார்கள். ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் வாக்கு வங்கி பாஜகவிற்கு எதிராக உள்ளது.அதனை தலைமை தாங்குவதற்கான பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பதே உண்மை.மேலும் பாஜக கூட்டணியை அதிமுக தவிர்க்க நேர்ந்தால் அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் துரிதமாக செயல்படுத்தப்படும்.எடப்பாடி பழனிசாமி தன் சுயநலத்திற்காக பாஜக-வை பகைத்து கொள்வதற்கு தயாராக இல்லை.அதே சமயம் பாஜகவின் ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைந்த இரட்டை தலைமை கருத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக இல்லை.எடப்பாடி பழனிசாமியை கூட்டணியிலிருந்து விலக்க பாஜக முடிவெடித்ததா?பாஜகவின் நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்தால் பாஜக தனது எதிர்ப்புகளை காட்டும். அதிமுக பொதுச்செயலாளர் ஒற்றை தலைமையில் அதுவும் பழனிசாமி தலைமையில் இயங்குவதே எடப்பாடி பழனிசாமியின் இலக்கு.தனித்து நின்று தேர்தலில் அதிமுக தேர்தலில் வெற்றி காண எடப்பாடி பழனிசாமி திட்டமா:கூட்டணி தவிர்த்து தனித்து நின்றால் அதிமுக வெற்றி பெறும்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் பாஜக கூட்டணியை ஆதரிப்பதில்லை.ஆனால் பாஜக-வை எதிர்த்து தனித்து போட்டியிட எடப்பாடி பழனிசாமியிடம் பலமில்லை.பாஜக-வை எதிர்ப்பதற்கான யுக்தியை கையாளுவதற்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவில் சரியான நபர் யாருமில்லை.அதிமுகவில் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்குமேயானால் தொண்டர்களிடையே மனச்சோர்வை ஏற்படுத்தும்.எடப்பாடி பழனிசாமி தலைமை பாஜகவை எதிர்க்க வேண்டுமா திமுகவை எதிர்க்க வேண்டுமா என முதலில் எதிரியை தீர்மானிக்க வேண்டும் இல்லையெனில் கட்சியில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி விடுவார்கள்.ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம் வாக்குகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வாக்குகள் அல்ல இரட்டை இலை சின்னத்திற்கு கிடைத்த வாக்குகள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை,தொண்டர்களை நம்பியிருக்கும் தலைமை.அதிமுக கொள்கையே கொடிபிடிக்கும் தொண்டன் முடிவெடிப்பான் என்பது தான்.அதிமுக சின்னம் முடக்கப்படுமா? பாஜக-வை எதிர்த்து போட்டியிட்டால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கபட்டுவிடும்.பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தாலும் பாஜக அதிக இடங்களை ஆக்கிரமிக்கும் என முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி கூறியுள்ளார்.