அம்மா அவர்களால் ஒப்படைக்கபட்ட கட்சி நிதியை எடப்பாடி பழனிசாமி அபகரித்து விட்டார் !!

சசிகலா அவர்கள் வெளியேற்றபட்ட பிறகு 2012இல் அம்மா அவர்கள் மறைவு வரை கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக பெறப்பட்ட நிதியை, எடப்பாடி பழனிசாமியிடம் அம்மா அவர்களால் ஒப்படைக்கபட்டு இருந்தது. அந்த நிதி என்பது தேர்தல் சமயங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த கட்சி நிதியை எடப்பாடி பழனிசாமி அபகரித்து விட்டார் அதனை தனது சொந்த செலவிற்காக பயன்படுத்திவிட்டார் என்பதே எனது குற்றச்சாட்டு.

அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு அண்ணாதிமுக கட்சியினுடைய கணக்கிலோ தேர்தல் செலவிற்கோ அல்லது தொண்டர்களுக்கோ பயன்படுத்த படவில்லை என்பது தான் குற்றச்சாட்டு அதனை ஜே.சி.டி பிரபாகரன் என்பவறின் மூலமாக வெளி உலகிற்கு சொல்ல ஓ.பி.எஸ் நினைக்கிறார் என்பது இதன் மூலன் அறிந்து கொள்ள முடிகிறது.

Share on: