இ.பி.எஸ் & ஓ.பி.எஸ் இருவருக்கும் அதிமுக வளர்ச்சி பற்றி துளி கூட அக்கறையில்லை

பத்திரிகையாளர் சந்திப்பில் திரு கே.சி.பழனிசாமி அவர்கள் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் .இருவரும் அதிமுக தொண்டர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். AIADMK இந்த இருவருக்கும் அதிமுக வளர்ச்சி பற்றி துளி கூட அக்கறையில்லை என்றும்,அதிமுக வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினால் இருவரும் மாறிமாறி மேலமுறையீடு மட்டுமே செய்து வருகின்றனர் .இதனால் அதிமுக கட்சியும்,சின்னமும், கொடியும் தேர்தல் ஆணையத்தால் வருகின்ற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு முடக்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது, AIADMK மேலும் பொதுக்குழு உறுப்பினர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நீதிபதியின் தீர்ப்பு தவறானது .எனவே இரு நீதிபதியின் தீர்ப்பிலும் முரண்பாடு உள்ளது ,இப்படி இருக்கும் பொழுது இருவரும் மாறிமாறி நீதிமன்றத்திற்கு செல்வது என்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் .மத்திய பாஜக அரசு தமிழக அரசை வஞ்சிக்கின்றது ,அதை பற்றி எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பேசாமல் இருப்பது தொண்டர்களிடத்தில் வெறுப்பை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். AIADMK மேலும் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிளவுபட்டதால் பாஜக மற்றும் திமுக கட்சிக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது என்றும் திரு .கே.சி.பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார் .அதிமுக உறுப்பினர் அட்டை வழங்குவதில் கூட இருவரும் உள்ள மோதல் காரணமாக தங்களுக்கு யார் ஓட்டு போடுபவர்களை மட்டும் எடுத்து அவர்களுக்கு மட்டும் உறுப்பினர் அட்டைகளை வழங்கிக்கொண்டுஇருக்கின்றனர் .அதனால் ஒன்றரை கோடி தொண்டர்களாக இருந்த அண்ணாதிமுக தொண்டர்களை வெறும் 10 முதல் 15 லட்சத்திற்குள் சுருக்குகின்ற செயலை இவர்கள் இருவரும் செய்து கொண்டு இருக்கின்றனர் .

Share on: