
தமிழ் நிறம் சேனலில் “அரசியல் சடுகுடு” நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே. சி பழனிசாமி பங்கேற்று தற்போது உள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்த பார்வையை பேசியியுள்ளார். விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதித்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு: எடப்பாடி பழனிசாமி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒற்றை தலைமையை முன்வைத்து பாஜகவிடம் மன்றாடி கொண்டிருக்கிறார்.அவர் எண்ணியபடி, ஒற்றை தலைமையை பேசி தீர்த்து வைக்காமல் போனால் பாஜகவை எதிர்க்க எடப்பாடி பழனிசாமி துணிவார். பாஜக எதிர்ப்பு என்பது அதிமுக கொள்கையின்படி அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் உண்டு.அதனை எடப்பாடி பழனிசாமி பின்தொடர்வது என்பது பாஜக தனக்கு ஆதரவாக இருக்கிறாதா அல்லது எதிராக செயல்படுகிறதா என்பதில் தான் உள்ளது. ஒற்றை தலைமையை முன்வைத்தால் மட்டும் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொள்கைகளை பின்பற்றி செயல்படுகிறார் என்று கூறுவது என்பது தவறு. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அரசியலை முன்னெடுக்க வேண்டும்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பினை தெரிவிக்காமல் அவரது அணியினர் ஆதரவு தருவதாக கூறியிருப்பது பாஜக விற்கு அடிபணிவதை அப்பட்டமாக கூறுகிறது. பன்னீர்செல்வம் பொதுக்குழு நடத்துகிறாரா? ஓ. பன்னீர்செல்வம் முதலில் தனது அணியினரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.ஆரம்பகாலத்தில் இருந்து பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருந்து வந்தவர்கள், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு தாவி வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினரை சாதிய அமைப்பு போல நடத்தப்படுவதாக வும்,ஜனநாயக முறைப்படி கட்சி நடத்தப்படவில்லை எனவும் அவரது அணியில் இருந்து வெளியேறியவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.முதலில் தனக்கு ஆதரவாக ஒரு அணியை திரட்டி விட்டு பொதுக்குழுவை திரட்ட வேண்டும் என கூறுகிறார் கே. சி. பழனிசாமி. திமுகவை எதிர்க்க அதிமுக ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் தினகரன்:
டிடிவி தினகரன் அதிமுகவில் இணைந்து செயல்பட இன்னும் கட்சி பணிகள் பலவற்றை செய்ய வேண்டும்.டிடிவி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இடைச்செருகலாக தான் வந்தார்.டிடிவி தினகரனை சேரத்து கொள்வதற்கு என்பது நடக்காத ஒன்று.
கட்சியிலிருந்து வெளியேற்றபட்டவர்கள் மீண்டும் இணைய கூடாது-ஈபிஎஸ்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்சி செயல்பட விரும்புகிறவர்களை மட்டும் தன்னுடன் வைத்து கொள்வார். தனக்கு எதிரான நிலைப்பாட்டை யார் எடுத்தாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வெளியேற்றபடுவார். மீண்டும் அந்நபர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்படுவேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே கட்சியில் இணைத்து கொள்வார். அரசியலில் கொள்கை சார்ந்து தான் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தனிநபர் சுயநலன் சார்ந்து முடிவுகள் எடுக்கப்பட கூடாது. ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக பாஜகவை ஆதரித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி பாஜவை மறைமுகமாக ஆதரிக்கிறார்.
பொதுக்குழு வழக்கு அமர்வு மாற்றப்பட்டுள்ளது -விரைவில் தீர்ப்பு வருமா?
பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு புதிய அமர்விற்கு மாற்றப்பட்டால் அதே நாளில் விசாரணை நடக்காது. புதிய வழக்கு என்றால் பிரச்சனை இல்லை. பழைய வழக்கு என்றால் ஏற்கனவே வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதிகள் படிக்க வேண்டும். வழக்கின் தன்மையை உணர்ந்து முடிவு வர நாளாகும்.
எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு எதிராக செயல்பட துவங்கும் போது, அவரிடம் பணமும் இருக்காது, தங்கமணி வேலுமணி போன்றோரும் இருக்க மாட்டார்கள்.அதிமுக எந்தெந்த கட்சிகளுடன் மெகா கூட்டணி வைக்கும்: பாஜக கட்சி மற்றும் பாஜகவுடன் கூட்டணி உள்ள கட்சிகளோடு அதிமுக கூட்டணி வைத்து கொண்டால் நிச்சயம் தமிழக மக்கள் அதிமுகவை புறந்தள்ளி விடுவார்கள்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப்படி தொண்டர்களால் ஒற்றை தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.பாஜக திமுக இரண்டையும் எதிர்த்து தேர்தலில் தனித்து போட்டியிட்டாலே அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் எம்பி கே. சி பழனிசாமி கூறினார்.
கே.சி.பழனிசாமியின் முழு நேர்காணலை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்!
https://youtu.be/ZZZVGfcklTk
Few casino formats are as transparent as video poker. The pay table is printed on the screen, the maths is fully knowable, and correct play is a matter of following a chart rather than guessing.
Why Two Identical Games Can Differ
The classic nine six Jacks or Better pay table returns above ninety nine percent with optimal play, while reduced versions drop noticeably for the same game name. Players checking which pay tables an operator offers can Rivo Casino and compare variants side by side. Strategy charts exist for every major version and are straightforward to learn.
| Variant | Optimal Return |
|---|---|
| Jacks or Better 9/6 | 99.5% |
| Deuces Wild | 98.9% |
| Jacks or Better 8/5 | 97.3% |
- Look up the full house and flush payouts first
- Learn one variant properly rather than several loosely
Because every decision has a demonstrably correct answer, video poker suits players who enjoy getting things right. The edge remains small but real even with perfect play. Stick to one variant, follow its chart, and think of the low margin as longer playing time rather than profit.
குழுவில் இணைய