தொண்டர்களின் விருப்பம் என்பது யாதெனில் கே.சி.பழனிசாமி அவர்களின் தலைமையில் அண்ணா திமுக வரவேண்டும் என்பதே பலபேரது விருப்பமாக உள்ளது

தொண்டர்களின் விருப்பம் என்பது யாதெனில் கே.சி.பழனிசாமி அவர்களின் தலைமையில் அண்ணா திமுக வரவேண்டும் என்பதே பலபேரது விருப்பமாக உள்ளது .நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை சிறு சிறு குழுக்களாக பிரிவினையை ஏற்படுத்தி அதிமுகவை சுருக்க முயற்சிக்கின்றது பாஜக.
அவர்களின் தந்திரத்தை அறியாமல் இ பி எஸ் , ஓ பி எஸ் இருவரும் இவர்களுக்குள் போட்டியிட்டு கொண்டுஇருக்கிறார்கள் .வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் பிஜேபியும் ,திமுகவும் தயார்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் .அண்ணாமலை அவர்கள் சில பேட்டிகளில் 20 முதல் 25 இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கூறியிருக்கிறார் .அதில் குறைந்தது 10 இடங்களிலாவது பிஜேபி உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள் என்கின்ற அளவில் கூறுகிறார்.அதன் அடிப்படையிலிலேயே அவர்கள் தமிழ்நாட்டு அரசியலை கட்டமைத்து கொண்டு இருக்கின்றனர் .அனைத்து அண்ணா திமுக தொண்டர்களும் ஒன்று சேர்ந்து பிஜேபி கூட்டணி இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்பது தான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது . அதன்பிறகு சட்டமன்ற தேர்தல் இ பி எஸ் , ஓ பி எஸ் இருவரும் சுமூகமாக உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு நின்றாலே அண்ணாதிமுகவின் வெற்றி உறுதியாகிவிடும் என்பது அனைத்து தொண்டர்களின் விருப்பமாக பார்க்கப்படுகிறது .அப்படி செய்தால் நிச்சயமாக ஆளுகின்ற வாய்ப்பை அண்ணாதிமுக பெற்றெடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது .
Share on: