
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அ.தி.மு.க., என்ற கட்சியை துவக்கியபோது, அதன் அடிப்படை கொள்கை தி.மு.க.வுக்கு நேர்மறையானது. அக்கட்சியின் தற்போதைய தலைமை ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) ஆகியோர் கூட்டணியை & விதிமுறையை பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை திமுக கூட்டணிக் கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருக்கும் அதே வேளையில், அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதன் முக்கிய கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பாஜகவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டது அதில் அதிமுகவுக்கு எந்தப் பலனையும் தரவில்லை, அதேசமயம் பாஜக தனித்து நின்று ஆதாயம் அடைந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், அதிமுக வெறும் 25.15 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. சுயேச்சையாகப் போட்டியிடத் தேர்ந்தெடுத்த அதன் மற்ற கூட்டணிக் கட்சிகள் ஒற்றை இலக்கத்தில் வாக்குப் பங்கைப் பெற்றன – பாஜக 5.41 சதவீதம், பாமக 1.51 சதவீதம் மற்றும் தேமுதிக 0.77 சதவீதம்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
அதிமுக வேட்பாளர்களுக்கே கட்சி நிதி சரிவரச் சென்று சேரவில்லையா?

அ.தி.மு.க. கட்சி தொண்டர்களோடு எனது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர்கள் கூறியது , பல இடங்களில் பணத்தைப் பெற்றுக்கொண்டு சீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது , பலபேருக்குக் கட்சியிலிருந்து எந்த விதமான நிதி உதவியும் வழங்கப்படவில்லை மற்றும் தவறான தேர்தல் வியூகங்கள், இவர்கள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி இல்லை என்று அறிவித்த அன்று இருந்த உற்சாகம் அடுத்த 24மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம் என்ற அறிவிப்பால் மறைந்தது.
E.P.S மற்றும் O.P.S என்ன சத்திய பிரமாணம் செய்தாலும் மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் , இந்த இயக்கம் எம் .ஜி .ஆர் காலத்திலிருந்த முன்னோடிகளை முன்னிறுத்தப்பட்டு வழிநடத்தப்பட வேண்டும் . நகரச்செயலாளர் முதல் ஒன்றியச்செயலாளர், மாவட்டச்செயலாளர் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தலைமை வரை தொண்டர்களிடத்தில் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் இவ்வாறு செயல்படும்பொழுது தான் வலிமையான அ.தி.மு.க.உருவாகும்.
இன்னும் சம்பிரதாய நடைமுறைகளை நாம் செய்து கொண்டிருப்பின் இரட்டை இலையைப் பார்த்து வாக்களிப்பவர்கள் என்றென்றும் நம்மை ஆதரிப்பார்கள்! கண்டிப்பாக இந்த இருவரது தலைமை அகற்றப்படும்!
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
74வது பிறந்த தினம்! மாண்புமிகு இதய தெய்வம் அம்மா
காவல்துறையினர் சற்று மரியாதையாக நடத்தியிருக்கலாம்

திரு.ஜெயக்குமார் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் காவல்துறையினர் அவரை சற்று மரியாதையாக நடத்தியிருக்கலாம் உடை மாற்றி வரும் வரை அவகாசம் அளித்துக் கைதுசெய்திருக்கலாம், காவல்துறையினரின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கக்கூடியது.
அரசியலில் அதிக மக்களின் நன்மதிப்பையும் , நற்பெயரையும் , இவர் நேர்மையானவர், நாணயமானவர், சட்டப்படி நடந்துகொள்கின்றவர் என்ற அபிமானம் தான் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேவை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
S.P.வேலுமணியின் தர்ணா போராட்டம் ! கோவையில் வாக்கு சதவிகிதம் குறைய காரணமாக அமைந்ததா?

கோவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 60-சதவீதம் வெற்றி பெரும், திமுக 40-சதவீதம் தான் வெற்றி பெரும் எனினும் அன்று மதியம் (19.02.2022) திரு.வேலுமணி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு, வெளிஊர்களில் இருந்து ஆட்களை அழைத்துவந்து பணப்பட்டுவாடா செய்கிறார்கள், கலவரத்திற்கு திட்டமிட்டுள்ளார்கள், எங்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு வேண்டும் என்று கூறுவது சட்டம் ஒழுங்கிற்கு எதிரான செயல், ஆயினும் அவ்வாரு சம்பவங்கள் நடக்கையில் தி.மு.க வினரும் அ.தி.மு.க’வினரும் அதனை எதிர்கொண்டு வெற்றிப்பெறுகிற செயலில் ஈடுபட்டிருப்பார்கள்.
அன்று திரு .வேலுமணி வீட்டில் இருந்திருந்தாலே அந்தந்த வார்டுகளில் உள்ள வேட்பாளர்கள் அவர்களின் பணிகளை சிறப்பாக செய்திருப்பார்கள் அதற்கு மாறாக இவர் அனைவரையும் பயமுறுத்தும் வகையில் அ.தி.மு.க வினரை நாம் ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ நடப்பது நடக்கட்டும் என்ற என்னதை உருவாகிவிட்டார்.
தலைமை பொறுப்பிலிருந்து இவ் இயக்கத்தை வழிநடத்துபவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கருத்துக்களும் கொள்கைகளும் , திராவிட இயக்கத்தின் வரலாரும் தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
என்ன காரணங்களை முன்வைத்து மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பார்கள்?

மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க வலிமையாக இருக்கிறது அதில் மாற்றுக்கருத்து இல்லை. என்னதான் ஆளும்கட்சியாக தி.மு.க இருந்தாலும் கூட, என்னதான் பணபலம் பிரயோகிக்கப்பட்டாலும் கூட, அ.தி.மு.கவின் வெற்றி வாய்ப்புகள் மேற்கு மாவட்டங்களில் அதிகமாகத் தான் இருக்கிறது.
ஆனால் அதில் இரண்டு விசயங்கள் சரிவை ஏற்படுத்துகின்றன. ஒன்று நேற்று(தேதி) வேலுமணி செய்த தவறான செயல்கள் சரிவைக் கொடுத்திருக்கிறது மற்றொன்று இப்பொழுது நாம் உள்ளூரில் இருக்கும் பிரச்சனைகளைப் பேசவேண்டும் குறிப்பாகக் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் பாலம் கட்டும் பனி பத்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.சுமார் மூன்று மாதங்களில் முடிவடையவேண்டிய பனி பத்து மாதங்கள் ஆகியும் முடிவடையாமல் இருக்கிறது.
யாரேனும் அதில் தவறு செய்திருந்தால் அல்லது அதில் ஊழல் நடைபெற்றிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அல்லது கைது செய்யுங்கள். ஆனால் அந்த பனி பாதியில் நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது அது ஒரு பெரிய குறையாக இருக்கிறது. அதிமுக வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்ற பகுதிகளில் திரு எடப்பாடி பழனிசாமி தேசிய அரசியல் பேசுகின்றார். திரு ஸ்டாலின் அவர்கள் தந்திரமாக உள்ளூர் பிரச்சனைகளைப் பேசாமல் தேசிய அரசியல் பா.ஜ.கவிற்கு எதிரான வாக்கு என்று கட்டமைத்தார் திரு எடப்பாடி பழனிசாமி விசயம் புரியாமல் “மேற்கு வங்கத்தில் நடந்தது போல நாங்கள் சட்டமன்றத்தை முடக்கிவிடுவோம்” “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்கின்ற அளவில் தன் பதிலையும் பதிவு செய்துவிட்டார் அது தேவையற்றது.
உள்ளூரில் அந்தந்த பகுதிகளில் என்ன என்ன பிரச்சனைகள் என்று முன்னிறுத்தினாலே அ.தி.மு.க ஒரு கணிசமான வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பு மேற்கு மாவட்டங்களில் இருக்கிறது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவது எது?

Twitter’ல் வாக்களிக்க இந்த இணைப்பைக் கிளிக் செய்க:
https://twitter.com/KCPalanisamy1/status/1494561232183242752?s=20&t=I6XxMhsoQwZjU8P5URKLyw
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வேடமிட்டவரை தன் காலில் விழ வைத்த எடப்பாடி கட்சி தலைமைக்கு தகுதியானவரா?

கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழ வைத்தது சரியா? இன்றளவும் அதிமுகவின் அடிநாதமாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவரைப் போலவே வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழுவதை கண்டு ரசிப்பது கட்சிக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம்!
ஒரு கடவுளுடைய படம் கீழே இருக்கிறது நாம் அதை வெறும் படம் தான் என்று அப்படியே விட்டுவிடுவோமா அதற்குரிய மரியாதையை கொடுக்கிறோம் அல்லவா அது போல அந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வேடமிட்டவர் ஒரு தொண்டர் அவர் ஒரு ஆர்வத்தில் புரட்சித்தலைவர் அல்லது எம்ஜிஆர் மீது உள்ள பற்றின் காரணமாக அல்லது மக்களைக் கவரவேண்டும் என்ற ஆர்வத்திலோ அந்த வேடமிட்டுக்கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம் குறைந்தபட்ச அறிவு உள்ளவனாக இருந்தால் அந்த இடத்தில் புரட்சித்தலைவர் வேடமிட்டு காலில் விழுவது சரி அல்ல என்று அப்போதே தடுத்து இருக்க வேண்டும். அல்லது எதிர்பாராமல் அவர் விழுந்துவிடுகிறார் என்றால் அதன் பின் எடப்பாடி பேசும்பொழுது இதுபோன்ற தொண்டர் தவறு செய்துவிட்டார் அதற்காக நான் வருத்தத்தை தெரிவிக்கிறேன் இது போன்ற காரியங்களை தயவு செய்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வேடமிட்டு செய்யாதீர்கள் அவர் அ.தி.மு.க தொண்டர்களுக்கு இன்றும் கடவுளாக விளங்கிக்கொண்டு இருப்பவர் அதனால் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்று சொல்லிருந்தால் அவர் தலைவனுக்கு தகுதியானவரா? காலில் விழுந்தவனை நின்று ஆசிர்வதிப்பவன் தலைவனுக்கு தகுதியானவரா?
எந்த ஒரு அதிமுக தொண்டனும் இது சரி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி என்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொள்கைகளுக்கும் அம்மா அவர்களின் கொள்கைகளுக்கும் அ.தி.மு.கவினுடைய திராவிட சித்தாந்தங்களுக்கு விலகி பா.ஜ.க வழியில் RSS இன் உண்மை தொண்டர்களாக மோடியின் அடிமைகளாக அமித்ஷாவின் கட்டளைக்கு கீழ்ப்படிபவர்களாக அண்ணாமலையை விட மிக சிறந்த பா.ஜ.க தலைவர்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எம்ஜிஆர் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி அற்றவர்கள்! கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
அண்ணா வழியில் பயணிக்கிறார்களா? அல்லது அண்ணாமலை வழியில் பயணிக்கிறார்களா ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் கட்சி எது?

தேர்தலின் போது மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தான். எந்த கட்சி எதை வைத்து பிரச்சாரம் செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வம் அரசியல் விமர்சகர்களிடமும், ஆர்வலர்களிடமும் மேலோங்கி வருகிறது. அந்த வகையில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க., தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல்களை முன்னெடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதேபோல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தும், அதில் தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல்கள் குறித்தும் பிரச்சாரத்தில் ஈடுபடும். பா.ஜ.க.வை பொறுத்தவரை தி.மு.க.வை விமர்சிக்கும் ஆனால் அ.தி.மு.க.வை விமர்சித்து வாக்குகள் சேகரிக்குமா என்பதில் சந்தேகம் தான். ஏனெனில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளது. அ.தி.மு.க. வாக்கு சேகரிப்பின் போது தி.மு.க.வை மட்டும் விமர்சிக்காமல், பா.ஜ.க. மற்றும் மத்திய அரசின் மீதான மக்களின் எதிர்மறையான விமர்சனங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் பட்சத்தில் அ.தி.மு.க. மக்கள் ஆதரவை பெறும். மாறாக பா.ஜ.க.வை ஆதரித்தால் மக்கள் ஆதரவை இழப்பதோடு தேர்தலில் தோல்வியையும் சந்திக்கக் கூடும்.

குழுவில் இணைய