அண்ணா வழியில் பயணிக்கிறார்களா? அல்லது அண்ணாமலை வழியில் பயணிக்கிறார்களா ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.?

அண்ணா வழியில் பயணிக்கிறார்களா? அல்லது அண்ணாமலை வழியில் பயணிக்கிறார்களா ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.? புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்‍னெடுத்த நீட் எதிர்ப்பு போராட்டம், இன்று அதே கருத்‍தை வலியுறுத்தி நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்‍தை பா.ஜ.க.வழியில் புறக்கணித்தது சரியா? உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் பா.ஜ.க.வை எதிர்த்து களம் காணும் போது, பா.ஜ.க.வழியில் அ.தி.மு.க என்பது முழு‍மையாக ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தங்களது அடிமைத்தனத்திலிருந்து வெளி‍யேறவில்லை என்பதைக் காட்டுகிறதா? களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் எதிர்த்து அல்லவா நாம் வெற்றி காண வேண்டும். நீட் விவகாரத்தில் தி.மு.க., மற்றும் பா.ஜ.க.வின் தவறுகளை முன்னிறுத்தி, நீட் விலக்கு பெற அம்மா எடுத்த முயற்சிகள், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு போன்றவற்‍றை முன்னிறுத்தி ஆளச் சிறந்த கட்சி அ.தி.மு.க. என்று பட்டியலிடுவது தானே அ.தி.மு.க. வேட்பாளர்களின் கள வெற்றிக்கும், அ.தி.மு.க.வின் எதிர்காலத்திற்கும், மீண்டும் ஆளுகிற வாய்ப்‍பை அ.தி.மு.க.விற்கு பெற்றுத்தருவதற்கும் சரியான முடிவாக இருக்கும். ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். செய்கிற தவறால் தேர்தல் களம் பா.ஜ.க. v/s தி.மு.க. என்ற இந்துத்துவா, திராவிட கருத்தியலாகத் தேர்தல் களம் அமைந்துவிடாதா? தவறான தலைவர்களைக் கொண்டிருந்தாலும், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. மீதான எதிர்ப்பில் என்‍றென்றும் ஒவ்‍வொரு அண்ணா தி.மு.க. தொண்டனும் உறுதியோடு இருக்கிறான். தொண்டர்களின் அந்த எண்ணத்‍தை பிரதிபலிக்காத தலை‍மை, விரைவில் புறக்கணிக்கப்படும் என்கிற உறுதியில் களம் காணும் அ.தி.மு.க.வேட்பாளர்கள்!
Share on: