நெடுஞ்சாலையில் மடக்கிய போலீஸ்.. திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி சிக்கியது எப்படி?


திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் சட்ட விரோத பணபரிமாற்ற புகார்களில் சிக்கும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஆளும் மாநிலங்களில் அரசியல் பழிவாங்கலுக்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

அந்த வகையில், டெல்லி, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்களில் பல்வேறு வழக்குகளின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர். அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் குவாரி விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

ரூ.20 லட்சம் லஞ்சம்: இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல திண்டுக்கல் மாவட்டத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தி இருந்தனர்.

தற்போது மணல் விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தினம் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுதலை செய்ய ரூ3 கோடி லஞ்சம் வேண்டும் என்று அமலாக்கத்துறையில் பணி செய்வதாக கூறிக் கொண்ட அங்கித் திவாரி என்பவர் கேட்டுள்ளார். இதில் முதல் கட்டமாக ரூ20 லட்சம் தர ஒப்புக் கொண்டார் டாக்டர் சுரேஷ் பாபு. கடந்த மாதம் ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டார் அங்கித் திவாரி.

ரசாயனம் தடவிய பணம்: ஆனால் மேலும் ரூ31 லட்சம் தந்தாக வேண்டும் என டாக்டர் சுரேஷ் பாபுவை அங்கித் திவாரி மிரட்டி இருக்கிறார். இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கித் திவாரியிடம் கொடுக்க சுரேஷ் பாபுவுக்கு அறுவுறுத்தியுள்ளனர்.

இதன்படியே டாக்டர் சுரேஷ் பாபுவும், ரசாயனம் தடயவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார். மதுரை நெடுஞ்சாலையில் வைத்து சுரேஷ் பாபுவிடம் ரூ.31 லட்சம் வாங்கிக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அங்கித் திவாரி, தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதன்படியே டாக்டர் சுரேஷ் பாபுவும், ரசாயனம் தடயவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார். மதுரை நெடுஞ்சாலையில் வைத்து சுரேஷ் பாபுவிடம் ரூ.31 லட்சம் வாங்கிக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அங்கித் திவாரி, தப்பி ஓட முயன்றுள்ளார்.
Share on:

டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலை புயல்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!


தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது.

இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி வரும் 4ஆம் தேதி அதிகாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிக்கு இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்கள் படி, நவம்பர் 30ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்யாவிட்டாலும், மாலை நேரம் முதல் மிக கன மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 1ம்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2ம் தேதி கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
Share on:

கோவை நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – ஏ.சி. வென்டிலேட்டர் வழியே நுழைந்தது எப்படி?


கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடையில், ‘ஏசி வென்டிலேட்டர்’ குழாய் வழியாக புகுந்த மர்ம நபர் 200 பவுன் அளவுக்கான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

கோவை மாநகரின் முக்கிய வணிகப்பகுதியான காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் அதிக அளவிலான நகைக்கடைகள், ஆடை உள்பட பல கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்தப் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடை அமைந்துள்ளது.

இன்று காலை 9:30 மணிக்கு பணியாளர்கள் கடையை திறந்து பார்த்த போது, முதல் மற்றும் இரண்டாவது தளத்தில், ரேக்குகளில் அடுக்கி வைக்கப்படிருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், காட்டூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கைரேகை நிபுணர்களை வைத்தும், மோப்பநாய் வில்மாவை வரவழைத்தும் சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர்.
Share on:

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்! கேசி பழனிசாமி வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!


அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்ட்ரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவதூறு வழக்கின் விசாரணையைத் தொடர உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்ட விரோதமாகப் பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னை பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் தனக்கும், தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமியை அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் வழக்கைத் தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றபோது, கே.சி.பழனிச்சாமி தரப்பில் அவதூறு கருத்திற்கான அனைத்து ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தவறானது என வாதிடப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியிலிருந்து கே.சி.பழனிசாமியை நீக்கியதாகவும், அதன்பின்னர் கட்சி தொடர்பான அவரது செயல்பாடுகளைத் தடுக்கவே வழக்கு தொடர்ந்ததாகவும், அதில் தெரிவித்த கருத்துகள் அவதூறானவை இல்லை என வாதிடப்பட்டது.

இதையடுத்து, கட்சியில் இருந்து உறுப்பினர் நீக்கம் தொடர்பான நடைமுறைகளையும், கே.சி.பழனிசாமியை நீக்கியது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு மற்றும் கே.சி.பழனிசாமிக்கு எதிரான ஆதாரங்கள் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அவதூறு வழக்கை ரத்து செய்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
Share on:

“ரூ.4500 கோடி!” சென்னை உயர்நீதிமன்றத்தில் மணல் குவாரி வழக்கில் அமலாக்க துறை பரபரப்பு குற்றச்சாட்டு!


சென்னை: சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை சில பரபர வாதங்களை முன்வைத்தது.

கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடுகளில் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதில் ரூ.12.82 கோடி ரொக்கம், 1,024 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருந்தது.

அதைத் தொடர்ந்து நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதற்கிடையே கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் 5 மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் அமலாக்கத் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து, வரம்பு மீறி சோதனை நடத்தி வருவதாகவும் மாநில நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசின் கைப்பாவையாக உள்நோக்கத்துடன் அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும், முக்கியமாகச் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கனிமவளம் சேர்க்கப்படவில்லை என்றும் அப்படியிருக்கும் போது, மாவட்ட ஆட்சியர்களுக்குச் சம்மன் அனுப்பவே அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், அதிகார வரம்பை மீறியும் வகையிலும் மாநில அரசு அதிகாரிகளைத் துன்புறுத்தும் நோக்கிலும் இந்த சம்மனை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்றும் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் வாதிட்டார்.
Share on:

எம்ஜிஆர் தனிக்கட்சி துவங்காமல் இருந்திருந்தால்- கே.சி.பழனிசாமி


திமுகவிற்கு மாற்று பாஜக என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவது அதை தகர்த்து திமுகவிற்கு மாற்று அதிமுக அதிமுகவிற்கு மாற்று திமுக மற்ற கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
”திமுகவை வளர்த்தது எம்ஜிஆர். திமுகவில் இருந்து வெளியேறி தனி கட்சி துவங்கி தமிழகத்தில் திமுக VS அதிமுக என்று இருதுருவ அரசியலை கட்டமைத்ததும் எம்ஜிஆர் .இதன் மூலம் திராவிட கலாச்சாரம் வலுப்பெற்றது. ஒருவேளை எம்ஜிஆர் தனிக்கட்சி துவங்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தேசிய கட்சிகள் நுழைந்திருக்கும்.

அதேபோல் நிகழ்காலத்திலும் திமுக VS அதிமுக என்று இருதுருவ அரசியலை தாங்கி பிடிக்க வேண்டும். இதில் அதிமுக பலவீனமாக இருந்தால் பாஜக எனும் மதவாத சக்தி தமிழகத்தில் ஊடுருவிவிடும். இதை தடுக்க அதிமுக வலிமையாக இருப்பது மிக அவசியம்.

நங்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை எதிர்க்கிறோம் என்பது உதட்டளவில் மட்டும் இல்லாமல் செயலளவில் கடுமையாக அதிமுக பாஜகவை எதிர்த்து களமிறங்க வேண்டும். இன்றைய ஆபத்து திமுகவிற்கு மாற்று பாஜக என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவது அதை தகர்த்து திமுகவிற்கு மாற்று அதிமுக அதிமுகவிற்கு மாற்று திமுக மற்ற கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் ”என்று தெரிவித்துள்ளார்.
Share on:

10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இ.டி சம்மன்: எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு வழக்கு!


மணல் முறைகேடு புகாரில் 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இருப்பினும், ஆற்று மணல் விற்பனையில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையை தொடர்ந்து, 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதனையடுத்து, கடந்த திங்கள்கிழமை தமிழக நீர்வளத்துறையின் முதன்மை பொறியாளர் முத்தையா சில முக்கிய ஆவணங்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரவரம்பு இல்லை என்றும், மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை வருகிற திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தனர்.
Share on:

செய்யாறு சிப்காட்: நிலத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு உண்மையில் என்ன நடந்தது?


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற் பேட்டைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். எதிர்த்த விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது, அப்பகுதியினரிடம் கூடுதலான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“எனக்கு 55 வயதாகிறது. எனது மகன் மாற்றுத் திறனாளி. என்னிடம் இருக்கும் மூன்றரை ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த நிலம் நான்காவது தலைமுறையாக என்னிடம் இருக்கிறது. இதை எடுத்துக்கொண்டு, பணத்தைக் கொடுக்கிறேன்; வேலை கொடுக்கிறேன் என்கிறார்கள்.

இந்த வயதில் எனக்கு என்ன வேலை கொடுப்பார்கள்? என் மகனுக்கு என்ன வேலை கொடுப்பார்கள்? எங்களை நிம்மதியாகவிட்டால், நாங்கள் பாட்டுக்கு பிழைத்துக் கொள்வோமே?” என்கிறார் செய்யாறில் உள்ள குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான கார்த்திகேயன்.

கார்த்திகேயன் பேசும்போதே அவரது குரலில் ஆவேசம் தென்படுகிறது. அவருக்கு மட்டுமல்ல, அந்தப் பகுதியில் உள்ள எல்லா விவசாயிகளுமே கொந்தளித்துத்துதான் போயிருக்கிறார்கள்.

விவசாய நிலங்களை தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்துவதாக அறிவித்தது, அதற்கு எதிரான போராட்டத்தை முடக்கியது, போராட்டத்தில் ஈடுபட்ட சிலரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தது என தமிழ்நாடு அரசு தங்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை ஏவுவதாக நினைக்கிறார்கள் அந்தப் பகுதி விவசாயிகள்.
Share on:

திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமான வரித் துறை சோதனை!


திருவண்ணாமலை: தமிழக அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக் கல்லூரியில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். மருத்துவமனை அலுவலகத்துக்கு வந்த 6 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவுடன் தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் நவ.9ம் தேதி வரையிலான 6 நாட்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் தி.நகரில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம், காசா கிராண்ட் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 6 நாட்ளாக சோதனை நடந்தது. இதேபோல,பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள், ஃபைனான்சியர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. 6 நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று நிறைவடைந்ததாகவும், இதில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள், பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெறும் இந்த சோதனையில் விடுபட்ட ஆவணங்கள் அல்லது ஏற்கெனவே கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
Share on:

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையில் விதிகள் மாறுகிறதா? கோட்டையை நெருக்கிய கோரிக்கைகள்!


மாற்றுத்திறனாளிகளின், குடும்ப தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள், தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டு உள்ளன.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான, மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்திருப்பதால், அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் உயிரிழந்தவர்கள், தகுதியற்றவர்கள் என ஒவ்வொன்றாக கண்டறியப்பட்டு, இறுதியில், 8,833 பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அதேபோல, விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் குறித்து, பெண்களிடம் அது சரியான தகவலா? என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த தகவல் உறுதியான விண்ணப்பதாரர்களின் வங்கிக்கணக்குகளில் இந்த மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தவிர, பல மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்களுக்கு இந்த மாதமும் பணம் வராத நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில், “வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இது குறித்த விசாரணைக்கு தங்களைத் தொடர்பு கொள்ளும்போது, உரிய தகவல்களை தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் தங்களது மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்” என்று அந்த எஸ்எம்எஸ்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசின் நடவடிக்கைகள் இவ்வாறாக இருந்த்லும், ஒருசாரார் வருத்தத்தில் உள்ளதாகவே செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில், முக்கியமானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.. மாற்றுத்திறனாளிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லையாம்..

காரணம், இவர்கள் எல்லாருமே 4 சக்கர வாகனத்தை வைத்திருப்பதாக கூறி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 2 சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் 2 பக்கமும், கூடுதலாக 2 சக்கரங்கள் இணைக்கப்படும்.. அதனால், இதனை 4 சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அதனை நிஜமாகவே கார், வேன் போல, “4 சக்கர வாகனம்” என்று கருதி, மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுவிட்டதாம்.மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவியருக்கு, மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டதை கண்டித்து, 23 மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. அந்தவகையில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் கோரிக்கை மனுவையும் அளித்தார்.
Share on: