ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையில் விதிகள் மாறுகிறதா? கோட்டையை நெருக்கிய கோரிக்கைகள்!


மாற்றுத்திறனாளிகளின், குடும்ப தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள், தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டு உள்ளன.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான, மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்திருப்பதால், அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் உயிரிழந்தவர்கள், தகுதியற்றவர்கள் என ஒவ்வொன்றாக கண்டறியப்பட்டு, இறுதியில், 8,833 பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அதேபோல, விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் குறித்து, பெண்களிடம் அது சரியான தகவலா? என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த தகவல் உறுதியான விண்ணப்பதாரர்களின் வங்கிக்கணக்குகளில் இந்த மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தவிர, பல மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்களுக்கு இந்த மாதமும் பணம் வராத நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில், “வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இது குறித்த விசாரணைக்கு தங்களைத் தொடர்பு கொள்ளும்போது, உரிய தகவல்களை தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் தங்களது மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்” என்று அந்த எஸ்எம்எஸ்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசின் நடவடிக்கைகள் இவ்வாறாக இருந்த்லும், ஒருசாரார் வருத்தத்தில் உள்ளதாகவே செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில், முக்கியமானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.. மாற்றுத்திறனாளிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லையாம்..

காரணம், இவர்கள் எல்லாருமே 4 சக்கர வாகனத்தை வைத்திருப்பதாக கூறி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 2 சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் 2 பக்கமும், கூடுதலாக 2 சக்கரங்கள் இணைக்கப்படும்.. அதனால், இதனை 4 சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அதனை நிஜமாகவே கார், வேன் போல, “4 சக்கர வாகனம்” என்று கருதி, மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுவிட்டதாம்.மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவியருக்கு, மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டதை கண்டித்து, 23 மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. அந்தவகையில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் கோரிக்கை மனுவையும் அளித்தார்.
Share on: