E-Pass மூலம் எந்த பலனும் கிடைக்காது” – முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி!


ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறையால் எந்த பலனும் கிடைக்காது என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்த நிலையில் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பொதுமக்கள் குடும்பத்தோடு ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த இ-பாஸ் மூலம் எந்த பயனும் கிடைக்காது என முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“இ-பாஸ் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் :

* யார் யார் வருகிறார்கள், எவ்வளவு பேர் வருகிறார்கள் என்கிற புள்ளி விவரங்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கும். அந்த தரவுகளின் அடிப்படையில் அதிக கூட்ட நெரிசல், போக்குவரத்து ஆகியவற்றை ஒழுங்குபடுத்தலாம்.

* ஒரே குடும்பத்தில் தனி தனி வாகனங்களில் வருபவர்கள் ஒரே வாகனத்தில் வருவார்கள் இதன் மூலம் வாகனங்களின் எண்ணிக்கையும் சற்று குறையும். அரசு பேருந்து, ரயில்களில் கூட்டங்கள் அதிகரிக்கும்.

* வசதி உள்ளவர்கள் இந்த சிரமங்களை தவிர்க்க அங்கு ஒரு சிறிய இடத்தையாவது வாங்கிக் கொள்வார்கள் . இதன் மூலம் ஊட்டி, கொடைக்கானலில் நிலத்தின் மதிப்பு கூடலாம்.

ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இந்த E Pass நடைமுறை மூலம் கிடைக்கும் சிரமங்கள் என்ன?

* இந்த E Pass நடைமுறை மூலம் லஞ்சம், ஊழல் போன்ற அதிகார துஸ்பிரயோகங்கள் அதிகமாக நடைபெறும்.

* மேட்டுப்பாளையம் – ஊட்டி செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் சில சமூக விரோதிகள் காவல் துறை உதவியோடு Green Tax என்று அனைத்து வாகனங்களிடமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் அது போன்ற அரசு உத்தரவு எதும் இருப்பதாக தெரியவில்லை. அந்த பணம் அரசாங்கத்திற்கும் செல்வதில்லை. கடந்த மூன்று ஆண்டுகலாமாக அனைவருக்கும் தெரிந்து நடைபெரும் இந்த கொள்ளையை தடுக்க எந்த அரசு அதிகாரியும் முன்வைரவில்லை. இதை முதலில் அரசு தடுக்க வேண்டும். E Pass நடைமுறை மூலம் மேலும் இதுபோன்ற துஸ்பிரயோகங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* இந்த E Pass நடைமுறை இந்தியாவுக்குள் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தடையின்றி சென்று வரலாம் என்ற தனிமனித உரிமைகளை பாதிப்பது போல் உள்ளது. நாளை இதை முன்னுதாரணமாகக் கொண்டு சென்னை போன்ற பெருநகரங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த இதுபோன்ற உத்தரவு வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

* இதற்கு பதிலாக 1.) காரமடை – கல்லாறு- மேட்டுப்பாளையம் By Pass திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது, 2.) லவ்டேல் – HPF இந்த பகுதியில் ஊட்டி நகருக்குள் செல்லாமல் ஒரு மற்றுபாதை சீராக்கப்படலாம். 3.) மசினகுடி – கோத்தகிரி சாலை ஊட்டி நகருக்குள் செல்லாமல் மாற்று பாதை ஒழுங்குபடுத்தப்படலாம்.

* சட்ட விரோதமான கட்டடங்கள், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படலாம், சட்டவிரோதமாக மரம் வெட்டுவது வனவிலங்குகளை துன்புறுத்துவது போன்ற நிலுவையில் உள்ள வழக்குகளிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

* சொந்த நாட்டிற்குள்ளே பாஸ்போர்ட் வாங்கி விட்டு செல்ல வேண்டும் என்பது போல் Pass வாங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல.

* பண பலம் இல்லாத பாமர மக்களுக்கு இது சிரமத்தை தான் உண்டாக்கும். தமிழக அரசு இந்த உத்தரவை நீதிமன்றத்தில் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும்.

* இதே போல கொடைக்கானலிலும் அடிப்படை வசதிகளையும் மாற்று பாதைகளையும் உருவாக்கி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம். இதை ஒழுங்குபடுத்த காவல்துறையும், வருவாய் துறையும் இணைந்து சரியான திட்டமிடுதலை மேற்கொண்டால் தான் சரியான தீர்வாக இருக்குமே தவிர E Pass கொடுப்பதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது”.என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Share on:

பாஜகவிடம் சரணாகதி அடைய தொண்டர்கள் மீதும் தலைவர்கள் மீதும் பழி போடுவது ஏன்.? இபிஎஸ்க்கு எதிராக சீறும் கேசிபி


தன்னையும், தன் குடும்பத்தையும் மற்றும் முன்னாள் அமைச்சர்களை வழக்குகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பாஜகவிடம் சரணாகதி அடைய தொண்டர்கள் மீதும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதும் ஏன்? பழி போடுகிறார் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கேசி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பணபலதை அடிப்படையாக வைத்து ஏன்?

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாகவும், அதிமுக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததாக வெளியான தகவல் தொடர்பாகவும் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தலில் போட்டியிட யாரும் முன்வரவில்லை அதனால் புதியவர்களுக்கு சீட்டு கொடுத்தேன் என்பதே அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை அவமானப்படுத்துவது ஆகாதா? சாதாரண தொண்டர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கலாமே.

பணபலதை அடிப்படையாக வைத்து ஏன்? நான்கு ஆண்டு காலம் EPS முதலமைச்சராக இருந்த பொழுது கட்சி நிதி என்று பல ஆயிரம் கோடிகளை நீங்களும், முன்னாள் அமைச்சர்களும் வாங்கி குவித்தீர்களே அந்த பணங்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் சொந்தமாக்கிக் கொண்டீர்களா? ஏன் அந்த பணங்கள் கட்சி வெற்றிக்காக செலவிடபடவில்லை?

ஒன்று பட்ட அதிமுக தேவை

பூத்களில் பூத் ஏஜென்ட்கள் சரிவர வேலை செய்யவில்லை. அதிமுக பூத் ஏஜெண்டுகள் எல்லாம் திமுகவின் விலை போய்விட்டனர் என்று சொல்கிறீர்களே விலைபோனது அவர்களா? அல்லது நீங்கள் தேர்வு செய்த வேட்பாளர்களா? அந்தந்த பகுதிகளில் தொண்டர்கள் சரியாக பணியற்றவில்லை என்று ஏன் தொண்டர்கள் மீது குறை கூறுகிறீர்கள்? நீங்கள் தலைமைக்கு உண்டான தகுதியோடு இந்த இயக்கத்தை வழி நடத்துகிறீர்களா? ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க முயற்சி செய்தீர்களா? உங்களால் கட்சியில் இருந்து பலர் நீக்கப்பட்டுள்ளனர் மற்றும் வெளியேறியுள்ளனர் அது ஏன்? ஒன்று பட்ட அதிமுக தேவை என்பதை நீங்கள் உணர மறுப்பது ஏன்?

தேர்தல் காலங்களில் உங்கள் பிரச்சாரம் மக்களை, வாக்காளர்களை கவரும் படியாக அமைந்ததா? கடந்த மூன்று ஆண்டுகளாக பொறுப்பான எதிர் கட்சியாக திமுகவிற்கு எதிராக அரசியல் செய்தீர்களா? உங்கள் மீதும் உங்கள் முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் வந்துவிட கூடாது என்று மறைமுக ஒப்பந்தத்தோடு தானே பயணித்தீர்கள். கடந்த சில ஆண்டுகளாக பாஜக எதிர்ப்பு என்பதை முன்னெடுத்து. மத்திய அரசு செய்கிற தவறுகளையும் அதனால் ஏற்படுகிற பாதிப்புகளையும் எதிர்த்து நீங்கள் செயல்பட்டதுண்டா?

பொறுப்பேற்காமல் தொண்டர்கள் மீது பழி

அம்மா காலத்தில் தன் மீது வழக்குகள் வந்தாலும் அந்த வழக்குகளை சட்டபடி எதிர்கொண்டாரே தவிர மத்திய ஆளும் கட்சியோடும் மாநில ஆளும் கட்சியோடும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. ஆனால் EPS சமரசம் செய்துகொண்டதன் விளைவு தான் தேர்தல் களத்தில் தொண்டர்கள் உற்சாகம் இழந்து இருக்கிறார்கள். அதை நீங்கள் ஏதோ தொண்டர்கள் சரியாக பணியற்றவில்லை என்று பழிபொட நினைக்க வேண்டாம். கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரச்சார வியூகம், பிரச்சாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷயங்கள் போன்ற பல முன்னெடுப்புகளில் நீங்கள் தவறிழைத்து விட்டு அவற்றுக்கு நீங்கள் பொறுப்பேற்காமல் தொண்டர்கள் மீது பழி போடுகிறீர்கள்.

தேர்தல் முடிவுக்கு பிறகு தீர்வு

குமாரபாளையத்தில் நேற்று இரவு 11 மணிக்கு அதிமுக – திமுக தொண்டர்களிடையே மோதல் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது அது ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. இதில் இருந்து தெரிகிறது #அதிமுக தொண்டர்கள் திமுகவை களத்தில் எதிர்த்து நிற்கிறார்கள். ஆனால் அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரியான தேர்வா? EPS இந்த இயக்கத்தை உருவாக்கியவரோ, வளர்தவரோ அல்ல என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். உங்கள் பணபலதாலும் பாஜக ஆதரவாலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் கொள்கைகளுக்கு விரோதமாக தொண்டர்களின் உரிமையை பறித்து கட்சியை இன்று உங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ளீர்கள். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தொண்டர்கள் சரியான தீர்வை நோக்கி பயனிப்பார்கள் என கே.சி.பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Share on:

குறைந்தபட்ச இருப்பு, கூடுதல் ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் ஆகியவற்றிற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் ரூ.35,500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன:


அனைத்து பொதுத்துறை வங்கிகளும் (PSB) மற்றும் முக்கிய தனியார் துறை வங்கிகளும் 2018 ஆம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து குறைந்தபட்ச சராசரி இருப்பு (MAB) பராமரிக்காததற்காகவும், தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் (ATMகள்) மற்றும் SMS சேவைகளில் கூடுதல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காகவும் ரூ.35,587.68 கோடி வசூலித்துள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ராஜ்யசபா. சுவாரஸ்யமாக, மார்ச் 2020 முதல், நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கும் MAB-ஐ பராமரிக்காததற்கான அபராதத்தை தள்ளுபடி செய்தது.

எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய நிதியமைச்சர் டாக்டர் பகவத் காரத், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள முதன்மை சுற்றறிக்கையின் மூலம், சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதது தொடர்பான அபராதக் கட்டணங்களை நிர்ணயிக்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குழு-அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி, அத்தகைய அபராதக் கட்டணங்கள் அனைத்தும் நியாயமானவை மற்றும் சேவைகளை வழங்குவதற்கான சராசரி செலவுக்கு வெளியே இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் (எஸ்சிபி) விதிக்கும் ஒட்டுமொத்தக் கட்டணங்கள் மற்றும் கூடுதல் ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு எஸ்சிபிகள் வசூலிக்கும் மொத்தத் தொகை பற்றிய தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) டாக்டர் அமீ யாஜ்னிக் கேட்டுள்ளார். 2018 முதல்.

வங்கிகளால் விதிக்கப்படும் சேவைக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், வங்கிகள் விதிக்கும் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்த அரசாங்கம் முன்மொழிகிறதா என்றும் எம்.பி.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டாக்டர் கராட், வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளை அனுப்புவதற்கு வங்கிகள் விதிக்கும் கட்டணங்களில் நியாயமான தன்மையையும் சமத்துவத்தையும் உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உண்மையான பயன்பாட்டு அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படுகிறது.
மேலும், 10 ஜூன் 2021 அன்று வெளியிடப்பட்ட RBI சுற்றறிக்கையின்படி, வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு தகுதியுடையவர்கள். மெட்ரோ மையங்களில் மூன்று பரிவர்த்தனைகள் மற்றும் மெட்ரோ அல்லாத மையங்களில் ஐந்து பரிவர்த்தனைகள் போன்ற பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளுக்கு அவர்கள் தகுதியுடையவர்கள். இலவச பரிவர்த்தனைகளுக்கு அப்பால், ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கட்டணம் விதிக்கப்படுகிறது மற்றும் 2022 ஜனவரி 1 முதல் ஒரு பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர் கட்டணத்தின் உச்சவரம்பு அல்லது உச்சவரம்பு ரூ21 ஆகும், டாக்டர் கராட் கூறுகிறார்.

MAB அல்லது மாதாந்திர சராசரி இருப்பு என்பது வங்கியால் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர் தனது சேமிப்புக் கணக்கில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்சத் தொகையாகும். எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி MAB ஆக ரூ.20,000 இருக்கும் சேமிப்புக் கணக்கை வழங்கினால், வாடிக்கையாளர் ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.20,000 அல்லது அதற்கு மேல் இருப்பு வைத்திருக்க வேண்டும், இல்லையெனில், அவருக்குக் குறைவான கட்டணம் விதிக்கப்படும்.

டாக்டர் கராட்டின் கூற்றுப்படி, சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்கு மலிவு விலையில் வங்கி சேவைகள் கிடைப்பதற்கு மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, அடிப்படை சேமிப்பு வங்கி டெபாசிட் கணக்கின் (பிஎஸ்பிடிஏ) கீழ் சில அடிப்படை வசதிகள் வழங்கப்படுகின்றன, இதில் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (பிஎம்ஜேடிஒய்) கீழ் திறக்கப்படும் கணக்குகள் சாமானிய மக்களுக்கு இலவசமாகவும் குறைந்தபட்ச சராசரியை பராமரிக்க எந்த தேவையும் இல்லாமல் கணக்கில் இருப்பு.

2013 இல், மனிலைஃப் வங்கிகள் விதிக்கும் கட்டணங்களை ஆய்வு செய்தது. நவீன வங்கிச் சேவையின் வசதிக்காக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டும் என்று வங்கிகள் வாதிடுகையில், வங்கிக் கட்டணங்கள் தொடர்ந்து, திருட்டுத்தனமாக அதிகரிப்பது குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் விரக்தியை அதிகரித்து வருவதை சர்வே கண்டறிந்துள்ளது.

வங்கி சேவைக் கட்டணங்கள் குறித்த மனிலைஃப் நடத்திய ஆய்வின் முடிவுகள், வங்கிகள் ஏன் அதிலிருந்து விடுபடுகின்றன என்பதை விளக்கியது. மற்ற எல்லாவற்றையும் போலவே, அவர்கள் நுகர்வோர் நம்பிக்கை, அக்கறையின்மை மற்றும் அறியாமை ஆகியவற்றின் மீது சவாரி செய்வதைக் கண்டறிந்தோம். புதிய கட்டணங்கள் பற்றி ஒரு பெரிய விவேகமான குழு அறிந்திருந்தாலும் கோபமாக இருந்தாலும், பதிலளித்தவர்களில் 60% அதிர்ச்சியூட்டும் பல்வேறு கட்டணங்களைப் பற்றித் தெரியாது மற்றும் அவர்களின் வங்கி வெளிப்படையாக அறிவிக்கிறதா என்பதை ஒருபோதும் சரிபார்க்கவில்லை. 71% க்கும் அதிகமான கணக்கு வைத்திருப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் வங்கியை மாற்ற விரும்பவில்லை – மேலும் வங்கிகள் ஏன் வங்கிக் கட்டணங்களை இவ்வளவு தண்டனையின்றி உயர்த்த முடிகிறது என்பதற்கான பதில் இதுதான். (படிக்க: உங்கள் வங்கிக் கட்டணங்கள் வரை எழுந்திருங்கள்)

2018 இல் மனிலைஃப் சுட்டிக்காட்டியபடி, ஏடிஎம்கள் வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மற்றொரு ஆதாரமாகும். வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு (குறைந்தபட்ச வரம்புக்கு அப்பால்) ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.15 செலவாகும் என்ற வேண்டுகோளின் பேரில் வசூலிக்கின்றன. எவ்வாறாயினும், வேலை செய்யாத ஏடிஎம்களுக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை, பணம் இல்லாதது அல்லது திரும்பப் பெறுதல் (குறிப்பாக விடுமுறை நாட்களில்), வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் பரிவர்த்தனை செய்யும்படி கட்டாயப்படுத்துகிறது.

வாடிக்கையாளர்கள் கிளைக்கு வருவதற்குப் பதிலாக ஏடிஎம்மில் பரிவர்த்தனை செய்யும் போது அல்லது ஏடிஎம் மூலம் வங்கிகள் வணிகத்தையும் லாபத்தையும் பெருக்க அனுமதிக்கிறது என்பதற்காக வங்கிகள் சேமித்த பணத்தை ஈடுசெய்ய எந்த முயற்சியும் இல்லை. கியோஸ்க் (பில் பணம் செலுத்துதல், வங்கி விவரங்களை மாற்றுதல் மற்றும் அறிக்கைகளை அச்சிடுதல்). (படிக்க: சந்தேகத்திற்குரிய வரிகள் மற்றும் கட்டணங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் ரூ.50,000 கோடிக்கு மேல் பறித்துள்ளன)

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச இருப்புத் தொகையை ஏப்ரல் 2017 இல் SBI மீண்டும் அறிமுகப்படுத்தியது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத அபராதம், கணக்கில் போதிய பணம் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால், மிகுந்த நெஞ்செரிச்சல் ஏற்பட்டது.

மார்ச் 2020 இல், எஸ்பிஐ ஒரு அறிக்கையில், “ஏஎம்பியை பராமரிப்பதற்கான கட்டணங்கள் இப்போது அனைத்து 44.51 கோடி எஸ்பிஐ சேமிப்பு வங்கிக் கணக்குகளிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, ​​எஸ்பிஐ சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் ரூ3,000, ரூ2,000 மற்றும் ரூ1 ஏஎம்பியை பராமரிக்க வேண்டும். மெட்ரோ, அரை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் முறையே ரூ. 5 முதல் ரூ. 15 வரை அபராதம் விதிக்கப்படும். (படிக்க: SBI அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளிலும் சராசரி மாதாந்திர இருப்பைத் தள்ளுபடி செய்கிறது)

எவ்வாறாயினும், காலாண்டில் சராசரியாக ரூ.25,000 காலாண்டு இருப்பை பராமரிக்கத் தவறிய டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ ஒவ்வொரு காலாண்டிலும் எஸ்எம்எஸ் கட்டணங்களை விதிக்கிறது
Share on:

மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.


மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒப்புகளை சீட்டுகளை முழுமையாக எண்ணக்கோரும் அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தலில் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை முழுமையாக எண்ணக் கோரி வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை நூறு சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் அகர்வால் என்பவர் உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப நிபுணர்கள் நீதிபதிகளின் சந்தேகத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். குறிப்பாக வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது என்று தெரிவித்து இருந்தனர். ஆனால் இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் ஆகியவை குறித்த எங்களது சந்தேகங்களுக்கு போதிய விளக்கம் கிடைத்து விட்டதாக தெரிவித்த நீதிபதிகள் தீர்ப்பை நேற்று முன்தினம் ஒத்திவைத்தனர். இதையடுத்து இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினார்கள்.

நடைமுறைகள், தொழில்நுட்பம் அடிப்படையில் விரிவாக விவாதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக நீதிபதி சஞ்சீவ் கன்னா தகவல் தெரிவித்துள்ளார். மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒப்புகைச்சீட்டுகளை வாக்காளர்கள் கையில் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையும் நிராகரித்துள்ளது. சின்னங்கள் பதிவேற்றும் எந்திரங்களுக்கு சீல் வைக்க வேண்டும், அதனை 45 நாட்கள் பாதுகாக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் ஈவிஎம்-ல் உள்ள மைக்ரோ கன்ட்ரோலை சோதிக்க அனுமதி கோரலாம் என்றும் உரிய அனுமதியுடன் பொறியாளர்கள் பரிசோதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பரிசோதனைக்கான செலவுகளை கோரிக்கை வைக்கும் வேட்பாளர்களே ஏற்க வேண்டும். மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் செலவுத்தொகை திருப்பி அளிக்கப்படும்.

ஒவ்வொரு கட்சிக்கான சின்னங்களுக்கு தனி பார்கோடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். ஒப்புகைச் சீட்டுகளை எந்திரம் மூலம் எண்ணுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவு அளித்துள்ளார். கண்மூடித்தனமாக ஒரு நடைமுறை மீது நம்பிக்கையில்லை என்று கூறுவது தேவையற்ற சந்தேகங்களையே உருவாக்கும் என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் தீர்ப்பு அளித்துள்ளது.
Share on:

அதிமுக தொண்டர்கள் EPS-ஐ நம்பிக்கைக்குரிய தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லையா? அல்லது தொண்டர்களுக்கு விசுவாசம் இல்லையா?


* புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மாவோ பணபலத்தால் தலைமை பதவியை அடையவில்லை. தொண்டர்கள் அவர்கள் மீதி வைத்த நம்பிக்கையால், தொண்டர்கள் பலத்தால் தலைமைப் பதவியை அடைந்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி முழுக்க முழுக்க தன்னுடைய பணபலத்தால் மட்டுமே அந்த தலைமை பதவியை அடைந்து பணத்தையே பிரதானமாக எடுத்துக்கொண்டு செயல்படும்பொழுது நீங்கள் எப்படி தொண்டர்களை குறை சொல்லமுடியும்?

* கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று EPS பேசினார்,ஆனால் தனித்து களம் காணும் நிலை அதிமுக தொண்டனுக்கு ஏற்பட்டது. அவர்கள் அதற்க்கு அஞ்சுபவர்கள் அல்ல அம்மா காலத்தை போல நாற்பதிலும் தனித்து போட்டி என்றிருந்தால் அதற்க்கு தயராகியிருப்பார்கள். மெகா கூட்டணி அமைப்பேன் என்று உறுதி கொடுத்து ஏமாற்றியது யார்?

* அதிமுக என்கிற இயக்கமே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால், அவரது அபிமானிகள், ரசிகர்கள், பக்தர்களால் உருவாக்கப்பட்டது. அம்மா காலத்தில் கூட எம்.ஜி.ஆர் பெயரும்,படமும் புறக்கணிக்கப்பட்ட தேர்தல்களில் வெற்றிபெற இயலவில்லை. அப்படி இருக்கிற பொழுது வெளிப்படையாக எம்.ஜி.ஆர் தொண்டர்களை புறக்கணிக்கவேண்டும் என்று நீங்கள் செய்கிற முயற்சிகளை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.

* எம்.ஜி.ஆர் காலத்து கட்சியினரின் வாரிசுகள் இன்றளவும் அதிமுகவினராக இருக்கிறார்கள். அவர்களிடத்தில் எடப்பாடியின் தலைமை மீது ஒரு பிடிப்பும், நம்பிக்கையும் ஏற்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் பணம் வாங்காமல் எந்த ஒரு தொண்டனுக்கும் எந்த காரியமும் நடைபெற்றதே இல்லை. தேர்தல் கால உழைப்பு என்பது அந்த தொண்டர்களுக்கு தலைமையின் மீது இருக்கிற நம்பிக்கை, விசுவாசம் அதன் அடிப்படையில் உழைப்பை தருவார்கள். ஆனால் எடப்பாடி மீது அந்த நம்பிக்கை ஏற்படவில்லை.

* எடப்பாடி பழனிசாமியே திமுகவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அனைத்து மூத்த அமைச்சர்களோடும் பரஸ்பர நல்லுறவில் இருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் அதிமுக கட்சிக்காரர்களை விட அதிக பலனடைந்தவர்கள் இன்றைய திமுக முக்கியஸ்தர்கள். அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மேடைக்கு மேடை முழங்கிய திரு.ஸ்டாலின் அவர்களே திமுக ஆட்சி அமைந்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை பெருமையாக அதிமுக முன்னாள் அமைச்சர்களே நாங்கள் சரி செய்துகொண்டோம் என்று தெரிவிக்கிறார்கள். இப்படி இருக்கும்போது உங்களை நம்பி எப்படி அதிமுக தொண்டர்கள் கடுமையான எதிர்போராட்டத்திற்கு இறங்குவார்கள். இதுபோன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலும் அம்மா காலத்திலும் இருந்ததா?

* கிட்டத்தட்ட எல்லா முன்னாள் அமைச்சர்களுமே EPS உட்பட பாஜகவோடு சமரசம் செய்துகொண்டு தங்களை வழக்கு நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கிறார்கள். பெயரளவில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், தேர்தல் பரப்புரையின் இறுதி கட்டத்தில் கூட கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கடுமையான விமர்சனத்தை பாஜக மீது எடப்பாடி பழனிசாமியே முன் வைக்கவில்லை

* ஏதோ அண்ணாமலையின் தவறான வார்த்தை பிரயோகங்களால் “அதிமுக காணாமல் போகும்” என்று பேசியதன் விளைவு! வெகுண்டெழுந்த அதிமுக தொண்டர்கள் EPS மீது அதிருப்தியில் இருந்தாலும் கூட கட்சியை பாதுகாக்கவேண்டும் என்று வாக்குகளை முனைப்போடு உயர்த்தினார்கள்.

* திமுக எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு இந்த இரண்டையும் தலைமையே சரிவர முன்னெடுக்காமல் சம்பரதாயத்திற்கு திமுக எதிர்ப்பும் ஒட்டுமொத்த களத்தையும் அண்ணாமலைக்கு எதிராக மட்டுமே அமைத்து செயல்படுகிற பொழுது தொண்டர்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? அம்மா காலத்தில் இப்படியா இருந்தது? “மோடியா?லேடியா?” என்று ஜெயலலிதா அம்மா சவால் விடவில்லையா?

* இதற்கான மாற்று OPS அல்ல. அண்ணாமலை சிபாரிசு செய்யும் ஓ.பி.எஸ், தினகரன் தலைமைகளை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள். பாஜகவுக்கு அதிமுகவை அடிமைப்படுத்த நினைக்கிற முயற்சியை தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

தேர்தல் முடிவுக்கு பிறகு ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் ஒரு சரியான முடிவை நோக்கி பயணிப்பார்கள்.
Share on:

தேர்தல் பத்திர முறைகேடு; எஸ்.ஐ.டி. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலானாய்வு குழு (S.I.T. – Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கிய பல நிறுவனஙகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருக்கின்றன. எனவே இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on:

அருந்ததியர் என ஜாதி பாக்குறாங்க.. அதிகாரிகள், கட்சியினரால் நெல்லை திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம்!


தான் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் மற்றும் சொந்த கட்சியினர் ஜாதி பாகுபாடு காட்டுவதாக கூறி திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மேயருக்கு கடிதம் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 45 இடங்களில் திமுக வென்றுள்ளது. காங்கிரஸ் 4 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வென்றது. மேலும் அதிமுக கட்சியினர் 4 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த மாநகராட்சி தற்போது திமுக வசம் உள்ளது. மேயராக சரவணன், துணை மேயராக ராஜு ஆகியோர் உள்ளனர். இந்த மாநகராட்சியில் 36வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சின்னத்தாய். இவர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் தான் சின்னத்தாய், தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக, மேயர் சரவணனுக்கு பரபரப்பாக கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதிகாரிகள் ஜாதி பாகுபாடு பார்ப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்து பரபரப்பபை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக சின்னத்தாய் எழுதியுள்ள கடித்ததில் கூறப்பட்டுள்ளதாவது:

எனது வார்டில் குடிநீர் பிரச்சனை என்பது தலைவிரித்தாடுகிறது. 6 மாதங்களுக்கு முன்பு குஜராத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு குடிநீர் ஏற்றுவது மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் உரிமம் வழங்கப்பட்டது. அன்று முதல் வார்டில் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதிகாரிகள் மற்றும் சொந்த கட்சியினர் ஜாதி பாகுபாடு காட்டுகின்றனர். அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த நான் மட்டும் தான் இப்போது கவுன்சிலராக உள்ளேன். ஆனாலும் கூட லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது என்னை அவமானப்படுத்தினார்கள்.

மேலும் நான் அருந்ததியர் என்பதால் என் வார்டில் திட்டமிட்டு குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். ஜாதி பார்த்து குடிநீர் பிரச்சனையை தீர்க்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். மக்களுக்கு பணியாற்ற முடியாததால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ எனக்கூறி அதற்கான கடிதத்தை மேயர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு அவர் அனுப்பி உள்ளார்.

மேலும் அதற்கான கடிதத்ததை அவர் வாட்ஸ்அப் குழுவிலும் பகிர்ந்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே தான் சம்பவம் பற்றி அறிந்த பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப், சின்னத்தாய் மற்றும் அவரது கணவரை அழைத்து சமாதானம் பேசி வருகிறார்.
Share on:

17 வயதில் FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழக வீரர் குகேஷ் சாதனை!


கனடாவில் நடைபெற்ற FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் டி குகேஷ் 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு கேண்டிடேட்ஸ் சாம்பியன் வென்ற 2 ஆவது வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கனடாவில் டொரண்டோவில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, இதில், இந்தியாவின் சார்பில் இளம் கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி ஆகியோரும் பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர் வைஷாலி, ஹொனேரு ஹம்பி ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில், 14 சுற்றுகள் கொண்ட தொடரின் இறுதிப் போட்டியில் 17 வயதான குகேஷ், அமெரிக்காவின் கிஹாரு நகமுராவை எதிர்கொண்டார். இந்தப் போட்டி டிராவில் முடியவே இருவரும் ½ புள்ளிகள் பெற்றனர். இதே போன்று மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருணாவும், ரஷ்யாவின் இயான் நெப்போம்னியாச்சியும் மோதினர். இந்தப் போட்டியும் டிராவில் முடிந்தது.

இதன் காரணமாக புள்ளிகள் அடிப்படையில் குகேஷ் 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, 2024 FIDE கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் சாம்பியனாக வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் போட்டியை வென்ற 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நகமுரா 8.5 புள்ளிகள் பெற்று 2ஆவது இடம் பெற்றார். இந்த வரிசையில் இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5ஆவது இடம் பெற்றார். இதன் மூலமாக முதல் முறையாக குகேஷ் கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளார்.

இளம் வயதில் சாம்பியனான குகேஷிற்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இளம் வயதில் சாம்பியனானதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் எப்படி விளையாடி கடினமான சூழ்நிலைகளைக் கையாண்டீர்கள் என்பதில் நான் தனிப்பட்ட முறையில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
Share on:

ஓ.பி.எஸ்., டிடிவி நிலையை எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது – கே.சி.பழனிச்சாமி


பா.ஜ.கவுக்கு ஆதரவளித்ததால், ஓ.பி.எஸ்., டிடிவியை அதிமுக தொண்டர்கள் புறந்தள்ளி உள்ளனர். அதே நிலையை எடப்பாடி பழனிசாமியும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் உணர்த்துவது என்ன? என்னும் தலைப்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

திமுக இந்த தேர்தலில் 35 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறலாம் ஆனால் அது மக்களின் நம்பிக்கையை பெற்றதால் அல்ல. சரியான மாற்று கட்டமைப்பு ஏற்படாததால் மட்டுமே. திமுகவின் அடிப்படை தொண்டர்கள் கூட இந்த ஆட்சியால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை. எல்லாமே மையப்படுத்தப்பட்டு விட்டது. எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்று மன வருத்தத்தில் உள்ளார்கள்.

பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் ஆயிரம் ரூபாய் போன்றவை தாக்கத்தை கொடுத்தாலும், சொத்துவரி, மின்கட்டண உயர்வு, ஊழல், போதைப்பொருள் புழக்கங்கள் அதிகரிப்பு , கட்டுப்பாடற்ற மது விற்பனை, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது 90 நாளில் நடவடிக்கை எடுப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏதோ ஒரு மறைமுக ஒப்பந்தம் இவர்களுக்குள் ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இவை மக்கள் மத்தியில் கடுமையான எதிர் விளைவுகளை இந்த அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, சீனியர்களை ஓரம் கட்டி, தான் மட்டுமே பாஜக என்றும், தான் ஒரு மாற்றத்துக்கான தலைவர் என்றும் சமூக வலைதள பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து தன்னை முன்னிறுத்திக்கொண்டார். அவர் வெற்றியடைய பயணித்த பாதை மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறுவதாக அமையவில்லை. ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்று தன்னை உயர்த்தி பிடிக்க முயன்றும் கோவையில் மார்ட்டின் போன்றவர்களிடம் பாஜக பணம்பெற்றது மற்றும் தமிழகம் முழுக்க தொழிலதிபர்களிடம் அழுத்தம் கொடுத்து நிதி பெற்றதும், வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று அறிவித்தாலும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் தொழிலதிபர்கள் மூலமாக பாஜகவாலும் திமுகவிற்கு இணையாக பணம் செலவிடப்பட்டது. இதன்மூலம் இவரும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதாக தான் பொதுமக்களால் பார்க்கப்படுகிறது.

ஒரு வேட்பாளராக இருக்கிறவர் தேர்தல் காலத்தில் என்ன பேச வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது கூட புரியாமல் இன்னும் தன்னை ஒரு போலீஸ் அதிகாரியாக நினைத்துக் கொண்டு “உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” என்பதும் “தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும்” , “ஓ.பி.எஸ் தலைமைக்கு அதிமுக சென்றுவிடும்” , “தினகரன் கைக்கு அதிமுக சென்றுவிடும்” என்கிற தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியது மற்றும் பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகளோடு தினசரி சண்டையிடுவதை மட்டுமே செய்தார். மத்தியில் ஆளுகிற கட்சியின் தமிழக தலைவர் போட்டியிடுகின்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலை கூட சரிபார்க்காமல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டுவது வினோதமாக உள்ளது. #கோவை மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்களை பற்றி எதுவும் பெரிதாக பேசவில்லை. அந்த வகையில் அவர் மக்களின் நம்பிக்கையை பெற தவறிவிட்டார்.

அதிமுக தலைமையைப் பொறுத்தவரை பாஜகவை எதிர்த்து தனித்து போட்டி என்கிற ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும். வேட்பாளர் தேர்வு, பிரச்சார யுக்திகள், சமூக வலைதளம், ஊடகங்கள், பத்திரிகைகள் போன்ற பிரச்சார களம் கட்டமைக்கப்படவில்லை. தேர்தலில் புதியவர்கள் என்கிற கேள்விக்கு, அம்மா காலத்தை போல என்று சொன்னாலும் கூட எடப்பாடியார் தான் ஒன்றும் எம்.ஜி.ஆரோ, அம்மாவோ அல்ல என்பதை மறந்துவிட்டார்.

பொருளாதார பின்புலமே பிரதானம் என்கிற அடிப்படையில் கட்சிக்கு புது வரவுகளுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும் பணபலத்தின் அடிப்படையில் வாய்ப்பு கொடுத்தது களம் கடுமையான போட்டியை சந்திக்கிற பொழுது இன்னும் கடுமையாக போராடுவதற்கு பதிலாக பின்வாங்கிவிட்டார்கள். கட்சி உணர்வாளர்களாக இருந்திருந்தால் கடும் போட்டியிலும் கடைசிவரை போராடியிருப்பார்கள்.

பாஜகவில் பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா மற்றும் கூட்டணி பிரபலங்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அதே போல திமுகவில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், உதய நிதி, கனிமொழி மற்றும் கூட்டணி பிரபலங்கள் பிரச்சாரம் செய்தார்கள். இவர்கள் எல்லாம் ஊடகம் மற்றும் சமூக வலைதளத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் தான் மட்டுமே அதிமுக என்று நிரூபிப்பதற்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி முயற்சித்தாரே ஒழிய தேர்தலில் நாற்பதிலும் வெல்லவேண்டும் என்கிற முனைப்பு இல்லை. மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கட்சிக்கு பலம் சேர்க்கிற கேசிபி போன்ற பலர் இருந்தும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி தனது போட்டியாளர்கள் ஒதுக்கப்பட்டே வைத்திருக்கப்பட வேண்டும் என்றும், தன் தலைமையை நிலை நிறுத்திக் கொள்வதிலும் மட்டுமே அம்மா மறைந்து 7 ஆண்டுகள் கழித்தும் இன்னும் போராடுகிறார். உட்கட்சி பிரட்சனையில் தன் போட்டியாளர்களை ஒதுக்கிவிட்டு தலைமையை மட்டும் கைபற்றிவிட்டாலே தேர்தல்களில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைக்கிறார். ஆனால் அந்த உட்கட்சி போட்டியினால் மட்டுமே கட்சி பலவீனமாகிறது என்பதை உணர தவறுகிறார். தான் மீண்டும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதில் கூட தவறில்லை. ஆனால் தான் மட்டுமே தான் அதிமுக கட்சி என்று நிரூபிக்க மட்டுமே அவர் கட்சியை வழிநடத்துவதும் அதனால் கட்சியினுடைய வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுவதும் பொதுமக்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் ரசிக்கவில்லை.

பாஜகவை கடுமையாக எதிர்க்க தவறியது, மோடி,அமித்ஷா அவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்வைக்காதது போன்றவை எதிர்மறை விளைவுகளை கொடுத்தது. 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிரான வாக்குகளையும், 3 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகளையும் மடை மாற்றி அதிமுகவுக்கு கொண்டுவர, எம்ஜிஆர் கால முன்னணியினர்களை களம் இறக்கியிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் இன்னும் 18 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் களம் தயாராகிவிடும் அதை எதிர்கொள்ள கட்சியை ஒன்றுபடுத்தி உட்கட்சி பிரச்சினைகளை சரி செய்து வலிமையான அதிமுகவை கட்டமைக்க வேண்டும். உட்கட்சி போட்டியாளர்களை வீழ்த்த பாஜகவோடும், திமுகவோடும் அனுசரித்து செல்வதை விட, உட்கட்சி போட்டியாளர்களிடம் அனுசரித்து பாஜகவையும் திமுகவையும் வீழ்த்துவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சிக்க வேண்டும் அது தான் தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் விரும்புவது, அதுவே அதிமுகவின் எதிர்காலத்திற்கும் சிறந்தது. இதை சிந்திப்பாரா எடப்பாடி?

எதிர்காலம் என்பது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஆன போட்டியாக மட்டுமே அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் அமையும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜகவின் அறிவுஜீவிகள் வாக்கு சதவீதத்தில், கூட்டல் கழித்தல்களை கணக்கிட்டு பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்தால் வெற்றி பெற்று விடலாம் என்கிற சித்தாந்தத்தை புகுத்துவார்கள். ஒருவேளை மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால், அதிமுகவில் மீண்டும் ஒரு உட்கட்சி குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பார்கள். முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். அதனால் மீண்டும் பாஜக உறவு எந்த சூழ்நிலையிலும் வேண்டாம் என்கிற முடிவை மாற்றிக்கொள்ள கூடாது. ஓ.பி.எஸ், தினகரன் பாஜகவோடு இணைந்து செயல்பட்டதற்கு பிறகு அவர்களை அதிமுக தொண்டர்கள் புறக்கணித்துவிட்டார்கள். மீண்டும் பாஜக உறவு என்றால் அதே நிலை எடப்பாடிக்கும் ஏற்படும்.

திராவிட கட்சிகள் தங்களை சுதாரித்துக் கொள்வதிலும் தமிழகத்தை தொடர்ந்து திராவிட பூமியாக பண அரசியலை தாண்டி நேர்மையான ஊழல் அற்ற, மக்கள் நலனில் கவனம் செலுத்துகிற, தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்கிற சிந்தனையை நோக்கி பயணிக்க வேண்டும். அண்ணாமலைக்கு நடுநிலை வாக்காளர்களிடமும், இளம் வாக்காளர்களிடமும் ஏற்படுகிற வரவேற்பு என்பது ஒரு மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு. ஆனால் அவர் அதற்க்கு தகுதியானவராக நடந்துகொள்ளவில்லை என்பது வேறு, ஆனால் அந்த எதிர்பார்ப்பை திராவிட சக்திகள் பூர்த்தி செய்ய முன்வரவேண்டும். அதிகார பலத்தாலும், பணபலதாலும் மட்டுமே அதை வெற்றிகொள்ள முயலாமல் மக்கள் சக்தியால் இளைஞர்கள், நடுநிலையாளர்கள் மனதை வெற்றிகொண்டு எதிர்வரும் தேர்தல்களை சந்திக்க திராவிட இயக்கங்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Share on:

மாமியார் பாஜக எம்எல்ஏ தெரிந்தும்.. EPS-ஆல் கொண்டுவரப்பட்ட ஈரோடு வேட்பாளர் இன்று விலைபோய்விட்டாரா?கேசி.பழனிசாமி


ஈரோடு தொகுதியில் அதிமுகவினரை முழுவதுமாக வேட்பாளர் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள கே.சி.பழனிசாமி, உங்கள் கட்சி, உங்கள் சின்னம் வெற்றிபெற வேண்டும் என்றால் நீங்கள் செலவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கட்சிக்காரர்களிடம் கூறி வருவதாக தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் ஈரோடு தொகுதி வேட்பாளர் தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி வெளியிட்ட சமூகவலைதள பதிவில், நம்பி ஏமாந்தாரா? அல்லது நம்பிக்கை துரோகம் செய்தாரா? எடப்பாடி பழனிசாமி என கேள்வி எழுப்பியுள்ளார்.

* ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு உறுதியாளிக்கப்பட்டு EPS-ஆல் கொண்டுவரப்பட்டவர் இன்று திமுகவிடம் விலைபோய்விட்டாரா?

* கடந்த 2 நாட்களாக கட்சிக்காரர்களை முழுமையாக புறக்கணித்தும் தான் மிகப்பெரிய தொகையை கொடுத்தே சீட்டு பெற்றதாக்கவும் அதனால் தேர்தல் செலவுகளுக்கு தன்னை யாரும் அணுக கூடாது உங்கள் கட்சி, உங்கள் சின்னம் வெற்றிபெற வேண்டும் என்றால் நீங்கள் செலவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கட்சிக்காரர்களிடம் ஏன் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக வேட்பாளர் கோபப்படுகிறார்.

* சரி செய்ய முயற்சித்த முன்னாள் அமைச்சர்களிடமும் எனக்கு அழுத்தம் கொடுத்தால் நான் மாவட்ட ஆட்சியரை சந்தித்து போட்டியிலிருந்து விலகி விடுவேன் என்று எச்சரித்ததாக செய்திகள் வருகிறது.இந்த வேட்பாளரின் தாயார் 1991 தேர்தலில் #அதிமுக சார்பாக MP-யாக இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று விட்டு பிறகு பாஜகவில் இணைந்துவிட்டார். இவரது மாமியார் தற்போதைய பாஜக MLA இது எல்லாம் தெரிந்தும் ஏன் எடப்பாடி பழனிசாமி இவருக்கு வாய்ப்பு வழங்கினார்?

* அடிப்படைக் கட்சி உணர்வும், விசுவாசமும், தலைவர்கள் மீதான அபிமானமும், சின்னம் மற்றும் தொண்டர்கள் மீது பற்றுதல் இல்லாமல் பொருளாதார அடிப்படையில் ஒரு வியாபாரம் போல சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தின் விளைவு! தன்னை ஒரு கொடைவள்ளலாக மக்கள் மத்தியில் உருவகப்படுத்தி விட்டு கடுமையான போட்டியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை என்றதும் இவர் வாய்ப்புக்காக கொடுத்ததையும் இதுவரை செலவு செய்ததையும் எதிர் தரப்பிடம் பெற்றுக் கொண்டதால் இந்த திடீர் மனமாற்றமா?

* கட்சிக்காரர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் கவனிப்பு வேலைகள் நடைபெறும் என்று அறிவித்துவிட்டு இப்போது வேட்பாளர் பின் வாங்குவதால் கட்சிக்காரர்கள் ஏதோ ஏமாற்றி விட்டார்களோ என்று அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் கெட்ட பெயர் வாங்குகிறார்கள். மேலும் வேட்பாளர் கொடுத்துவிடுவார் என்று நம்பி இதுவரை கடன் வாங்கி செலவு செய்த கட்சிக்காரர்களும் தற்பொழுது செலவு செய்ததை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். இது எதிர்காலத்தில் கட்சிக்கு ஒரு அவபெயரை ஏற்படுத்தும் அதே போல் இந்த செயல் இதை ஒட்டி இருக்கிற திருப்பூர், பொள்ளாச்சி, நாமக்கல், கரூர் போன்ற தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவது போல் இந்த வேட்பாளரின் செயல் அமைந்துவிட்டது.

* எடப்பாடி பழனிசாமியும் கே.சி.பழனிசாமியும் நின்று மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இதே நாடாளுமன்ற தொகுதியில் இன்று அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிற்பதற்கு காரணம் அரசியலில் வியாபார யுக்தியா? அல்லது கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்த தலைமையின் தவறான முடிவா? தகுதியானவர்கள் பலர் இருந்தும் தன்னுடைய சுயநலம் மற்றும் ஆணவப்போக்கால் கட்சியை வழி நடத்துகிற பக்குவம் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டதா? தங்களை திருத்திக்கொள்வார்களா ? எடப்பாடியும், தங்கமணியும், வேலுமணியும். என கேசி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on: