தி.மு.க.வை அ.தி.மு.க. வென்றதா, பா.ஜ.க’விடத்தில் அடகு வைக்கப்பட்டிருக்கின்ற இவ்வியக்கம்


இரட்டை இலை சின்னத்தின் மீதான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் விதித் திருத்தங்கள் சரியாக உள்ளதா என்ற விசாரணை தாமதமாகியுள்ளது என்று கூறிய நிலையில் தற்பொழுது அவ்வழக்கு தள்ளுபடியாகும் நிலையில் தேர்தல் ஆணையத்தில் அதன் விதிகளைத் திருத்தி இது சரியா என்கின்ற வழக்கை எடுத்துக்கொள்வதற்கான மனு என் மூலமாகச் சமர்ப்பிக்கப்படும் . அவ்வாறு அம்மனு ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் ஆ.தி.மு.க.வின் அனைத்துத் தொண்டர்களின் எதிர்பார்ப்பான தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒற்றைத் தலைமை நடைமுறை அ.தி.மு.க.விற்குள் வரும்.
தொண்டர்களால் தலைமை தேர்ந்தெடுக்கின்ற பொழுது தான் அ.தி.மு.க. வலிமை பெரும் மேலும் ஈ.பி.எஸ்-சசிகலா வை வென்றாரா இல்லை ஓ.பி.எஸ்’ஐ வென்றாரா என்பது அ.தி.மு.க.விற்கோ தொண்டர்களுக்கோ முக்கிய பிரச்சனை இல்லை தி.மு.க.வை அ.தி.மு.க.வென்றதா , பா.ஜ.க.விடத்தில் அடகு வைக்கப்பட்டிருக்கின்ற இவ்வியக்கம் மீட்டெடுக்கப்பட்டதா என்பதுதான், தனித்து 2014இல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோமே அதேபோல் 2024இல் வெற்றிகாண்போமா, 2026இல் பா.ஜ.க. இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கின்ற பலத்தை யாரால் அ.தி.மு.க.விற்கு தர முடிகின்றதோ அவரே ஏற்றுக்கொள்ளப்படுகிற தலைவராகக் கருதப்படுவார்.
2021 சட்டமன்ற தேர்தலிலிருந்த நிலையை ஒப்பிட்டுப் பார்க்கையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மிகப் பெரிய சரிவையும் தொண்டர்களிடத்தில் ஒரு சோர்வையும் காண முடிகிறது எனவே ஒன்றுபட்ட அ.தி.மு.க.தேவை அது சசிகலா அவர்களையும் உள்ளடக்கியதாக ,எனினும் சசிகலா அவர்களைப் பொதுச்செயலாளர் என்பதையும் அவர் தலைமையில் இவ்வியக்கம் நடக்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆயினும் இயக்கம் வலுப்பெற வேண்டுமென்றால் ஒரு தொண்டனைக் கூட இழந்துவிடக் கூடாது என்ற எம்.ஜி.ஆர்’ன் தாரக மந்திரத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: