மோடியா? லேடியா? அண்ணாமலை தான் இப்படி பேசுறார்னா? தமிழிசையுமா? பிளாஷ்பேக் சொல்லி பாஜகவை அலறவிடும் KC. பழனிசாமி!


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாதி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார்.

மீண்டும் கட்சியில் பொறுப்பு பெறவேண்டும் என்பதற்காக தமிழிசை இப்படி பேசுகிறாரா? என கே.சி.பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாதி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார். மேலும், ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்று சொல்வதற்கான காரணங்களையும் ஆதாரங்களுடன் அண்ணாமலை அடுக்கியுள்ளார். இந்நிலையில், மதத்தை முன்னிறுத்தி மதத்தின் பெயரால் அரசியல் செய்வதை ஜெயலலிதா என்றுமே ஆதரித்ததில்லை என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:
* “கரசேவையை ஆதரித்தது.
* கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்ட பொழுது இது தவறு என்று குரல்கொடுத்து.
* ராமர் கோவில்க்கு ஆதரவாக குரலில் கொடுத்தது.
* ராம சேதுவுக்கு ஆதரவு தெரிவித்தது.
* இன்று உயிரோடு இருந்திருந்தால் ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டு இருப்பார்.”

இது எல்லாம் இறைபக்தி. இது வேறு மதவாத அரசியல் என்பது வேறு. மதத்தை முன்னிறுத்தி மதத்தின் பெயரால் அரசியல் செய்வதை ஜெயலலிதா அம்மா என்றுமே ஆதரித்ததில்லை.

அதனுடைய வெளிப்பாடுதான் மத்தியில் ஆளுகிற அரசாங்கங்கள் மாநில அரசாங்கங்களை கவிழ்த்த வரலாறு உண்டு. ஆனால் மாநில கட்சியான அதிமுக மத்தியில் ஆண்ட வாஜ்பாய் அரசாங்கத்தை கவிழ்த்தது. அதை செய்தவர் ஜெயலலிதா அம்மா.

அதன்பின் ஒரு பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் “நான் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் அதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் இனி மேல் எந்நாளும் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று உங்களிடம் எனது வாக்குறுதியாக கொடுக்கிறேன்” என்று கூறினார். “மோடியா? லேடியா?” என்று களம் கண்டார்.

அரசியல் அரிச்சுவடி அறியாத அண்ணாமலை இப்படி சொல்லி இருக்கலாம் ஆனால் ஒரு அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்த திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் ஒருவேளை தான் சார்ந்து இருக்கிற கட்சிக்கு அதன் மாநில தலைவரை ஆதரித்துப் பேச வேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறாரா? அல்லது மீண்டும் கட்சியில் பொறுப்பு பெறவேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறாரா? என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on:

ஜெயலலிதாவுக்கு ஹிந்துத்துவா சாயல் பூசுவதா? அண்ணாமலைக்கு கே.சி.பழனிசாமி கண்டனம்!


ஜெயலலிதாவுக்கு ஹிந்துத்துவா சாயல் பூசுவதா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதன்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திமுகவின் இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை தனது கட்சி நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், இந்துத்துவா தலைவரான, அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தமிழக அரசியலில் பாஜக நிரப்புகிறது என்றார்.

இதுகுறித்து கே.சி.பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜெயலலிதா அம்மா மிகச்சிறந்த திராவிட தலைவர், சமூக நீதி காத்த வீராங்கனை என்ற…
Share on:

Continue Reading

”காவல் துறை Vs போக்குவரத்து துறை” – அரசுப் பேருந்துகளை வளைத்து வளைத்து அபராதம்… பரபரப்பாகும் தமிழகம்!


பல்வேறு விதிமீறல்களை சுட்டிக்காட்டி, தமிழகத்தின் பல பகுதிகளில் அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்துப் போலீசார் திடீரென அபராதம் விதித்து வருகின்றனர். காவல் துறை Vs போக்குவரத்து துறை என்று மாறியுள்ள இ்ப்பிரச்னைக்கு, தமிழக அரசு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அரசு பேருந்தில் பயணித்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சில தினங்களுக்கு முன் வைரலானது. அதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு பல்வேறு விவாதங்களை கிளப்பியது. இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் அரசுப் பேருந்துகளை வளைத்து வளைத்து அபராதம் விதித்து வருகின்றனர்.

நேற்று (மே 23) மட்டுமே, ‘நோ பார்க்கிங்’, ‘ஓவர் ஸ்பீடு’ உள்ளிட்ட காரணங்களை கூறி, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சுமார் 22 அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதேபோல, இன்று ஈரோட்டில் ஒரு வழி பாதையில் வந்த 12 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவைதவிர, பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றி செல்வதற்கும் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசு பேருந்துகள் மீது காவல் துறை அபராத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவே இது பார்க்கப்படுகிறது.

நாங்குநேரி சம்பவம்தான் காரணமா?: போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரமும், பொறுப்பும் போக்குவரத்து போலீசாருக்கு இருக்கிறது. எனினும், நாங்குநேரியில் டிக்கெட் எடுக்காமல் நடத்துனரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட காவலர் ஆறுமுகபாண்டி மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து துறை பரிந்துரை செய்த பிறகுதான் அபராத நடவடிக்கை வேகமெடுத்துள்ளது என்பதே பலதரப்பினரின் கருத்தாக உள்ளது.

குறிப்பாக, ஈரோட்டில் இன்று ஒருவழிப் பாதையில் வந்த அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்துள்ளனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்களில் பலர் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதும், அவர்களை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அரசுப் பேுருந்துகளை மட்டும் நிறுத்தி அபராதம் விதிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ, போக்குவரத்து போலீசார், அரசுப் பேருந்துகளை குறிவைக்கின்றார்களா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

அரசுக்கே அபராதமா?: மேலும், அரசு பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதல் பயணிகளை ஏற்றி செல்வதற்கு போலீசார் அபராதம் விதிப்பதென்பது அரசின் மீதே அபராதம் விதிப்பதை போல என்கின்றனர் பயணிகள். பீக் ஹவர்சில் போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் வேறு வழியின்றி ஒரே பேருந்தில் ஏறி நின்றுகொண்டே பயணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த சூழலில், போக்குவரத்து போலீசார் பேருந்தை நிறுத்தி அபராதம் விதிக்கும்போது தாங்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாக பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு போக்குவரத்து மற்றும் காவல் துறைக்கான விதிமுறைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதலை வெளியிட்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘காவலர்கள் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளும் விஷயத்தில் தமிழக அரசுத் தரப்பில் இரு ஆண்டுகளாகக் காட்டப்படும் அலட்சியம் காவல்துறைக்கும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடக் கூடாது. இதேநிலை தொடர்ந்தால், இது காவல்துறைக்கும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. அத்தகைய மோதல் ஏற்பட்டால் அது பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமின்றி, தமிழகத்தின் சட்ட ஒழுங்கையும் பாதிக்கக்கூடும். அதற்கு முன்பாக இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும்” என்று ராமதாஸ் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

பழிவாங்கும் நடவடிக்கை?: ‘போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிப்பது சரியே.ஆனால், த‌ங்க‌ளி‌ன் துறைக்கு நேர்ந்த அவமானத்தி‌ற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இதை கருதி, பேச்சுவார்த்தை நடத்தி ‘சமரசம்’ ஏற்பட்டது என்று அறிவித்துவிட்டு மீ‌ண்டு‌ம் முந்தைய நிலைக்கே சென்றுவிடாம‌ல், காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ந்த நடவடி‌க்கைகளை தொடர வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். போக்குவரத்து விதிமீறல்க‌ளி‌ல் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு இ‌ந்த விவகார‌ம் ஒரு பாடமாக இருக்கட்டும்’ என்று பாஜக மாநில துணைப் பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
Share on:

சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா தொற்று.. தமிழக விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!


சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதை அடுத்து கோவை விமான நிலையத்தில் தீவிரமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் தொற்று பரவல் உச்சத்தை எட்டும் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு சில பகுதிகளில் பதிவாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ, பதற்றமோ தேவையில்லை எனவும் ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு, சிங்கப்பூர் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது. சிங்கப்பூரில் இருந்து வாரத்திற்கு ஐந்து நாட்களும், ஷார்ஜாவிலில் இருந்து வாரத்திற்கு 7 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் பயணிகள் தனிமைப் படுத்தப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சென்னை, திருச்சி விமான நிலையங்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Share on:

கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கட்டுமானம்! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு


கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில், கோவில் நிதியில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களின் ஆட்சேபங்கள் பெறப்பட்டதா என்பது குறித்து நாளை விளக்கமளிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்டு நிலத்தில் 26.78 கோடி ரூபாய் செலவில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக 2023ம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த கலாச்சார மையம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி கோவில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்து சமய அறநிலைய துறை சட்ட விதிகளை பின்பற்றாமல், உரிய அதிகாரமில்லாமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 88 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதன் மூலம், ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வாடகை வருவாய் பாதிக்கப்படும் எனவும், கோவில் நிதி 28 கோடி ரூபாயை கட்டுமானத்துக்கு பயன்படுத்துவதால், ஆண்டுதோறும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வட்டி வருவாய் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலாச்சார மையம் அமைக்க விரும்பினால், அதை கோவில் நிலத்தில், நிதியில் அமைக்க முடியாது எனவும், அரசு நிலத்தில், அரசு நிதியில் அமைத்தால் வரவேற்கத்தக்கது எனவும் திட்ட அனுமதி இல்லாமல் கலாச்சார மையம் கட்ட முடியாது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கலாச்சார மையம் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளதால், அந்த பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும், இதுசம்பந்தமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அறநிலைய துறை சட்டப்படி, கோவில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக பொது அறிவிப்பு வெளியிட்டு, ஆட்சேபங்கள் பெற வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் வாதிட்டார்.

அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக உரிய அனுமதிகளை கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை அணுகியுள்ளதாகவும், உரிய அனுமதிகளைப் பெறாமல் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

மேலும், தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய இந்த மையத்தில் கட்டப்படும் அரங்குகளை வாடகைக்கு விடுவதன் மூலம் கோவிலுக்கு வருவாய் வரும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்படி கோவில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் பெறப்பட்டதா என்பது குறித்து நாளை விளக்கமளிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.
Share on:

கட்சிக்குள் EPS தலைமையின் மீது அதிருப்தி என்ற செய்திக்கு முன்னாள் அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்தது அவர் தலைமை மீது எந்த அதிருப்தியும் இல்லை என்பதை உறுதிப்படுத்துமா?- கே.சி.பழனிசாமி


* நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால் தான் EPS தலைமை மீது எந்த அதிருப்தியும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும்.

* அம்மா மறைவிற்கு பிறகு 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் 3 ஆவது மிகப்பெரிய கட்சியாக எடப்பாடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று அதிமுகவில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்?

* முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்ன திமுக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல் குறித்து ஏன் அதிமுக தலைவர்கள் எந்த குற்றச்சாட்டும் எழுப்புவதில்லை?

* இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எடுத்த பாராட்டுதலுக்குரிய முடிவு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அதற்கான பலனாக 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் அதிமுக அதிக வாக்குகளை பெரும். அதே போல் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கோட்டை விட்டது வேட்பாளர் தேர்வு.

* ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் மனநிலை பாஜகவிற்கு எதிராக இருக்கும்பொழுது. அந்த பாஜகவோடு கூட்டுசேர்ந்து நேரடியாக களமிறங்கி இரட்டை இலைக்கு எதிராக போட்டியிடுவதை OPS தவிர்த்திருக்க வேண்டும்.

* வெற்றியோ தோல்வியோ தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பன்னீர்செல்வம் தவிர்த்து அவருடன் இருப்பவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைவார்கள். அதற்க்கு காரணம் OPS-ன் முன்னுக்குப்பின் முரணான நிலைப்பாடும் அதீத பாஜக விசுவாசமும் தான்.

* ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தாலும் கூட OPS-ஐ வைத்து எந்த முன்னெடுப்புகளும் செய்யமாட்டார்கள். பாஜகவின் கவனம் விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி போன்ற வழக்குகளில் சிக்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்களை நோக்கி தான் செல்லும்.

* அதிலும் வேலுமணி போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி என்று தான் முன்னெடுப்பார்களே தவிர 2026 தேர்தல் வரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்க வாய்ப்பு இல்லை. செங்கோட்டையனும் அவர்களை போல போர்க்கொடி தூக்கக்கூடிய தலைவர் அல்ல அவர் அப்படி செய்வதாக இருந்தால் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுதே அதை செய்திருப்பார்.

* EPS-ன் சகாக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு அவர்களது தொடர் தோல்வியை நியாயப்படுத்த “எம்.ஜி.ஆர் தோற்க வில்லையா” “அம்மா தோற்க வில்லையா” என்பது தான். இது OPS-க்கு எந்த அளவு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா பற்றிய புரிதல் இல்லையோ அதே போல் EPS-க்கும் இல்லை என்பதையே காட்டுகிறது.

* ஏனென்றால் இன்றைய அதிமுக வாக்கு வாங்கி என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் வாக்குவங்கி என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
Share on:

ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் எப்படி அமைகிறது என்பதை பொறுத்து தான் அதிமுக தொண்டர்களின் நிலைப்பாடுகள் அமையும் – கே.சி.பழனிசாமி


* எடப்பாடி பழனிசாமி நம்புவதை போல 20 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றிபெற்று விட்டால் அவரது தலைமை உறுதிசெய்யப்பட்டு விடும். அதன்பின் அதிமுக-வில் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் EPS-ன் தலைமையை ஏற்றுக்கொண்டு மட்டுமே செயல்பட வேண்டும்.

* ஒருவேளை 2-5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கிறது வாக்கு சதவீதமும் 25% உட்பட்டுதான் கிடைக்கிறது என்றால், திமுக-வையும் பாஜகவையும் எதிர்த்து 2026-ல் ஆட்சி அமைக்க ஒன்றுபட்ட அதிமுக தேவை என்ற கோரிக்கை வலுப்பெறும்.

* அல்லது எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் 20% வாக்குகள் பெற்று, பாஜக கூட்டணி 15% பெற்று 5-6 இடங்களில் பாஜக இரண்டாம் இடம் பெற்று அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது என்கிற அளவு மோசமான தோல்வி என்கிற நிலை உருவானால் மாற்று தலைமை தேவை என்கிற கோரிக்கை வலுப்பெறும்.

* 2019 நாடாளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் அதிமுக அதிக வாக்குகளை பெரும். ஆனால் எத்தனை தொகுதிகளில் வெற்றி என்பது தான் முக்கியம். எடப்பாடி பழனிசாமியின் தலைமை தொடரவேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெற்றியை பெற்றுத்தந்தால் மட்டும் தான் அவர் தலைமை தொடரும்.

அதிமுகவில் மீண்டும் ஒரு புதிய அணி உருவாக போகிறது என்று பரவும் செய்தி உண்மையா?

* ஜூன் 4 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக ஒரு புதிய பரிணாமவளர்ச்சியை எட்டும். அது ஒன்றுபட்ட அதிமுக தேவை என்கிற வகையில் தான் இருக்கும்.

* சமீபத்திய ஆர்.பி.உதயகுமார் பேச்சுக்கள் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வராது என்ற நம்பிகையில் பேசுவது போல் உள்ளது. அவர் தேர்தல் கூட்டணி அமைகிற நேரத்தில் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருக்க வேண்டும்.

* OPS திமுக தலைவரை புகழ்ந்து பேசிவிட்டார் அதிமுகவின் பிரதான கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டார் என்கிறார்கள். அப்படியென்றால் கே.பி.முனுசாமி சட்டமன்றத்தில் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனை வானளாவ புகழ்ந்தார். அப்பொழுது OPS மீது சுமத்தும் குற்றச்சாட்டு கே.பி.முனுசாமி-க்கும் பொருந்தும் அல்லவா.

* மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். எனவே ஜூன் 4-க்கு பிறகு கடுமையான திமுக, பாஜக எதிர்ப்பை முன்னெடுக்க வேண்டும்.
Share on:

குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!


குற்றாலம் மலைப் பகுதியில் கன மழை. அருவிகளில் வெள்ளப்பெருக்கு. பழைய குற்றால அருவி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு பேர் மீட்பு :அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிறுவனின் சடலம் மீட்பு.

குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இழுத்துச் சொல்லப்பட்ட ஐந்து பேரில் 4 பேர் மீட்கப்பட்டனர். சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை மற்றும் மிகவும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் சிறிதளவும் , பழைய குற்றால அருவியில் அதைவிட அதிகமாகவும் தண்ணீர் விழுந்தது. மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஓரமாக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தலையை நனைத்துச் சென்றனர்.

ஆனால் பழையகுற்றால அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலத்தில் குவிந்தனர். வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து ஆனந்தமாய்க் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் இன்று, குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் பழைய குற்றால அருவி, மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

பிற்பகல் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட தீடீர் வெள்ள பெருக்கினால் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திக் கொண்டு வெள்ளம் பாய்ந்து வந்தது. சிறிது நேரத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.

வெள்ளப்பெருக்கில் ஐந்து பேர் சிக்கினார். இது குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிஷோர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விரைந்து சென்றனர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இவர்களுக்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி. சுடலையாண்டி, ஊராட்சி மன்ற செயலாளர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் ஆயிரப்பேரி ஊர் பொதுமக்கள் உதவி புரிந்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) என்ற சிறுவன் காணாமல் போனார். அவரைத் தேடும் பணி தீவிரமடைந்ததது. இந்த நிலையில், இச்சிறுவன் அரை கிலோ மீட்டர் தூரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அவரது குடும்பத்தாரையும் அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வேறு யாரேனும் வெள்ளத்தில் சிக்கினார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பழைய குற்றாலத்தில் முகாமிட்டு மீட்பு பணியை பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் சிக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Share on:

வைகை, முல்லை பெரியாற்றில் அப்படியே மாறும் நிலைமை.. தேனி மாவட்ட மக்களுக்கு கலெக்டர் வார்னிங்!


முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வைகை ஆகிய ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆற்றங்கரைப் பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது என்று தேனி கலெக்டர் எச்சரித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக அனைத்து ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்துக்கு நேற்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்களுக்கு ஆரஞ்சு (மிககனமழை) எச்சரிக்கையும், வருகிற 20-ந்தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கையும் (ரெட் அலார்ட்) விடுத்துள்ளது.

எனவே மாவட்டத்தில் அனைத்து வட்டத்திலும் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் ஊருணிகளில் நீர் நிரம்ப உள்ளதால் வெள்ளப்பெருக்கின் போது அவசரகால பணியினை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்கள் கவனமுடனும், முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வைகை ஆகிய ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆற்றங்கரைப் பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது.

நீர்நிலைகளில் அதிக நீர்வரத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துவைக்கவோ மற்றும் வேறு காரணங்களுக்காகவோ நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் உள்ளாட்சி அமைப்பினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 43 இடங்களில் கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் வெள்ளம் மற்றும் மழையினால் பாதிப்புக்குள்ளாகும் மக்களை தங்கவைக்க அனைத்து அடிப்படை வசதிகளுடைய 66 தங்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் நிவாரண முகாம்களாக தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 04546 – 250101 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share on:

கஷ்டப்பட்டு விளைய வைத்த நெல்.. தார்ப்பாய் கூட போடாமல் அலட்சியம்.. மழையால் 5000 மூட்டைகள் சேதம்!


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 5,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜபுரத்தில் மதுரமங்கலம், சிவன்கூடல், மேல்மதுர மங்கலம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

அப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. ராமானுஜபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளை பாதுகாக்க தார்ப்பாய் வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை முறையாக தார்ப்பாய் கொண்டு மூடப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு நெல்லை விளைவித்து, தாங்கள் அரசிடம் கொடுத்த நிலையில் மழைக்காலம் என்றாலே நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவது தொடர்கதையாகி வருவதாகவும், இதனால் அரசுக்கு பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Share on: