இபிஎஸ் பொதுச்செயலாளர் அறிவிக்கப்பட்டதும் மனசுல எம்ஜிஆர் நினைப்போ? எதுக்கு இந்த போலி வேடம்? கே.சி.பழனிசாமி!


தேர்தலில் வெற்றிபெற்று காட்டினாள் மட்டுமே தலைவராக இருக்க முடியும். அந்த வெற்றியும் என்பது எல்லோரும் சேர்ந்த கூட்டு முயற்ச்சியாக மட்டும் தான் இருக்குமே தவிர எடப்பாடி என்கிற தனிமனிதனுக்கான வெற்றி என்று அது அமையாது என கே.சி.பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அவ்வப்போது அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் மக்கள் செல்வாக்கை நிரூபித்தால் மட்டுமே போற்றப்பட்டார்கள். போலியாக உருவகப்படுத்திக்கொள்ளவில்லை என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து தன்னை ஒரு #புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-ஆகவும் #ஜெயலலிதா அம்மா-வாகவும் பாவித்து ஒரு மாய தோற்றத்தை உருவாக்க எடப்பாடி முயற்சிக்கிறார். அவருடைய அடிவருடிகள் அவரை அடுத்த #எம்ஜிஆர் போலவும் அம்மா போன்ற ஆளுமை மிக்க தலைவர் போன்றும் காட்ட நினைக்கிறார்கள். ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் மக்கள் செல்வாக்கை நிரூபித்தால் மட்டுமே போற்றப்பட்டார்கள். போலியாக உருவகப்படுத்திக்கொள்ளவில்லை.

* எடப்பாடி பழனிசாமியின் உண்மையான பிறந்த நாள் (20.03.1954) ஆனால் அரசாங்க ஆவணங்களில் (12.05.1954) என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அனைவரும் (மே,12) கொண்டாடுகிறார்கள். ஆனால் அதையே எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து கொண்டாடுகிறார்.

* தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் களப்பணியை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அம்மா பாணியில் அறிவித்தார். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு மன்சூர் அலிகான் தான் முன்வந்தார். தே.மு.தி.க-வை தவிர்த்து வேறு எந்த கட்சியும் கூட்டணியில் இடம்பெறவில்லை.

* தேர்தல் முடிவுகள் வரும் முன்பே யார் சரிவர வேலை செய்யவில்லை என்று ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டு ஆரம்பமாகிவிட்டது. இதுபோன்று தன்னை உருவகப்படுத்துகிற போலிகளை மக்கள் நம்பமாட்டார்கள். எடப்பாடி எடப்பாடியாகவே இருங்கள். தேர்தலில் வெற்றிபெற்று காட்டினாள் மட்டுமே தலைவராக இருக்க முடியும். அந்த வெற்றியும் என்பது எல்லோரும் சேர்ந்த கூட்டு முயற்ச்சியாக மட்டும் தான் இருக்குமே தவிர எடப்பாடி என்கிற தனிமனிதனுக்கான வெற்றி என்று அது அமையாது. இதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

* உங்களுக்காக இன்று பலர் மண் சோறு சாப்பிடலாம், தீ சட்டி ஏந்தலாம் அது எல்லாம் உங்கள் மூலமாக பணம் சம்பாதித்தவர்கள் உங்களை மகிழ்வித்து இன்னும் பலனடைய நினைக்கிறவர்கள் செய்யலாம். ஆனால் இது எல்லாம் ஆட்சியை பிடிப்பதற்கு உதவாது. எனவே மக்களை தேடி, தொண்டர்களை தேடி இந்த இயக்கம் பயணிக்க வேண்டும். சிந்தித்து செயல்படுங்கள் என கே.சி.பழனிசாமி எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Share on:

சவுக்கு சங்கரை கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்.. கோவை நீதிமன்றம் அனுமதி.. ஆனால்.. ஒரு கண்டிஷன்!


கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி உள்ள யூ டியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அவர் ஒருநாள் போலீசார் மூலம் விசாரணை செய்யப்படுவார். இந்த வழக்கு விசாரணையின் போது போலீசார் தன்னை துன்புறுத்துவதாக சவுக்கு சங்கர் தரப்பு இன்று கோர்ட்டில் கூறியது . இதையடுத்து போலீஸ் காவல் விசாரணையின்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை வழக்கறிஞரை சவுக்கு சங்கர் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதாவது போலீஸ் காவல் விசாரணையின் போது 3 மணி நேரங்களுக்கு ஒருமுறை ஒரு சில நிமிடங்கள் மட்டும் சவுக்கு சங்கரை அவரின் வழக்கறிஞர் சந்திக்க முடியும்.

சோதனை; குண்டாஸ் பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் இன்று மருத்துவம் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார். சவுக்கு சங்கருக்கு வலது கையில் மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் கோவை சிறையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக முழக்கம் போட்டார். மீண்டும் வலது கையில் மாவு கட்டு போட்டு அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த முடிவுகள் கோர்ட் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்.

ஏற்கனவே யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் வீடுகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது குண்டாஸ் பதியப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில். சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் (எ) சவுக்கு சங்கர். 1/48, த/பெ.ஆச்சிமுத்து, மதுரவாயல், சென்னை என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு. தற்போது கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவர்கள் சங்கர் (எ) சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை. கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் (எ) சவுக்கு சங்கர் என்பவருக்கு இன்று (12.05.2024) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.

அவர் மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சங்கர் (எ) சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும். மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது, என்று கூறியுள்ளனர்.
Share on:

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகத்துக்கே போகக்கூடாது.. சுப்ரீம் கோர்ட் விதித்த 5 நிபந்தனைகள்!


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், 5 முக்கியமான நிபந்தனைகளை விதித்துள்ளது. அலுவல் கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான நடந்து வருகிறது. டெல்லியில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அது தொடர்பாக விசாரிக்க டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். சிபிஐ உடன் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார்.

கெஜ்ரிவால் கைது: அமலாக்கத்துறையின் இந்த தொடர் கைது நடவடிக்கையால் ஆம் ஆத்மி அரசுக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கெஜ்ரிவால் கைதுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனது கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்: நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. வரும் ஜூன் 1ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அவரை வரும் ஜூன் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டுள்ளது.

இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதோடு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம் 5 முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 நிபந்தனைகள்:

1. அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் டெல்லி தலைமைச் செயலகம் செல்லக்கூடாது.

2. டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனாவின் ஒப்புதல் பெற்ற கோப்புகளுக்கு அவசியமானால் கையெழுத்திடுவது தவிர, வேறு அலுவல் சார்ந்த கோப்புகளில் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்து போடக்கூடாது.

3. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு குறித்து, குறிப்பாக, அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்டு, தான் கைதாகியுள்ள சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது.

4. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான வழக்கு சம்பந்தப்பட்ட எந்த சாட்சியுடனும் தொடர்புகொள்ளக் கூடாது, டெல்லி மதுபான கொள்கை வழக்குடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ கோப்புகளை அணுகுவது தடை செய்யப்பட்டுள்ளது.

5. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ. 50,000 மதிப்புள்ள ஜாமீன் பத்திரங்களையும், அதே தொகைக்கு ஒரு உத்தரவாத பத்திரத்தையும் சிறைக் கண்காணிப்பாளர் ஏற்கும் வகையில் வழங்க வேண்டும்.
Share on:

முத்திரை கட்டணங்களை பலமடங்கு உயர்த்தியது தமிழக பதிவுத்துறை!


ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது.

கடந்தாண்டு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவு அடிப்படையில், பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக அரசு பலமடங்கு உயர்த்தியுள்ளது. மேலும் இந்திய முத்திரைச் சட்டத்தில் தமிழகத்துக்கு திருத்தங்களையும் செய்துள்ளது. இந்த திருத்தங்கள் கடந்த மே 3 முதல்அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், தத்தெடுத்தலுக்கு முன்பிருந்த ரூ.100 முத்திரைக் கட்டணமானது ரூ.1000ஆகவும், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைக் கட்டணம் ரூ.20 என்பது ரூ.200ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சங்கம் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300 லிருந்துஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்றும், கிரையபத்திரம் ரத்துக்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் ரூ.1000 ஆகவும், நகல் பத்திரத்துக்கு ரூ.20 ஆக இருந்த கட்டணம் ரூ.100 ஆகவும், பிரதி எடுத்தலுக்கு ரூ.25 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஒருவர் தான் மற்றொருவரிடம் வாங்கிய சொத்தை அவருக்கே திருப்பியளிப்பதாக இருந்தால், அது கிரைய பத்திரமாக கருதப்பட்டு வழிகாட்டி மதிப்பில் 7 சதவீத கட்டணம், 2 சதவீதம் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதுரூ.1000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சங்கத்துக்கான ஒப்பந்த பதிவுக்கு ரூ. 200 அல்லது ரூ.500 என இருந்த கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அல்லாத பாகப்பிரிவினைக்கு ஒவ்வொரு பாகத்துக்கும் 4 சதவீதம் என்பது, ஒவ்வொருபாகத்துக்குமான சந்தை மதிப்பில் 4 சதவீதம் என திருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பாகப் பிரிவினை செய்யும்போது, அதில்ஒருவர் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவரது சட்டப்படியான வாரிசுகள், முன்பு குடும்பத்தினர் அல்லாதவராக கருதப்படுவர். ஆனால், தற்போது புதிய திருத்தத்தில், அந்த சட்டப்படியான வாரிசுகளும் குடும்ப அங்கத்தினராக கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மேலும் பங்குதாரர் பதிவுக்கான கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.1000-ஆக உயர்ந்துள்ளது. மேலும், பொது அதிகார பத்திரத்தை பொறுத்தவரை, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை ஒரே பதிவில் வாங்குவதற்காக வழங்கப்படும் சிறப்பு பொது அதிகாரம், ஒரு நபர்அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பதிவுக்கு மட்டும் வழங்கப்படும் சிறப்பு பொது அதிகாரத்துக்கு ரூ.5 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆனது.

மேலும், 5 நபர்களுக்கு இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ செயல்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் பொது அதிகாரப் பத்திரத்துக்கு முன்பு ரூ.100 முத்திரைக் கட்டணம் இருந்த நிலையில் அது ரூ.1000 ஆகவும், 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு ரூ.175-லிருந்து ரூ.1000 ஆகவும் முத்திரைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அசையா சொத்துக்கள் விற்பனைக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு சொத்தின் சந்தைமதிப்பில் 4 சதவீதம் என முத்திரைக் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. அசையா சொத்து விற்பனைக்காக குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்குமுத்திரைக் கட்டணம் ரூ.1000 எனவும், குடும்பத்தினர் அல்லாதவராக இருந்தால் சொத்தின் சந்தை மதிப்பில் 1 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொத்து அடமானத்தை திரும்ப பெறுவதற்கான முத்திரைக் கட்டணம் ரூ.80-லிருந்து ரூ.1000 ஆகவும், பிணை பத்திரத்துக்கு ரூ.80-லிருந்து ரூ.500 ஆகவும், செட்டில்மென்ட் திரும்ப பெறுவதற்கு ரூ.80-லிருந்து ரூ.1000 ஆகவும், குத்தகையை ஒப்படைப்பதற்கான முத்திரைக் கட்டணம் ரூ.40 லிருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

மேலும் அறக்கட்டளையின் ஒரு அறங்காவலரிடம் இருந்து மற்றொரு அறங்காவலர் அல்லது அதே அறக்கட்டளையின் ஒரு பயனாளருக்கு உரிமை மாற்றம் செய்யும் போது ரூ.30 ஆக இருந்தமுத்திரைக் கட்டணம் ரூ.1000 ஆகவும், அறக்கட்டளை உருவாக்கத்துக்கு ரூ.180 ஆக இருந்த முத்திரைக் கட்டணம் ரூ.1000 ஆகவும், அறக்கட்டளை கலைத்தலுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.120 லிருந்துரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டது.

கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ், கட்டுமான துறை எதிர்ப்பு: முத்திரை மற்றும் பதிவுக் கட்டணத்தை அநியாயமாக, ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, என்ன வழிகாட்டி மதிப்பு இருந்ததோ அதே மதிப்பை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பொது அதிகாரத்துக்கான கட்டண உயர்வு குறித்து இந்திய கட்டுநர் சங்கத்தின் நகராட்சி மற்றும் டிடிசிபி குழு தலைவர் எஸ்.ராமபிரபு கூறும்போது, ‘‘இந்த கட்டண உயர்வால் வீடு வாங்குவோரின் சுமை அதிகரிக்கும்’’ என்றார்.
Share on:

போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து!


போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை; அப்படியெனில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கும்?” என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

‘கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்’ என வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ”கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 2486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது?” என்பது குறித்து தமிழக உள்துறை செயலர், தமிழக டிஜிபி ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், ”போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை; அப்படியெனில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கும்?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Share on:

இன்றோடு இந்த திமுக அமைச்சரவை பதவியேற்று மூன்றாண்டு காலம் ஆகிறது முதல்வர் காணொளி வாயிலாக தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று சொல்கிறார். உண்மையாகவே மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறார்களா?


மூன்றாண்டு கால #திமுக ஆட்சியின் சாதனைகள்:

* மகளிருக்கு ஆயிரம் உதவித்தொகை, (அதுவும் வாக்குறுதி அளித்தபடி அனைவருக்கும் வழங்காமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கியது எல்லோரையும் பயனாளிகள் ஆக்கவில்லை.)

* மகளிருக்கு இலவச பேருந்து பயணம், (திட்டம் துவங்கிய பொழுது நன்றாக இருந்தது ஆனால் தற்பொழுது பேருந்துகளின் எண்ணிக்கையும், பயணத்திற்கான சுற்றும்(Trips) குறைக்கப்பட்டுள்ளது மேலும் பேருந்துகளின் தரம் மிக மோசமாக உள்ளது.)

* இரண்டு லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள், (இது செந்தில் பாலாஜியால் விழா நடத்தி அறிவிக்கப்பட்டது ஆனால் அது அறிவிப்பு அளவிலேயே உள்ளது. உண்மையான பயனாளிகளின் எண்ணிக்கை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.)

அதிமுக ஆட்சியில் இருந்த தற்போது கைவிடப்பட்ட சிறப்பான திட்டங்கள்:

* தாலிக்கு தங்கம் திட்டம்.

* தொட்டில் குழந்தை திட்டம்.

* பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்.

* அம்மா உணவகம்.

* அம்மா மினி கிளினிக்.

* குடிமராமத்து திட்டம்.

* விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம்.

மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் வேதனைகள்:

* மின்சார கட்டண உயர்வு.

* வீட்டு வரி உயர்வு.

* தண்ணீர் வரி உயர்வு.

* சொத்து வரி உயர்வு.

* பத்திர பதிவு கட்டணம் உயர்வு.

* தொழில் வரி உயர்வு.

* போக்குவரத்து அபராத தொகை உயர்வு (100 ரூபாய் இருந்த ஹெல்மெட் அபராதம் திமுக ஆட்சியில் 1000 கந்துவட்டியை மிஞ்சியது).

* அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு.

* பால் விலை உயர்வு

* கட்டுமான பொருட்களின் விலை உயர்வு

* சாலை வரி உயர்வு

* தமிழகமெங்கும் டாஸ்மாக் பார்கள் தங்கு தடையின்றி செயல்படுகிறது. அதுபோக பட்டிதொட்டியெங்கும் குடிசை தொழிலை போல மது விற்பனை நடந்துகொண்டுள்ளது.

* கஞ்சா, குட்கா, அபின், Cool Lip போன்ற போதை வஸ்துக்கள் பள்ளி மாணவர்கள் வரை பரவியுள்ளது.

* கடந்த மூன்று ஆண்டுகளில் பத்திரிக்கை செய்திகளை புரட்டினால் தவறாமல் கொலைகள், கொள்ளைகள், போதை பொருட்கள் நடமாட்டம், வன்முறை போன்ற செய்திகள் இடம்பெறுகின்றன இதில் பல இடங்களில் திமுகவினரே கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். எனவே சட்டம் ஒழுங்கு என்பது இந்த ஆட்சியில் தான் மோசமாக உள்ளது.

கலைஞர் காலத்தில் குறைந்தபட்சம் திமுக கட்சிக்காரர்கள் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள் ஆனால் இன்றைக்கு திமுக கட்சிக்காரர்களே இந்த அரசு மீது சலிப்படைந்து இருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு அனுகூலமாக இருப்பது அதிமுக என்கிற மாபெரும் இயக்கம் தன் வலிமை இழந்து எடப்பாடி பழனிசாமி என்கிற சுயநலமிக்கவர் கட்டுப்பாட்டில் இருப்பது தான். “எங்கள் மீதான ஊழல் வழக்குகளில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டாம். உங்கள் ஊழலை பற்றி நாங்கள் பேச மாட்டோம்” என்று இருவருக்குள்ளான மறைமுக ஒப்பந்தம் மற்றும் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளால் தான் இந்த அரசாங்கத்தின் அதிருப்திகள் பெரிய அளவில் பேசப்படவில்லை.

ஒன்றுபட்ட அதிமுக வலிமையான தலைமையின் கீழ் உருவாகிற பொழுது இந்த ஆட்சியை தமிழக மக்கள் தொடர அனுமதிக்க மாட்டார்கள்.
Share on:

பிளஸ் 2 தேர்வு: மாவட்ட வாரியாக தேர்ச்சி! திருப்பூர் முதலிடம்! கடைசி இடம் எந்த மாவட்டம்?


தமிழகத்தில் அதிக தேர்ச்சி சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில் நேற்றைய தினம் நீட் தேர்வும் நடந்து முடிந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்கக்கத்தின் இயக்குநர் சேதுராமன் வெளியிட்டார்.

7.72 லட்சம் பேரில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 3,25,305 பேர் தேர்வு எழுதினர். அது போல் 3,93,890 மாணவிகள் தேர்வு எழுதினர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதினார்.

இவர்களில் மாணவர்கள் 92.37 சதவீதமும் மாணவிகள் 96.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் மொத்தமாக 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4.07 சதவீதம் மாணவியர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி அடைந்துவிட்டார்.

பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி விகிதங்களை கொண்ட மாவட்டங்கள் எவை தெரியுமா?

திருப்பூர் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் முதலிடத்தையும் சிவகங்கை, ஈரோடு 97.42 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும் அரியலூர் 97.25 சதவீதத்துடன் 3ஆம் இடத்தையும் கோவை 96.97 சதவீதத்துடன் 4ஆம் இடத்தையும் நெல்லை, பெரம்பலூர் தலா 96.44 சதவீதத்துடன் 5ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.71 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில் 91.32 சதவீதம், சென்னை 94.48 % திருவண்ணாமலை 90.47 சதவீதமும் வேலூரில் 92.53 சதவீதமும் திருப்பத்தூரில் 92.34 சதவீதமும் ராணிப்பேட்டையில் 92.28 சதவீதமும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசி இடம் திருவண்ணாமலை மாவட்டத்திற்குதான். கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.71 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில் 91.32 சதவீதம், சென்னை 94.48 % திருவண்ணாமலை 90.47 சதவீதமும் வேலூரில் 92.53 சதவீதமும் திருப்பத்தூரில் 92.34 சதவீதமும் ராணிப்பேட்டையில் 92.28 சதவீதமும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 94.27 சதவீதமும் சேலத்தில் 94.60 சதவீதமும் நாமக்கல் 96.10 சதவீதமும் கிருஷ்ணகிரி 91.87 சதவீதமும் தருமபுரி 93.55 சதவீதமு் புதுக்கோட்டை 93.79 சதவீதமும் கரூர் 95.90 சதவீதமும் திருச்சி 95.74 சதவீதமும் நாகை 91.19 சதவீதமும் மயிலாடுதுறை 92.38 சதவீதமும் திருவாரூர் 93.08 சதவீதமும் தஞ்சை 93.46 சதவீதமும் விழுப்புரம் 93.17 சதவீதமும் கள்ளக்குறிச்சி 92.29 சதவீதமும் கடலூர் 94.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடத்தை பிடித்தது திருவண்ணாமலை மாவட்டம். கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றது.
Share on:

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை தீவிரம்!


நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம், “எனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என நான்கு பக்கங்கள் கொண்ட புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில், கரைசுத்து புதூர் உவரியில் (நாடார் உவரி) உள்ள தனக்குச் சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமாரில் உடல் இன்று (மே 4) மீட்கப்பட்டது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் நடந்துள்ள இச்சம்பவம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

இதற்கிடையே, கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், மாவட்ட எஸ்பிக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், ரூபி மனோகரன் உட்பட சில காங்கிரஸ் தலைவர்களை குற்றஞ்சாட்டி வாசகங்கள் உள்ளன இதனையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக சென்னையில் இருந்து நெல்லை விரைந்துள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்படுவதாக நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
Share on:

இ பாஸ்: நீலகிரியில் உள்ளவர்கள் வெளி மாவட்ட வாகனங்களை வைத்திருந்தால் என்ன செய்வது? வெளியான விளக்கம்


நீலகிரி மாவட்ட பதிவு எண் (TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி வந்து உரிமம் மாற்றம் செய்து இருந்தால் ஆவணங்களை காட்டி இ- பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். கோடைகாலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இ பாஸ் கட்டாயம்:சுற்றுலாப்பயணிகள் அதிமாக வந்து குவிந்து விடுவதால், கூட்டம் அலைமோதுகிறது. மேலும் அதிகரிக்கும் வாகனங்களால் போக்கு வரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது.இந்த நிலையில், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்: இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. உள்துறை மற்றும் பொதுத்துறை இணைந்து இ – பாஸ்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கியுள்ளது. இந்த நெறிமுறைகள் அனைத்தும் தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்ட பதிவெண்: தகவல் தொழில் நுட்ப துறை சார்பாக இ பாஸ் பெறுவதற்கான இணையதளமும் உருவாக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், இ- பாஸ் விதிமுறைகள் தொடர்பாக நீலகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் ஒரு அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நீலகிரி மாவட்ட பதிவு எண் (TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.

வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரிக்கு மாற்றம் செய்திருப்பவர்கள், அதற்கான ஆவணங்களுடன் உதகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அணுகி இ-பாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். இ-பாஸ் பெற வாகனத்தின் அசல் பதிவு சான்று, காப்பு சான்று, புகைப்பட சான்று அளிக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளார்.

இ பாஸ் விதிகள்: மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு அமலுக்கு வர இன்னும் 4 நாட்களே உள்ளது. எனவே, ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் வழங்குவதற்கான விதிகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாளைக்கு எத்தனை வாகனங்கள் அனுமதிக்கப்படும்.. எதன் அடிப்படையில் இ- பாஸ் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ பாஸ் பெறாமல் வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிகிறது.
Share on:

வங்கிகளின் வட்டி வசூல் ரிசர்வ் வங்கி அதிருப்தி!


வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள், வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதாகவும், இதனை திருத்திக் கொண்டு, பெறப்பட்ட கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கே திருப்பி வழங்குமாறும், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் வரை இந்நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட நேரடி பரிசோதனைகளின் போது, வட்டி வசூலிப்பதில் சில நியாயமற்ற நடைமுறைகளை கண்டறிந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நியாயமான நடைமுறை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், இதனை திருத்திக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது. உதாரணமாக, சில நிறுவனங்கள் கடன் தொகை விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து வட்டி விகிதத்தை வசூலிக்காமல், கடன் ஒப்பந்தம் மேற்கொண்ட நாளிலிருந்தே வசூலிக்க தொடங்கி விடுகின்றனர். காசோலை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் இதே போன்று நடைபெறுகிறது.

இன்னும் சில நிகழ்வுகளில், கடன் திருப்பி செலுத்துவதில் கால தாமதம் ஏற்படும் சூழலில், ஒரு மாதத்தின் இடையிலேயே அந்த தொகை திருப்பி செலுத்தப்பட்டாலும் முழு மாதத்திற்கும் வட்டி வசூலிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
Share on: