தனியார் நிறுவனம் ரூ.225 கோடி மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக இன்று சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்
சென்னையை சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனம் ரூ.225 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நிறுவனத்துக்கு தொடர்புடைய 13 இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிறுவனத்தை சேர்ந்த ஜேம்ஸ் வால்டர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என மதுரை பாஜக நிர்வாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் அந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெல்லவில்லை.
இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாம் தோற்றோம் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியதிலிருந்து பிரச்சினை எழுந்தது. அதற்கு பாஜக விமர்சித்தது. இதையடுத்து வெறும் 4 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு சட்டசபையில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என கூறி வந்தது. இது அதிமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தரம் தாழ்ந்த வார்த்தையால் விமர்சித்தார். அப்போதும் இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவ்வப்போது இரு தரப்புக்கும் சண்டை ஏற்படுவதும் பின்னர் சமாதானமாக போவதுமாக இருந்தது. இந்த நிலையில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை ஒரு பத்திரிகை பேட்டியில் ஊழல்வாதி என மறைமுகமாக விமர்சித்தார். இது அதிமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இனிவரும் காலங்களில் திமுக. அதிமுக கட்சிகள் கூட்டணியின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 17% சதவீத வாக்கு வங்கிகளை கடந்து செல்கின்ற பாஜகவுடன் போட்டியிட தயாரா? நாங்கள் தேர்தல் களத்தில் பணிபுரிபவர்கள். உங்களுடைய பலமும், பலவீனமும் எங்களுக்கு தெரியும். ஆளும்கட்சி செய்கின்ற ஊழல்களை கண்டறிந்து DMK File 1 & DMK File 2 என்று நடவடிக்கை எடுத்து ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பிய எங்களுக்கு ஆண்ட அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடி எடுத்து எங்களுடைய தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும் என்று கருதுகிறீர்கள். மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.
போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சியில் இருந்த செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. அந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணவர்த்தனையின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என அவரது மனைவி ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு 3ஆவது நீதிபதியிடம் சென்றது. அவர் செந்தில் பாலாஜி தனது மீது தவறில்லை என்றால் அதை நிரூபிக்கட்டும். அவரது கைது சட்டவிரோதம் அல்ல என தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு 3ஆவது நீதிபதியிடம் சென்றது. அவர் செந்தில் பாலாஜி தனது மீது தவறில்லை என்றால் அதை நிரூபிக்கட்டும். அவரது கைது சட்டவிரோதம் அல்ல என தீர்ப்பளித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டப்படி சரியானது. அமலாக்கத் துறை அடுத்த 5 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
வரும் 12 ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்றைய தினம் புழல் சிறைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு நீதிபதி அல்லியின் உத்தரவு கடிதத்தை வழங்கினர். இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் 3 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அமலாக்கத் துறை சோதனையின் போது சிக்கிய ஆவணங்களை அடிப்படையாக வைத்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் ஓய்வெடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் இன்று காலை 6 மணிக்கு விசாரணை தொடங்கியதாக தெரிகிறது
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் அமலாக்கத் துறை தரப்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தனர். செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது என அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக கடந்த ஆக.2ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்த தீர்ப்பில், “செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியான நடவடிக்கை. அதேபோல குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு (2)ன்- கீழ் அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும்போது அந்த நபரை காவலில் வைக்கலாம் என கூறுகிறது. அது நீதிமன்ற காவலாகவும் இருக்கலாம் என்ற புரிதலின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.
மேலும் அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும் போது 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுப்பம் ஜே குல்கர்னி என்ற வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளது. எனவே அந்த குறிப்பிட்ட விவகாரத்தை மட்டும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அமலாக்கத் துறையினர் அடுத்த ஐந்து தினங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார். அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “செந்தில் பாலாஜியின் உடல் நலத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்று தெரிவித்தார். இதனையடுத்து நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும் முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சட்டம் ஒழுங்கு ஏ.ஐ.ஜி உமா, சென்னை காவல்துறை தலைமையக ஏ.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி அங்கித் ஜெயின், தி.நகர், டெபுடி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட எஸ்.பி சிவக்குமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. வன்முறையால் சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடப்பதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் இயங்காததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சித்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கு வந்த காவல்துறையினர் இரண்டு கட்சி தொண்டர்களையும் அடித்து விரட்டினர் இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் பெண் காவல்துறையினர் காயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சந்திரபாபு நாயுடு வாகனத்தின் மீது ஏறி ஆவேசமாக உரையாற்றினார். அவரை சூழ்ந்து நின்று சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு அளித்தனர். இதனால் பதற்றம் அதிகரித்தது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க காவல்துறையினர் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.
இதன் காரணமாக தமிழகம் ஆந்திரா இடையே போக்குவரத்தை நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் பேருந்து நிலையத்தில் 30 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் இயங்காததால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதிமுகவில் பயணம் செய்துவிட்டு அதிமுகவில் ஒரு அணியில் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார் அவர் மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவை பற்றி இன்று ஒரு கூட்டத்தில் நிக்க தவறாக ஒரு விமர்சனத்தை வைத்து உள்ளார் அமைச்சராக இருந்தபோது நாங்கள் அனைவரும் திருமதி சசிகலா குடும்பத்தை சார்ந்த திவாகரன் தினகரன் இவர்கள் இவர்கள் குடும்பத்தில் எங்களை ஊழல் செய்ய சொன்னார்கள் கட்டுக்கட்டாக நாங்கள் பணத்தை அந்த குடும்பத்திற்கு கொடுத்தோம் என்று தவறான தகவலை என்று கூறியுள்ளார்.
புரட்சித்தலைவி அம்மாவை மிக கேவலப்படுத்தி இன்று பேசியுள்ள இவர் கட்சியில் இருந்து ஏன் எடப்பாடி நீக்கவில்லை. உண்மையான தொண்டர்கள் இன்று மிக வருத்தம் அடைகிறார்கள் இதைப்பற்றி இந்த வாரத்திற்குள் நீங்கள் விவாதிக்க வேண்டும் ஒரு ஒரு தலைப்பில் அண்ணன் கே சி பழனிச்சாமி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்
கடந்த அதிமுக ஆட்சியில் சாலை பணிகளுக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது .இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி வழங்கியது.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார் .சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் சாலை பணிகள் மேற்கொள்ள உறவினர்கள் ,நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக அமைப்பு செயலாளர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார் .அந்த புகாரில் வேலுமணி தொடர்புடைய ஏழு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக கூறப்பட்டது .மேலும் விதிகளை மீறி 20 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது.
ஆரம்ப கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை நடத்தி அரசிடம் அறிக்கை அளித்தது .தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கூறி வேலுமணி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .
எனவே அவருக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது .மற்றவர்களுக்கு எதிரான வழக்கில் தொடர்ந்து புலன்விசாரணை மேற்கொள்ளவும் ,வேலுமணியை தொடர்புபடுத்த புதிய ஆதாரங்கள் கிடைத்தால் ,இறுதி அறிக்கையில் அவரையும் சேர்க்கலாம் எனவும் ,உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வேலுமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 5 நிறுவனங்கள் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுதாக்கல் செய்தன.
நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் பொது ஊழியர், அவருக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எனவே தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், தமிழக அரசு சார்பில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை 6 வாரங்களில் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
10 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் மக்கள் வறுமையில் இருந்து மீண்டு வரவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார் அண்ணாமலை இந்த 10 ஆண்டுகளில் செய்யமுடியாதவர்கள் இனி என்ன செய்ய போகிறீர்கள்.
புரட்சித்தலைவர் 10 ஆண்டுகள் தான் தமிழகத்தை ஆண்டார் அது அவர் மறைந்தும் 35 ஆண்டுகள் கடந்தும் இன்று உங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்போம் என்று பேசும் அளவிற்கு உள்ளது இது இன்னும் 100 ஆண்டுகளுக்கு பேசப்படும். ஆனால் உங்களால் 10 வருடத்தில் ஏதும் செய்யமுடியவில்லை.
பின்குறிப்பு: புரட்சித்தலைவர் ,இளைய புரட்சித்தலைவர் என்று கூறும் முன்பு இதற்கு முன்பு கருப்பு எம்ஜிஆர்,சின்ன எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள் அதை கொஞ்சம் நினைவில் கொண்டு எம்ஜிஆர் தொண்டர்களிடம் மோதாதீர்கள்.