விடியல் அரசாங்கம் நேற்றிலிருந்து பத்திரப் பதிவுத்துறை இணைய தளத்திலிருந்து நிலம் மற்றும் வீடுகளுக்கான சர்வே நெம்பரை உள்ளிட்டு வில்லங்க சான்றிதழ், அதாவது சொத்தை பொறுத்து யார் பெயரில் தற்போது உள்ளது எவ்வளவு அடமானம் வைத்துள்ளார்கள், யார் விற்பனை செய்துள்ளார்கள் முன் ஆவணம் (டைட்டில் டீட்) சுத்தமாக உள்ளதா என்று நாமே பரிசோதித்துக் கொள்ளும் வசதியினை வெப்சைட்டிலிருந்து எடுத்து விட்டார்கள்.
இனி மேல் சொத்து வாங்க வேண்டும் என்றால் அலுவலகம் சென்று ஒரு சர்வே நெம்பருக்கு குறைந்தது 500/- ரூபாய் பணம் செலுத்தி தான் வில்லங்கம் பார்க்க வேண்டும். மறைமுகமாக இது மக்களுக்கு இழைக்க கூடிய அநீதியாகும்.
ஒருவருக்கு வெறும் 5 ஏக்கர் நிலம் தான் உள்ளது, ஆனால் 10 சர்வே நெம்பர்களில் 30 செண்ட்…