கடந்த அதிமுக ஆட்சியில் சாலை பணிகளுக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது .இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி வழங்கியது.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார் .சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் சாலை பணிகள் மேற்கொள்ள உறவினர்கள் ,நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக அமைப்பு செயலாளர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார் .அந்த புகாரில் வேலுமணி தொடர்புடைய ஏழு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக கூறப்பட்டது .மேலும் விதிகளை மீறி 20 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது.
ஆரம்ப கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை நடத்தி அரசிடம் அறிக்கை அளித்தது .தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கூறி வேலுமணி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .
எனவே அவருக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது .மற்றவர்களுக்கு எதிரான வழக்கில் தொடர்ந்து புலன்விசாரணை மேற்கொள்ளவும் ,வேலுமணியை தொடர்புபடுத்த புதிய ஆதாரங்கள் கிடைத்தால் ,இறுதி அறிக்கையில் அவரையும் சேர்க்கலாம் எனவும் ,உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வேலுமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 5 நிறுவனங்கள் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுதாக்கல் செய்தன.
நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் பொது ஊழியர், அவருக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எனவே தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், தமிழக அரசு சார்பில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை 6 வாரங்களில் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
10 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் மக்கள் வறுமையில் இருந்து மீண்டு வரவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார் அண்ணாமலை இந்த 10 ஆண்டுகளில் செய்யமுடியாதவர்கள் இனி என்ன செய்ய போகிறீர்கள்.
புரட்சித்தலைவர் 10 ஆண்டுகள் தான் தமிழகத்தை ஆண்டார் அது அவர் மறைந்தும் 35 ஆண்டுகள் கடந்தும் இன்று உங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்போம் என்று பேசும் அளவிற்கு உள்ளது இது இன்னும் 100 ஆண்டுகளுக்கு பேசப்படும். ஆனால் உங்களால் 10 வருடத்தில் ஏதும் செய்யமுடியவில்லை.
பின்குறிப்பு: புரட்சித்தலைவர் ,இளைய புரட்சித்தலைவர் என்று கூறும் முன்பு இதற்கு முன்பு கருப்பு எம்ஜிஆர்,சின்ன எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள் அதை கொஞ்சம் நினைவில் கொண்டு எம்ஜிஆர் தொண்டர்களிடம் மோதாதீர்கள்.
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்திலுள்ள வளையமாதேவி, மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் இன்று உயர் நீதிமன்றத்தில் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தன்னுடைய மனுவில், “என்.எல்.சி நிறுவனத்துக்காக 2007-ம் ஆண்டு, நவம்பர் மாதம் எனது நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளாக அந்த நிலத்தைப் பயன்படுத்தாமல், தற்போது நெல் பயிரிடப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 26-ம் தேதி கால்வாய் வெட்டுவதாகக் கூறி, பயிர் விளைந்து நிற்கும் நிலத்தில் புல்டோசர்களை வைத்து நாசப்படுத்தியிருக்கின்றனர். என்னுடைய நிலம் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் 50,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பாடுபட்டு மேற்கொள்ளப்பட்ட விவசாயத்தையும், எங்களது வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தை சுவாதீனம் எடுக்கின்றனர். நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு, செட்டில்மென்ட் உரிமைச் சட்டத்தின் 101-வது பிரிவு என்பது, குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தை 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தாவிட்டால், உரியவரிடம் அந்த நிலத்தை திருப்பிக் கொடுக்க வகைசெய்வதால், அதன்படி எனது நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். நிலத்தில் அறுவடையை முடிக்கும்வரை எங்களது அனுபவ உரிமையில் தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு, வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி முறையிட்டார். அதை ஏறறுக்கொண்ட நீதிபதி, இன்று பிற்பகலில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்த வழக்கறிஞர் பாலு, “இந்தப் பிரச்னையால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது” எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட என்.எல்.சி தரப்பு வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “நண்பர் பாலு கடலூரில் பதற்றமான சூழல் நிலவுவதாகக் கூறுகிறார். அவரது கட்சியினரால்தான் பதற்றம் ஏற்படுகிறது. இதை அரசியலாக்குகின்றனர். நிலம் எப்படிக் கையகப்படுத்தப்பட்டது, எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை நாளையே அறிக்கையாகத் தாக்கல் செய்கிறோம்” என்றார்.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எத்தனை ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது என்ற நீதிபதியின் கேள்விக்கு, “விவசாயமே நடைபெறவில்லை” என என்.எல்.சி தரப்பு கூற, “அப்படியெனில், ஊடகங்களில் வெளியான புகைப்படத்தை நீங்கள் பார்க்கவில்லையா… எப்படி விவசாயமே நடைபெறவில்லை என்று கூறுகிறீர்கள்… விவசாய நிலத்தை சேதப்படுத்தினீர்களா, இல்லையா என்பதே என் கேள்வி. நிலத்தைக் கையகப்படுத்திவிட்ட பின்னர், ஏன் அவர்களை விவசாயம் செய்ய அனுமதித்தீர்கள்… இரும்புவேலி அமைத்திருக்க வேண்டியதுதானே?” என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பல கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு, “என்.எல்.சி-க்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் இருப்பதால், அது சாத்தியப்படவில்லை” என விளக்கமளிக்கப்பட்டது. அதையடுத்து, “அப்படியெனில், குறைந்தபட்சம் வெளிநாடுகளில் இருப்பதுபோல், நீங்கள் மேற்பார்வையாவது செய்திருக்கலாமே… நீங்கள் பயன்படுத்தாததால்தானே அவர்கள் விவசாயம் செய்தார்கள்?” என நீதிபதி கேள்வியெழுப்பினார்.
1973 மதுரை வந்த பிரதமர் இந்திராவை சந்தித்து திமுக அரசு மீது புகார் கொடுக்க சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலம் மதுரைக்குக் கிளம்பினார் தலைவர்.
இரவு நேரம் என்றாலும் கூட வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் மக்கள் ரயிலையே நிறுத்தியே விட்டார்கள். அதுவும் திருச்சியை நெருங்கும் போது ரயில் நகரவே வழியில்லை.
தலைவரை பற்றித்தான் நமக்கு தெரியுமே… எந்த தொண்டரையும் புறக்கணிக்காமல் அனைவர் வரவேற்பையும் ஏற்றுக்கொள்ள ரயில் மிக மிக மெதுவாக நகர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும்.
தாமதமாகிக்கொண்டே இருந்தது. ரயில் இந்த வேகத்தில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதாலும், தன்னால் ரயிலில் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகிறார்களே என்பதாலும் தலைவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.
கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்லும் விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே தலைவர் இருந்த ரயில் பெட்டிக்கே வந்தனர்.
கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவதுதான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்,” என்று கேட்டுக் கொண்டனர்.
அதோடு தலைவருடன் பயணித்தவர்களும்
“உங்களோடு பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்… எத்தனை நாட்களானாலும் பரவாயில்லை,” என்று சொல்ல,
உருகிப்போன தலைவர் நிலைமையை புரிந்து கொண்ட ரயிலிலேயே பயணத்தைத் தொடர முடிவு செய்தார்.
தன் நண்பர்களை இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி, வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன்னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.
இந்த வரலாறு மீண்டும் திரும்புமா? பொருத்திருந்து பார்ப்போம்.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்கள் பெயர்களை எழுதும் போதும் ,கையெழுத்திடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணையை பிறப்பித்தது
அந்த அரசாணையை பின்பற்றும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதனை சார்ந்த அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது .
அதில் தமிழ்நாடு அரசின் அரசாணையை செயல்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் ,ஆசிரியர்கள் ,பணியாளர்கள் உள்பட அனைவரும் வருகைப்பதிவு மற்றும் இதர ஆவணங்களில் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் ,மேலும் மாணவர்களையும் தமிழில் பெயர் எழுதவும் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும் .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருந்தது
ஒன்றா இரண்டா இந்த ஆட்சியின் 2 ஆண்டு ஊழலை எடுத்துச் சொல்வதற்கு ஒட்டுமொத்த 68 துறையிலும் பெரும் ஊழல் , தினம் அதிகாரிகளை வைத்து ஊழல் செய்வது உள்ளங்கை நெல்லிக்கனி ஆக தெரிந்த உண்மை மத்திய அரசு சோதனையில் பிடிப்பது போல பிடிப்பார், பின்னர் பிடித்த மந்திரிகளை சிறையில் அடைக்கிறார்ளா இல்லையே , டில்லியில் சத்யேந்திர ஜெயின் மந்திரி , டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஏன் ப.சிதம்பரத்தை என்று எல்லாரையும் ED சிறையில் அடைக்கும் ஆனால் தமிழ்நாட்டில் இவர் அப்பா செய்த உதவிக்கு RSS , BJP நன்றி கடன் செய்து கொண்டு இருக்கிறது.
இவர்கள் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ 5 என்ன 15 ரூபாய் கூட கேட்பார்கள் , எல்லாத்துக்கும் 2024 BJP.
அஇஅதிமுக ச லஞ்சத்திற்கும் , ஊழலுக்கும் நிச்சயம் அப்பாற்பட்ட கட்சி தான் 1977 – 1987 , புரட்சித்தலைவர் ஆட்சி புரிந்தவரை .
ஆனால் என்றைக்கு தீயசக்தியின் தீய சகதிகள் ச | ந என்ற குடும்பம் அம்மையாரை வசியம் செய்து தங்கள் கட்டுப்பாட்டில்( 1996 1996) கொண்டு வந்ததோ அன்றையில் இருந்து அது தீய சக்தி திமுகவோடுடை அப் செய்து கொண்டுவிட்டதன் விளைவு இன்றைக்கு அரசியல், தேர்தல் அரசு அலுவல்கள் , ஏன் மக்களவரை லஞ்சத்தின் (ஓட்டுக் பணம்) வரை லஞ்சம் ஒரு தொழில் அதில் திறமை திருடன் பெரிய பணக்காரன் என்ற நிலை உருவிவிட்டது , இதற்கு அண்ணா , MGR மறுபிறவிகள் வந்து தான தமிழ்நாடை காப்பாற்ற வேண்டும்
எனது வேலை,
எனது சம்பளம்,
எனது வீடு,
எனது வாகனம்,
எனது தொழில்,
எனது தோட்டம்,
எனது குடும்பம், போன்றவை,
என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை மட்டுமே,
மேற்குறிப்பிட்ட எனது இவை அனைத்தும் பாதுகாப்பானது.
மற்றபடி எல்லாமே புகையாக எழுவதற்கு அதிக நேரம் எடுக்காது.
இன்று ரஷ்யா-உக்ரைன் போரில், 2 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிற அண்டை நாட்டாரைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம்.
நமக்கு என்ன நடக்கும்…??? எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்…???
மேற்கே பாகிஸ்தான்
கிழக்கே வங்கதேசம்,
தெற்கே இந்தியப் பெருங்கடல்,
வடக்கே சீனா,
எவனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்…!
நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேறு நாடு இல்லை.
எனவே, மலிவான பெட்ரோல், இலவச ரேஷன் ஆகியவற்றை விட,
வலுவான தேசத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
மறுக்க முடியாத உண்மை!..
கோடநாடு வழக்கில் யார் யாரெல்லாம் தவறு செய்தார்களோ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். உண்மை குற்றவாளிகள் எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் சிறைத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது, கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேகதாது அணை விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பார். தமிழக அரசின் நிலைப்பாடு மேகதாது அணை அமைக்கக்கூடாது என்பதே ஆகும் என்றும் கூறினார்.
கோடநாடு விவகாரத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நடந்தது என்ன என்பதை தெளிவுபடுத்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்கிறபோது, கோபப்படுவதில் நியாயம் இல்லை. இது, பழிவாங்கும் போக்கு என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.