முன்னாள் சிறப்பு DGP. திரு.ராஜேஷ் தாஸ் அவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை மிக குறைவு!


முன்னாள் சிறப்பு DGP. திரு.ராஜேஷ் தாஸ் அவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை அவர் செய்த தவறை கணக்கில் எடுக்கும்பொழுது மிக குறைவு.ஒரு SP அளவு அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடமே இவ்வளவு அத்துமீறல் என்றால் அதற்கு கீழ் நிலையில் உள்ள DSP, Inspector, Sub Inspector நிலை என்ன?

அதனால் தமிழ்நாடு அரசாங்கம் மேல் முறையீடு செய்து அவருக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தரவேண்டும். #HigherPunishment #JusticeMatters @CMOTamilnadu
Share on:

“அதிமுக அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் புகாருக்கு ஆதாரம் தருகிறோம் “Raid” நடத்த தயாரா”

“அதிமுக அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் புகாருக்கு ஆதாரம் தருகிறோம் “Raid” நடத்த தயாரா” என்று கூறும் முதல்வர் அந்த ஆதாரங்கள் அடிப்படையில் நீங்கள் ஏன் இன்று வரை கைது செய்யவில்லை. இவ்வளவு நாட்கள் உங்களுக்குள் என்ன புரிந்துணர்வு இருந்தது.
,br>
வேலுமணி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க அனுமதித்தும் இது வரை நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?

Share on:

Continue Reading

பாஜகவும் திமுகவும் திட்டமிட்டு தேர்தல் களத்தை பாஜக vs திமுக என்று அமைத்து அதிமுகவை புறந்தள்ள நினைக்கிறார்கள்!


பாஜகவுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று 2018-லேயே கே சி பழனிசாமி எச்சரித்தும் அதை உணராமல் மாறாக அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு இப்பொழுது பாஜகவின் சுயரூபம் தெரிந்ததும் வருத்தப்படுகிறீர்கள்.

பாஜகவும் திமுகவும் திட்டமிட்டு தேர்தல் களத்தை பாஜக vs திமுக என்று அமைத்து அதிமுகவை புறந்தள்ள நினைக்கிறார்கள். அதனால் இப்பொழுதே விழித்திருங்கள்.

“விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்” “உன்போல் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டைவிட்டார்”
என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளை புரிந்து நடந்துகொள்ளுங்கள்.
Share on:

அண்ணாமலையின் இந்த கருத்து மிகவும் கண்டனத்திற்குரியது!


சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது குடும்பம் மட்டும் தான் குற்றவாளி என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அம்மா குறித்து உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பும் அளிக்கவில்லை.

உண்மையிலேயே அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்திருக்கிறாரா? இந்த விவரங்கள் அவருக்கு தெரியாததா? அல்லது எடப்பாடியை அவமானப்படுத்துவதாக நினைத்து அதிமுகவையும், அம்மாவையும் அவமானப்படுத்துகிறாரா அண்ணாமலை? அதிமுக தொண்டர்கள் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
Share on:

சென்னை பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுமா?

சென்னை பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுமா?

முதல்வர்: நிச்சயமாக நல்ல கோரிக்கை இது. பழைய பல்கலைக்கழகத்திற்கு பெயர் வைக்கலாமா? அல்லது புதிய பல்கலைகழகத்திற்கு வைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதென்ன சாதாரண விஷயமா மெட்ராஸ் யூனிவர்சிடி என்பதை சென்னை பல்கலைகழகம் என்று மாற்றுவதிலேயே சிக்கல் உள்ளது. காரணம் பட்டமளிப்பு சான்றிதழ்களில் வீண் குழப்பம் வரும் பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம் என்றால் கூடுதல் குழப்பம் சிக்கல் வரும்.

Share on:

Continue Reading

அடிப்படை தொண்டர்களுக்கு மட்டுமே தலைமையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அடித்து கூறும் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி!



✍️தீய சக்தி தி,மு,க, என வெளியேறி மாற்றாக மக்கள் பணியில் சிறு சிறு தொண்டாற்றி பாரத ரத்னா அவர்கள் தலைவர் பொருப்பை ஏற்றுக்கொள்ள வில்லை தொண்டர்கள், ரசிகர்கள்,பாமர ஏழை மக்கள், மீனவர்கள், ரிக் ஷா தொழிலாளர்கள் அவரை விரும்பி தலைவராக ஏற்றுக்கொண்டு அ,இ,அ,தி,மு,க கழகத்தை தோற்றுவித்தார்!

✍️தலைவர் பதவிக்கு கழகத்தில் சிறு சிறு சில சலப்புகள் எம்ஜிஆர் காதில் சென்றடையவே உடனடியாக அன்றைய மூத்த முன்னோடிகளான அரங்கநாயகம் மற்றும் ஆர்எம்வி,கேசி பழனிச்சாமி,நெடுஞ்செழியன், அன்வர் ராஜா,மற்றும் பலர் முன்னிலையில் ஒரு தீர்மானத்தை பாரத ரத்னா( எம்ஜிஆர் ) அவர்கள் நிறைவேற்றினார்.

✍️ அதுதான் தொண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தொண்டர்கள்தான் தலைமையை தேர்ந்தெடுக்க முடியும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

✍️தீர்மானம் பாரத ரத்னா( எம்ஜிஆர் ) அவர்கள் பைலாவில் எழுதப்பட்டது இதை புரட்சித்தலைவி அம்மாவும் பின்பற்றினார்!
Share on:

கவர்னர் மற்றும் திமுக மோதல் தமிழகத்தில் திராவிடம் vs ஹிந்துத்துவா என்ற கட்டமைப்பு!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து ,கவர்னர் மற்றும் திமுக மோதல் தமிழகத்தில் திராவிடம் vs ஹிந்துத்துவா என்ற கட்டமைப்பு என்று நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நடந்துகொண்டு இருக்கும் இந்த சூழலில்

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் நடந்த கள்ளச்சாராய விவகாரம் பற்றி இந்த மாதம் பேசிக்கொண்டிருக்கும் எடப்பாடி அதிமுக தலைமைக்கு தகுதியானவரா?
Share on:

ஏன் இந்திய அரசாங்கம் இதனை செய்ய தவறியது?

IRCTC மற்றும் இந்திய அரசாங்கம், செல்லுபடியாகும் பயணச்சீட்டு வைத்திருக்கும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் 35 பைசா கட்டணம் காப்பீட்டுக் கட்டணம் வசூலித்ததற்காண காப்பீட்டுத் தொகையை வழங்க முடியும்.

IRCTC சில ஆண்டுகளுக்கு முன்பு தனது போர்ட்டலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்கத் தொடங்கியது. தொடக்கத்தில் ரூ.0.98 பைசாவாக இருந்த பிரிமியம் தற்போது ரூ.0.35 பைசாவாக குறைந்துள்ளது.

இதன் மூலம் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்சில் விபத்திற்குள்ளானவர்கள் அனைவர்க்கும் அந்த காப்பீட்டு தொகை சென்றடைவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்
Share on:

திமுகவின் வாக்குறுதிகள் தேர்தலுக்கு முன் & தேர்தலுக்கு பின்!

தேர்தலுக்கு முன்
* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி
* பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்
* ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
* கனிம வளங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்
* தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் “அனைவருக்கும்” மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும்.
* பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.
* கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை அணைத்து நகை கடன்களும் தள்ளுபடி.
* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

தேர்தலுக்கு பின்
* முதல்வரின் அறிவுறுத்தலின் படி படிப்படியாக நிறைவேற்ற முயற்சி செய்வோம்.
* தமிழக அரசின் நிதிநிலைமை மோசமாக இருப்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த முடியவில்லை.
* நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்லவில்லை அதற்க்கான முயற்சி செய்வோம்.
* திமுக நிர்வாகிகளே அதிக அளவில் கனிம வளங்களை சுரண்டிக்கொள்வது.
* தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மட்டும் மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும்.
* பெட்ரோல்,டீலில் இல்ல VAT-ஐ குறைக்கிறோம் என்று சொல்லிருந்தோம் ஆனால் இன்றைய சூழலில் அது சாத்தியமில்லை.
* 5 சவரன்க்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களில் சிலருக்கு தள்ளுபடி செய்யவேண்டிய அவசியம் இல்லை என கருதப்படுகிறது.
* சமையல் எரிவாயு சிலிண்டரில் 1 பைசா கூட மாநில அரசிற்கு வருவாய் இல்லை அதை தீர்மானிக்க வேண்டியது மத்திய அரசின் கையில் தான் உள்ளது.
Share on:

சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளையுள்ளது!

சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளையுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய விபத்தாக இருக்கும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஐந்துக்கும் மேற்பட்ட பெட்டிகளின் இருப்பவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது…

ஏழு பெட்டிகள் முற்றிலும் சேதம், நான்கு பெட்டிகள் முற்றிலுமாக ரயில் பாதை இருக்கும் பகுதியில் இருந்து வெகு தூரம் சென்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

மூன்று பெட்டிகளில் சிக்கியிருக்கும் ஒருவரை கூட இதுவரை மீட்கவில்லை என தகவல் தெரிவிக்கப்படுகிறது…

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டிய நிவாரண பணிகளை தமிழக அரசு துரிதமாக செயல்படுத்த வேண்டுமென வேண்டுகிறேன்.
Share on: