EPS & OPS பாஜகவுக்கு அடிபணிந்து, திமுகவையும் அனுசரித்து பெயரளவுக்கு எதிர்கட்சியாக செயல்படுகிறார்களா?


அ.தி.மு.க. கழக நிர்வாகிகள் பா.ஜ.க.விற்கு அடிமைகளாகவும் தி.மு.க.வுடன் ஒரு உடன்பாடோடும் செயல்படுகிறார்கள் , அ.தி.மு.க.ஆட்சியில் நடந்த ஊழல்களை தி.மு.க.கண்டுகொள்ள வேண்டாம் அதேபோல் தற்போது நடக்கும் ஊழல்களை நாங்களும் கண்டுகொள்ள மாட்டோம் பெயரளவிற்கு மக்களை ஏமாற்றுகிற வகையில் ஒரு நாடகத்தை நடத்துவோம் என்கின்ற சமரச போக்கில் செயல்படுகிறார்கள் . எதிர் கட்சி தலைவரது அரசியல் என்பது சட்டமன்றத்திருந்து வெளிநடப்பு செய்து ஒரு பேட்டியை கொடுப்பதுடன் முடிந்து விடுகிறது மற்றும் ஆளுநருக்கு பா.ஜ.க. சொல்லும் திட்டங்களை ஆதரித்து செயல்படுவது , எனவே ஒவ்வொரு அ.தி.மு.க.தொண்டனும் அம்மா அவரகள் காலத்திலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.காலத்திலும் சட்டசபையில் இன்றைய நிலைப்பாட்டை உணர்வுகளோடு பார்க்கும் நிலை மாறிவிட்டது என்பது வருந்தத்தக்கது
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

கொடநாடு வழக்கில் சசிகலாவின் வாக்குமூலம் யாருக்கு சாதகமாக அமையும்?


திரு.ஆறுக்குட்டி அவர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப் பட்டபோது சமீப நாட்களில் திருமதி.சசிகலாவிற்கு ஆதரவாக சில கருத்துக்களைக் குறி வந்தது தெரிய வந்தது எனினும் பொதுச்செயலாளர் குறித்த வழக்கிற்கும் திருமதி.சசிகலா அவர்களுக்கு உரிமை இல்லை என்ற தீர்ப்பு வந்ததற்குப் பிறகுச் சற்று வேகமாகத் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடிய சில ஆதாரங்களை வெளிக்கொண்டு வருவதிலும் அவர் செய்த தவற்றை வெளிக்கொண்டு வருவதிலும் சற்று முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் திரு.எடப்பாடி பழனிச்சாமி நிச்சயமாகத் திருமதி. சசிகலா அவர்களை விசாரித்த பிறகு சயான், உத்திரகௌண்டன் பாளையம் இளங்கோவன், முன்னாள் அமைச்சரான திரு.S.P.வேலுமணி மற்றும் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆகியவர்களை விசாரித்து குற்றவாளியாகச் சேர்க்கப்படலாம். திரு.ஆறுக்குட்டி அவர்களின் நண்பர்களின் கருத்து என்பது கோடா நாடு பங்களாவிலிருந்த பொருட்கள் எவை அவற்றுள் எவை எவை காணாமல் போயின காணாமல் போன பொருட்கள் தற்பொழுது எங்கு உள்ளது போன்ற கேள்விகளுக்குத் திரு. ஆறுக்குட்டி அவர்கள் பதிலளித்துள்ளார். பூங்குன்றனுக்கும், திருமதி.சசிகலா அவர்களுக்கும் ஆறுக்குட்டியை விட அதிகமாகத் தெரியும் என்றும் அங்கிருந்து காணாமல் போன பல பொருட்கள் திரு.வேலுமணி மற்றும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடத்திலும் இருப்பதாக ஒரு தகவல் திரு.ஆறுக்குட்டி அவர்கள் வட்டாரங்களிடத்தில் கசிந்துகொண்டு இருக்கிறது. எனவே இதற்கு பிறகும் திருமதி.சசிகலா அவர்கள் திரு.எடப்பாடி பழனிச்சாமியிடம் எந்த சமரசமும் இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.
பொதுச்செயலாளர் வழக்கின் தீர்ப்பு திருமதி.சசிகலா அவர்களுக்குச் சாதகமாக வரும் நிலையில் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆதரித்து ஒருங்கிணைத்து இருக்கலாம் ஆனால் தற்பொழுது எந்த வித தயவு தச்சனையும் இல்லாமல் எதிர்த்து அடிப்பதற்குத் திருமதி.சசிகலா அவர்கள் தயாராகியுள்ளார் என்பது தெரியவருகிறது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

நீட் தேர்வில் விலக்கு பெற இந்த இரண்டு வழியில் ஏதேனும் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்!


உள்ளாட்சித் தேர்தல் நடந்துகொண்டிருக்கின்ற அந்த காலகட்டத்தில் நீட் பிரச்சனையை ஆளுநர் திரும்ப அனுப்பும் நிலையில் சற்றும் சிந்திக்காமல் சட்டமன்றத்தைக் கூட்டி அணைத்து கட்சிகளும் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆளுநருக்கு அனுப்பப்பட்டது அந்த சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பாக அணைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் வாக்கு வங்கி அரசியலுக்குத் திராவிட கழகம் அதனைப் பயன்படுத்திக் கொண்டது. அத்தகைய சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நிறைவுற்ற பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம் என்று கூற தவறியதால் திரு. ஸ்டாலின் அவர்கள் விரித்த வலையில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் மாட்டிக்கொண்டனர்.அத்தகைய தினம் சட்டமன்றத்தில் ஒரு மிகப்பெரிய விவாதமாக ஆளுநரை வெற்றிகொண்டு விட்டார் திரு.ஸ்டாலின் என்கின்ற அளவில் பெரிது படுத்தப்பட்டது.
இன்றைக்கும் தமிழ்நாட்டில் நீட் விலக்கு பெற வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதற்குரிய அனுமதியைப் பெறவேண்டும் அல்லது திரு. மோடி அவர்களை அணுகி அவரது ஆசீர்வாதத்தோடு விலக்கு பெற வேண்டும். அரசியல் செய்வதற்கு மட்டுமே திராவிடக் கழகம் இதனைப் பயன்படுத்துகிறார்களே தவிரத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நலன் தெரிவிக்கும்
நிலையில் மாணவர்களுக்கு நீட் விலக்கு பெற்றுத்தருகிற முனைப்போடு அவர்கள் செயல்படவில்லை.
திரு.உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது நீட் விலக்கு பெற ரகசியம் தாங்கலுக்கு மட்டுமே தெரியும் ஆட்சி அமைத்தவுடன் முதல் கையெழுத்து போன்ற தவறான வாக்குறுதிகளைக் கூறி தமிழ்நாட்டு மாணவர்களைத் தவறாக வழிநடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

அதிமுகவை பலவீனப் படுத்தும் பாஜக அதனால் பலனடைவது திமுகவா?பாஜகவா? தமிழ்நாட்டுக்கு வலிமையான அதிமுக தேவை!


அ.தி.மு.க.வை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் EPS OPS உள்பட அவர்களது செயல்பாடுகளை சட்டமன்றத்தில் பார்க்கும்பொழுது அனைவரும் தி.மு.க.வில் இணைந்து விடுவார்கள் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து விடும் என்று பேட்டி கொடுத்த ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் கூற கூட தயாராக இல்லாத நிலையில் தி.மு.க.வின் பயணமானது ஒட்டுமொத்த திராவிடத்தின் குத்தகைதாரர் எனவும் தி.மு.க.மட்டுமே திராவிட கட்சி என்கிற தமிழ்நாட்டின் கட்டமைப்பை மட்டுமே வைத்துக்கொண்டு அகில இந்திய அளவிற்கு திராவிடமா இந்துத்துவமா என்கிற அளவில் கொள்கை ரீதியாக அவர்கள் கட்டமைக்கிறார்கள் .
பா.ஜ.க. தமிழ்நாட்டில் தி.மு.க.வை எதிர்ப்பதாகவும் திரு.அண்ணாமலையின் அறிக்கையின் படி அ.தி.மு.க வை அளித்து 2026இல் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்கின்ற பெயரில் தி.மு.க.வை வளர்த்து விடுகிறார்கள். தற்பொழுது இந்தியா முழுவதும் உள்ள எதிர் காட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் திரு. ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் இதனை பா.ஜ.க.வின் கோணத்தில் பார்க்கும்பொழுது அ.தி.மு.க வை பலம் குன்ற பல கூறுகளாக்கும் நிலையில் பா.ஜ.க வைத் தவிர்த்து தி.மு.க.பலம் பெற்று திரு.ஸ்டாலின் அவர்கள் ஒரு தேசிய தலைவராக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
எனவே அ.தி.மு.க எந்த அளவு வலிமையாக இருக்கிறதோ பா.ஜ.க.வின் அணைத்து முயற்சிகளும் முறியடிக்கப்படும் என்பதே நிதர்சனமான உண்மை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

அதிமுக தொண்டர்களின் உரிமைகளுக்கான எனது சட்டப் போராட்டத்தில் விரைவில் நீதி கிட்டும்!


அ.தி.மு.க.வில் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய தலைமையை பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுத்தனர். அந்தத் தவரை நான் சுட்டிக்காட்டியதும் அதனை திருத்திக் கொண்டனர். அதே போல் தற்போதைய என்னுடைய வழக்கு , போலியாக நடத்தப்பட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து, அதற்கு மாறாக ஜனநாயகப் பூர்வமாக அனைத்து தொண்டர்களுக்கும் தங்களது வாக்களிக்கும் உரிமையை கொடுத்து இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே ஆகும் அதன் முடிவுகளே ஒன்றுபட்ட அ.தி.மு.க.உருவாவதற்கு வழிவகுக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

பா.ஜ.க’வின் செய்தித் தொடர்பாளராகத் EPS செயல்பட்டு வருகிறார்


பா.ஜ.க’வின் செய்தித் தொடர்பாளராகத் திரு.எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகத் திரு.மோடி அவர்கள் ஊழலுக்கு எதிரானவர் அவர் நெருப்பு போன்றவர் ஊழல் எண்ணத்துடன் அருகில் சென்றால் அழிந்துவிடுவார்கள் என்று பா.ஜ.க.விற்கு சாதகமாகப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது . திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பா.ஜ.க.வினை கண்டுகொள்ளாமல் கூட இருக்கலாம் ஆனால் இவர் பா.ஜ.க.விற்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டு அக்கட்சிக்கு வலு சேர்த்துக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல் திரு.மோடியைப் பற்றி மட்டுமே பேசுகிறார் தி.மு.க.வை எதிர்த்தும் பேசுவதில்லை ஆ.தி.மு.க.வை பலப்படுத்தும் நோக்கிலும் செயல்படுவதில்லை . திரு.எடப்பாடி பழனிச்சாமி, அவரின் வழக்குகளின் சூழ்நிலையையும் அவரது குடும்ப சூழ்நிலையையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால் கட்சியின் நிலை பற்றிச் சற்றும் கருத்தில் கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சாதிய அரசியல் செய்ய நினைக்கிறார்


இட ஒதுக்கீட்டு பிரச்னையை முன்னிறுத்தியே அ.தி.மு.க சில இடங்களில் தோல்வியைத் தழுவியது மேலும் இட ஒதுக்கீட்டைப் பற்றி பேசும்போது அ.தி.மு.க மேலும் வலுவிழந்து அடிப்படைத் தொண்டர்களையும் இழக்க நேரிடும் . நோக்கமற்ற அரசியலை செயல்ப்படுத்தி வாக்குவங்கிக்காக சில செயல்பாடுகளை முந்தய எடப்பாடி அரசு செய்த நிலையில் தற்போதைய அரசு அதை சட்டமாக்கியது அதன் மீது வழக்கு தொடர்ந்த நிலையில் சரியான தகவல்களை சமர்ப்பிக்க தவறியதால் உச்சநீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.
திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சாதிய அரசியல் செய்ய நினைக்கிறார் அ.தி.மு.க என்பது சாதிகளுக்கும் மதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு அரசியல் கட்சி. திரு.ராமதாஸ் அவர்களுக்கும் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் போடப்பட்ட ஒப்பந்தமான 10.5% தான் அ.தி.மு.க ஆட்சியை இழந்து நிற்கக்கரணம் ஏனெனில் இதனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் மற்றச் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் எளிதாக மதிப்பிடப்பட்டது கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

விலை உயர்வைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய மாநில அரசுகள்?


தமிழக முதல்வர் பிரதமருடனான சந்திப்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மீதான விலை உயர்வு & மானியம் குறித்து மேலும் இதன் வரியை ஜி.எஸ்.டிகுள் கொண்டுவருவது போன்று மக்களுக்குப் பலன் தரும் எந்த ஒரு முடிவுகளும் பிரதமருடனான சந்திப்பில் விவாதிக்கப்படவில்லை மேலும் மக்களின்மேல் சுமை சேர்க்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நிலையில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரங்களை இழந்த சாமானிய மக்கள் இன்னும் மீண்டும் வரவில்லை என்பது ஒருபுறம் மற்றொருபுறம் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விலை உயர்வைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய மாநில அரசுகள்?
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

எம்.ஜி.ஆர் அவர்களின் கனவு இந்தியா அரசாங்கத்தை ஒருங்கிணைத்து நாம் வலியுறுத்துவோம்


இன்றைய சர்வேதேச சூழ்நிலைகளை பயன்படுத்தி இந்தியா இலங்கை தமிழர்களின் எதிர்காலத்திற்கு கடந்தகால போராட்டத்திற்கு ஒரு சுமுகமான தீர்வை பெற்று தரவேண்டும்.
இது புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் கனவு இந்தியா அரசாங்கத்தை ஒருங்கிணைத்து நாம் வலியுறுத்துவோம்
இலங்கைக்கு இந்திய தூதரகம் மூலமாக உணவு & மருந்துப்பொருட்கள் வழங்குவதற்கு திரு ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைத்தது நிரந்தரமான தீர்வல்ல.இலங்கையில் தமிழர்கள் தங்களுக்கும் சம அரசியல் உரிமை வேண்டுமென்று போராடினார்கள் அந்த உரிமையை இந்தியஅரசாங்கம் மூலமாக பெற்றுத்தருவதே நிரந்தர தீர்வாகும்.புலம்பெயர்ந்து அகதிகளாக பலநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கைத்தமிழர்களை ஒருங்கிணைத்து இலங்கையில் குடியமர்த்தி அரசு மற்றும் அரசியல் பாதுகாப்பு உறுதிப்படுத்தவேண்டும். இது இலங்கையையும் பொருளாதார சரிவிலிருந்து மீட்டெடுக்கும்.இலங்கைத்தமிழர்கள் பிரச்சனைகளுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது 2009இல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க அரசாங்க நடவடிக்கைகள் தான்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:


மாணவர்களுக்கான மடிக்கணினி விநியோகம் முற்றிலும் நிறுத்திவைப்பு , சமையல் எரிவாயுவிற்கான மதிப்புக் கூட்டு வரி 54% மற்றும் மதுபான விலையேற்றம் போன்றவை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் சேதப்படுத்துகிறது. இந்நிலைமை மாறாவிடில் இன்னும் 5ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் நிலைமை இலங்கையை போல் ஆகிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை . நியாய விலைக் கடைகளில் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் மக்களுக்கான பொருட்களை சரியான நேரத்தில் விநியோகம் செய்யப்படாமல் மாதம் முழுவதும் அவர்களை அலைக்கழிப்பது இதுபோன்ற செயல்கள் தொடருமாயின் பிற்காலத்தில் நியாய விளைக் கடைகளே இல்லாத சூழ்நிலை உருவாகிவிடும்
எனவே மீண்டும் EPS, OPS’ஐ நம்பாமல் மாவட்டவாரியாக கூட்டம் போட்டு மேற்கண்ட அனைத்து இன்னல்களையும் ஆலோசித்து மக்களுக்கான உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: