
அதிமுக தொண்டர்கள் தற்போது விரக்தியும் ஆத்திரமுமாக கனன்று கொண்டுஇருக்கிறார்கள் .பன்னீர் -எடப்பாடி தரப்பின் அரசியல் விளையாட்டில் எந்த ஆர்வமும் இயலாமல் இருக்கிறார்கள்.கழகத்தின் பொன்விழா விமரிசையாக கொண்டாடப்படவேண்டிய நேரத்தில் ,நீதிமன்ற விசாரணைகளிலும் ,போட்டி பேட்டிகளிலும் மட்டுமே கட்சி கரைந்துகொண்டிருக்கிறது . ‘ஒற்றை தலைமைக்காக கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது ‘ என ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும்போதும், ‘பொதுக்குழு முடிவுகள் செல்லும்’ என எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வரும்போதும், அவரவர் ஆதரவு நிர்வாகிகள்தான் இனிப்பு வழங்குகிறார்கள் ஆதாய எதிர்பார்ப்பில் கூட இருப்பவர்கள்தான் பட்டாசை கொளுத்துகிறார்கள். மற்றபடி தமிழகத்தின் எந்த ஊரிலும் சிறு சலசலப்புகூட இல்லை .பன்னீர்-எடப்பாடி இருவருமே கட்சி நலனுக்குகாகவோ, தொண்டர்கள் நலனுக்காகவோ சண்டை போடவில்லை. தங்களின் பதவியை,அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவே நீதிமன்ற படியேறியிருக்கிறார்கள் ஒவ்வொரு…




குழுவில் இணைய