தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை:-கே.சி பழனிசாமி விமர்சனம் !!

நக்கீரன் சேனலில் “அரசியல் சடுகுடு” நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே. சி பழனிசாமி பங்கேற்று தற்போது உள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்த பார்வையை பேசியியுள்ளார்.விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதித்து இருக்கிறார்.எடப்பாடி பழனிசாமி 2024 தேர்தலில் அதிமுக மெகா கூட்டணியை அமைக்கும் என்பதன் உட்பொருள்?
பாஜகவுடனான மெகா கூட்டணியை தான் எடப்பாடி பழனிசாமி தலைமை அமைக்கும். பாஜக அல்லாது தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் பாஜக அரசு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடும்.இரட்டை சின்னத்திற்காக ஓட்டு போடும் மக்கள் உண்டு.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களை ஒன்றிணைத்து தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெறும்.அதிமுக பிளவுபடவில்லை எடப்பாடி பழனிசாமி:அதிமுக ,ஒற்றுமையாக செயல்படாத காரணத்தினால் தான் சட்டமன்ற தேர்தல் தோல்வியை சந்தித்தது.அதிமுக கட்சியினில் தலைமை பதவிக்கான உட்பூசல்கள் தொடர்ந்து வருகின்றன. அதிமுக ஒன்றுபட்டு பாஜகவுடன் கூட்டணியை தவிர்த்து தனித்து நின்றால் அதிமுக ஆட்சியை பிடிக்கும்.திமுக சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை-அமித்ஷா:
அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பு மிக வலுவாக உள்ளது.அதன் தலைமை தான் தகுதியற்றவர்களால் செயல்படுகிறது.அதிமுக கட்சி, கிளை அளவில் தொண்டர்கள் பலம் மிக வலிமையாக உள்ளது.பாஜக தான் தமிழகத்தில் கட்டமைப்பை வழிப்படுத்த வேண்டும்.எக்காலத்திலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை கைப்பற்றவே முடியாது.நாடாளுமன்ற தேர்தலில் 24 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்-அண்ணாமலை:அண்ணாமலை அந்தந்த பகுதிகளில் உள்ள குற்றவாளிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு கொண்டுள்ளார். பாஜக தமிழகத்தில் 4 இடங்களில் கூட வெற்றி பெற வாய்பில்லை.திமுகவிற்கு எதிரான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உருவாக்கமாட்டாரா:அதிமுக கட்சிக்கு கூட்டணியே தேவையில்லை. ஒன்றுபட்ட அதிமுக வாக தொண்டர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டு, தொண்டர்களை ஒருங்கிணைத்து கட்டமைத்தால் தனித்து நின்று அதிமுக வெற்றி காணும்.அதிமுகவில் பிரிவினை இருந்தாலும் தனித்து நின்று தேர்தலை சந்திக்கும்-செங்கோட்டையன்:பிரிவினைக்கு காரணமே எடப்பாடி பழனிசாமியிலான தலைமை தான்.அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமை மற்றவர்களை அடக்கி ஆளுகிறார்கள்.இதனால் தான் கட்சி பிளவுபட்டு உள்ளது.பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா எடப்பாடி பழனிசாமி? உச்ச நீதிமன்றத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10%இடஒதுக்கீடுக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக கட்சி ஆதரவாக தனது நிலைப்பாட்டை தெரிவித்திருப்பது சமூகநீதிக்கும் அதிமுக கொள்கைகளும் எதிரானது.எம்ஜிஆர் ஜெயலலிதா மற்றும் திராவிட கொள்கைகளை மறந்து பாஜகவின் இந்துத்துவ கொள்கைகளை நேரடியாக ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் துணிந்து பாஜகவிற்கு எதிராக செயல்படமாட்டார் என்று கே. சி. பழனிசாமி கூறியுள்ளார்.

Share on: