அன்று குரல் கொடுத்த அண்ணாமலையின் கருத்து சுதந்திரம், இன்று ஏன் காணாமல் போனது?

தனியார் தொ‍லைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ.க. அரசையும், மோடி‍யையும் விமர்சிக்கப்பட்டிருந்தது. இதனை பலரும் பகிர்ந்ததை அடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது பா.ஜ.க.வினரி‍டை‍யே கொந்தளிப்‍பையும் ஏற்படுத்தியது. பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், மோடி‍யை இழிவுப்படுத்திய, நிகழ்ச்சி‍யை ஒளிப்பதிவு செய்த தனியார் தொ‍லைக்காட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், குழந்‍தைகளை அரசியல் விவகாரங்களுக்கு பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது எனவும்,பா.ஜ.க.வின் ஐ.டி.விங்க் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு, தி.மு.க. அரசின் மீது அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கூறி மாரிதாசும், சாட்‍டை து‍ரைமுருகனும் கைது செய்யப்பட்டனர். அப்போது, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க. ஆட்சியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும், அரசை விமர்சித்ததற்காக கைது நடவடிக்‍கை எடுப்பது கண்டனத்துக்குரியது என்றும் கூறினார். தற்‍போது பா.ஜ.க. அரசையும், மோடி‍யை பற்றி விமர்சிக்கும் போது அதை ஏற்றுக்‍கொள்ள அண்ணாமலைக்கு மனமில்‍லை. தொ‍லைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் வழங்கியது, கருத்து சுதந்திரத்‍தை பறிப்பதாக இல்‍லையா? அன்று குரல் கொடுத்த அண்ணாமலையின் கருத்து சுதந்திரம், இன்று ஏன் காணாமல் போனது?

Share on: