வலிமை இ.பி.எஸ், வீரம் ஓ.பி.எஸ், விவேகம் கே.சி.பி தூண்டிலில் சிக்காத விவேகம் கே.சி.பி !!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கே.சி.பழனிசாமி அவர்களை சென்னையில் உள்ள ஒரு முக்கியமான நட்சத்திர ஹோட்டலில் முன்னாள் முதல் அமைச்சரான திரு .ஓ.பன்னீர் செல்வமும் ,அவருடைய அணியில் இருந்து முன்னாள் அமைச்சரான திரு .வைத்திய லிங்கம் மற்றும் திரு.மனோஜ் பாண்டியன் அணியினர் ஆகியோர் சந்தித்து இருக்கிறார்கள் .இந்த உரையாடலில் அவர்கள் திரு.கே.சி.பி.அவர்களுக்கு கட்சியில் மிக வலிமையான அதாவது துணை ஒருங்கிணைப்பாளர் அல்லது துணை கொள்கை பரப்பு செயலாளர் இந்த பதவிகளை கொடுப்பதாக சொல்லி இருக்கின்றார்கள் .ஆனால் இதற்கு திரு.கே.சி.பி அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்பது மட்டும் தெரிகிறது .ஏனென்றால் ,அவருடைய கலந்துரையாடலில் அ.ம.மு.க கட்சியின் டி டி வி தினகரன் செய்த அதே தவறை தான் நீங்களும் செய்கிறீர்கள் என்று கூறினார் .மேலும் திமுகவையோ பாஜகவையோ எதிர்க்கின்ற மாதிரி உங்களது அரசியல் இல்லை ,மிகவும் சாதாரணமாகத்தான் இருந்துகொண்டு இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார் .அதுமட்டும் இல்லாமல் ஓ.பி.எஸ் அவர்களுடைய அணி வந்து ஒரு சமூகத்திற்கான அணியாகத்தான் பார்க்கப்படுகிறது .எனவே அந்த பார்வையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளத்தான் என்னை உங்கள் அணிக்கு அழைக்கின்றீகள் என்றும் பேசினார் .மேலும் என்னுடைய சீனியரிட்டிக்கு நீங்கள் இணை ஒருங்கிணைப்பாளர் அந்த பதவியை கொடுக்கலாம் ,ஆனால் நீங்கள் சாதாரண பதவியை கொடுக்கிறீர்கள் என்று கூறி விவேகமாக மறுத்துள்ளார் .

Share on: