ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்து இருக்கிறது. அந்த அறிக்கையை பொறுத்தவரையில் மிகப்பெரிய சந்தேகத்தை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சசிகலா அவர்கள் மீது எழுப்பினார் .ஆனால் அதில் திரு .ஆறுமுகசாமி அவர்கள் திருமதி.சசிகலா அவர்களை விசாரிக்க முன்வரவில்லை .அதற்கான காரணம் இன்றளவும் தெரியவில்லை .அதுமட்டுமன்றி கொடநாடு கொலை வழக்கில் கூட அந்த இடத்தின் உரிமையாளரான சசிகலா விசாரிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை முதலில் முன்வைத்தவர் திரு.கே,சி.பழனிசாமி ஆவார் .அதன்பிறகு உச்சநீதிமன்றமும் சசிகலா விசாரிக்கப்படவேண்டும் என்று கூறிய நிலையில் காவல்துறையின் முன்னிலையில் சசிகலா விசாரிக்கப்பட்டு அவர் சாட்சியமும் அளித்தார் .அதற்குப்பிறகு அவர் சிறையில் இருந்து வந்து சென்னையில் இருக்கின்ற நிலையில் இந்த ஆணையம் அவரை விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் .ஆனால் அவர் விசாரிக்க படாதபொழுது அவர் மீது ஏதோ ஒரு தவறு உள்ளதை நினைவுபடுத்துகிறது.ஆணையம் கூறுவது என்னவென்றால் சந்தேகம் எழுப்பிய ஓ. பன்னீர்செல்வம் கூட சசிகலா மீது தனக்கு எந்தவொரு சந்தேகமும் கிடையாது .தொண்டர்களுக்கும் ,தமிழ்நாட்டு மக்களுக்கும் தான் உள்ளது என்று கூறினார் என்றனர்.இது தனிப்பட்ட மனிதனின் கருத்து அல்ல . ஒட்டுமொத்த தொண்டர்களுக்கும் ,தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவாக எழுகின்ற கேள்வி தான் இது .அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது .அதனால் இந்த ஆணையத்தின் அறிக்கையை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்றுக்கொள்ள கூடாது .