
திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் டெல்லி பயணம் இதற்க்கு முன்பு 2019,2021 கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் சென்னையில் நடைபெற்றது .அதிமுக தலைவர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமித்ஷா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர் .மேலும் அம்மா அவர்களின் காலத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை அவர்களின் போயஸ் இல்லத்தில் தான் நடைபெற்றது .ஆனால் இன்றைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு கொண்டுசென்றுள்ளார்.
ஆனால் தேர்தல் ஆணையம் மாற்று உத்தரவு வரும் வரை அவர்தான் பொதுச்செயலாளராக இருப்பார் என்றும் கூறியுள்ளது அவருக்குள்ள நெருக்கடியைத்தான் காட்டுகிறது .தீடீரென டெல்லி சென்று வழக்கறிஞர்களை பார்க்கும் பொழுது அவருக்கு கொடநாடு வழக்கு ,டெண்டர் வழக்கில் உள்ள நெருக்கடியை தான் காட்டுகிறது .
திமுக சனாதனம் என்ற கருத்தை முன்வைத்து திமுக vs பாஜக என்று தமிழக அரசியலை கட்டமைத்து கொண்டு இருக்கிறார்கள்.இதனால் திராவிட கட்சி என்று சொல்லி கொண்டு இருந்த அண்ணாதிமுக இன்று தனது அடையாளத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது 2019ல் திமுக அமைத்த இந்த கட்டமைப்பு இந்த முறை பாஜகவாலும் சேர்ந்து கட்டமைக்கப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணியை அண்ணாதிமுக தொண்டர்களும் வாக்காளர்களும் ஒருபோதும் விரும்பவில்லை. எடப்பாடி அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை தனக்கான தேர்தல் இல்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் நமக்கான தேர்தல் என்று நினைத்து கொண்டிருக்கிறார் .நமக்கு ஒரு 30 தொகுதிகள் அமைந்தும் பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் கூட நமக்கு ஒரு மரியாதை கிடைக்கும் .2004ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஹிந்துத்துவ கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்த பொழுது அதிமுக தோல்வியை தழுவியது .அது சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்து ஆட்சியை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது .திமுக என்பது எதிரி தான்.ஆனால் அதற்காக பாஜகவுடன் அடகுவைக்க கூடாது.