எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பிற்கு தகுதியற்றவர்-கே.சி பழனிசாமி விமர்சனம் !!

எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பிற்கு தகுதியற்றவர்-கே.சி பழனிசாமி விமர்சனம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பிளவுபடுத்த திமுக நினைப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுக்கு காரணம் என்ன என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.பி கே. சி பழனிசாமி பங்கேற்றார். விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை அடிப்படை தொண்டர்கள் தான் வழிநடத்த வேண்டும் என்று கூறுவது சுயநலத்திற்காக மட்டுமே இன்றி வேறில்லை.ஒவ்வொரு அதிமுக அடிப்படை தொண்டர்களும் எதிர்பார்ப்பது ஒன்றுபட்ட அண்ணா திமுக தேவை.மேலும் தலைமையை அடிப்படை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ள நிலையில் கே. சி. பழனிசாமி மட்டும் பாஜக-வை எதிர்ப்பது ஏன்? தொண்டர்களோடு இருக்கக்கூடிய நெருக்கமும் தொண்டர்கள் கருத்தை தெரிந்து கொள்கின்ற யுக்தியும் உள்ளதால் நான் பாஜக வை எதிர்க்கிறேன். ஈபிஸ், ஓபிஸ் திமுக-வையும் எதிர்க்க மாட்டார்கள் பாஜக-வையும் நேரடியாக எதிர்க்க மாட்டார்கள்.அதிமுக தொண்டர்கள் இறுதியில் முடிவெடித்து இவர்கள் இருவரையும் ஒதுக்கிவிட்டு,மூன்றாவதாக புதிய தலைமையை உருவாக்கும் காலம் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளார். அதிமுக-வை பிளவுபடுத்த திமுக நினைப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது குறித்து ட்விட்டரில் கேள்வியை முன்வைத்ததில் பெரும்பான்மையானோர் பழனிசாமி திசை திருப்பதற்காக இவ்வாறு கூறியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி பாஜக, திமுக இரண்டையுமே எதிர்க்க வேண்டும் மாறாக பாஜகவிற்கு இணக்கமாக செயல்பட்டு வருகிறார்.மேலும் ஒன்றிய செயலாளர் நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி உள்ளார் தலைமை பொறுப்பிற்கு தகுதியற்றவர் என கே. சி பழனிசாமி கூறியுள்ளார்.

Share on: