அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றம் அடிப்படையிலேயே தவறிழைத்துவிட்டதா?

     அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்ற OPS ன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்புகிறது. சசிகலா தொடர்ந்த வழக்கிற்கும் சரியான விடை கிடைக்கவில்லை. இடியாப்ப சிக்கல் எனும் உவமைக்கு இந்த வழக்கு மிகச்சரியாக பொருந்தும். இந்த சிக்கலை அவிழ்க்க நீதிமன்றம் தொட வேண்டியது, இந்த வழக்குகளை அல்ல. இந்த வழக்கின் அடிப்படையாக எம்.ஜி.ஆர். அவர்களின் உயிலுடனும், அவர் வகுத்த விதிகளுடனும் தொடக்கப்புள்ளி வைத்த முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி அவர்கள் தொடர்ந்த வழக்கைத்தான்.
     அடிப்படை கேள்விகளுக்கு விடையளிக்காமல் இறுதி கேள்விகளுக்கு விடையை தேடிக்கொண்டிருக்கிறது நீதிமன்றம். எப்படி கிட்டும்? அதிமுக எனும் மகத்தான கழகத்தை பாதுகாக்கும் பொறுப்பை எம்.ஜி.ஆர்.அவர்களும், அம்மா அவர்களும் யாரிடமும் விட்டு செல்லவில்லை. அடிமட்ட தொண்டர்களிடம் தான் விட்டு சென்றனர். அவர்களில் 80 சதவிகிதத்தினர் என்ன முடிவெடுக்கிறார்களோ அவரே தலைமை ஏற்க வேண்டும் என்றும், பொதுக்குழுவை கருவியாக பயன்படுத்தி யாரும் கழகத்தை கைப்பற்றி விடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள்.
      இது தொடர்பான வழக்குகளையும் வாதங்களையும் விசாரிக்காமல், நேரடியாக OPS தொடர்ந்த வழக்கிற்கு, பொதுக்குழுவிற்கு பெரும்பான்மை ஆதரவு யாருக்கு உள்ளது என்ற அடிப்படையில்லாத சமன்பாடுகளை சரிசெய்ய நினைக்கிறது நீதிமன்றம். இதனால்தான் கே.சி.பழனிசாமி அவர்கள் நீதிமன்றத்தின் மேலும், தேர்தல் ஆணையத்தின் மேலும் நம்பிக்கை இல்லை என்று முடிவெடுத்து தொண்டர்களை திரட்டி உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
    நாம் தொண்டர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு ஒரு தற்காலிக உறுப்பினர் அட்டை வழங்கி, கிளைச்செயலாளருக்கும் பொதுச்செயலாளருக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தி நமக்கான தலைமையை தேர்ந்தெடுப்பதே நீதிமன்றம் செய்த பிழைக்கும், தேர்தல் ஆணையம் செய்த பிழைக்கும் ஒரு தீர்வாக அமையும். 

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: