கட்சிக்குள் EPS தலைமையின் மீது அதிருப்தி என்ற செய்திக்கு முன்னாள் அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்தது அவர் தலைமை மீது எந்த அதிருப்தியும் இல்லை என்பதை உறுதிப்படுத்துமா?- கே.சி.பழனிசாமி


* நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால் தான் EPS தலைமை மீது எந்த அதிருப்தியும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும்.

* அம்மா மறைவிற்கு பிறகு 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் 3 ஆவது மிகப்பெரிய கட்சியாக எடப்பாடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று அதிமுகவில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்?

* முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்ன திமுக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல் குறித்து ஏன் அதிமுக தலைவர்கள் எந்த குற்றச்சாட்டும் எழுப்புவதில்லை?

* இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எடுத்த பாராட்டுதலுக்குரிய முடிவு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அதற்கான பலனாக 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் அதிமுக அதிக வாக்குகளை பெரும். அதே போல் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கோட்டை விட்டது வேட்பாளர் தேர்வு.

* ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் மனநிலை பாஜகவிற்கு எதிராக இருக்கும்பொழுது. அந்த பாஜகவோடு கூட்டுசேர்ந்து நேரடியாக களமிறங்கி இரட்டை இலைக்கு எதிராக போட்டியிடுவதை OPS தவிர்த்திருக்க வேண்டும்.

* வெற்றியோ தோல்வியோ தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பன்னீர்செல்வம் தவிர்த்து அவருடன் இருப்பவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைவார்கள். அதற்க்கு காரணம் OPS-ன் முன்னுக்குப்பின் முரணான நிலைப்பாடும் அதீத பாஜக விசுவாசமும் தான்.

* ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தாலும் கூட OPS-ஐ வைத்து எந்த முன்னெடுப்புகளும் செய்யமாட்டார்கள். பாஜகவின் கவனம் விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி போன்ற வழக்குகளில் சிக்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்களை நோக்கி தான் செல்லும்.

* அதிலும் வேலுமணி போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி என்று தான் முன்னெடுப்பார்களே தவிர 2026 தேர்தல் வரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்க வாய்ப்பு இல்லை. செங்கோட்டையனும் அவர்களை போல போர்க்கொடி தூக்கக்கூடிய தலைவர் அல்ல அவர் அப்படி செய்வதாக இருந்தால் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுதே அதை செய்திருப்பார்.

* EPS-ன் சகாக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு அவர்களது தொடர் தோல்வியை நியாயப்படுத்த “எம்.ஜி.ஆர் தோற்க வில்லையா” “அம்மா தோற்க வில்லையா” என்பது தான். இது OPS-க்கு எந்த அளவு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா பற்றிய புரிதல் இல்லையோ அதே போல் EPS-க்கும் இல்லை என்பதையே காட்டுகிறது.

* ஏனென்றால் இன்றைய அதிமுக வாக்கு வாங்கி என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் வாக்குவங்கி என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
Share on: