“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் “

திரு .கே.சி.பழனிசாமி அவர்கள் தொலைக்காட்சி நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ,பாராளுமன்றத்தில் உள்ள மைய பகுதியில் திரு .அருண் ஜெட்லீ அவர்களும் ,திருமதி .நிர்மலா சீதாராமன் அவர்களும் சேர்த்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளனர் .இதனை பிரதமர் உறுதியளித்தால் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும் . ஆனால் நீட் தேர்வு விஷயத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு ஆண்டுக்கு மட்டும் தமிழகஅரசு விதி விலக்கு கேட்டால் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.ஆனால் கடைசியில் அதுவும் நடக்காமல் போனது .உறுப்பினர் அட்டையை பொறுத்த வரையில் எம் ஜி ஆர் காலத்தில் பொதுமக்கள் அண்ணா தி மு க விற்கு வாக்களித்தார்கள் .அதன் பின் அம்மா அவர்களின் காலத்தில் உறுப்பினர் அட்டை இருப்பவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டது .ஆனால் இபி எஸ் ஓபிஎஸ் காலத்தில் உறுப்பினர் அட்டை வைத்திருந்தாலும் கூட காசு கொடுக்கவேண்டியுள்ளது சில காரியங்களுக்கு என்கின்ற நிலைமை வந்துவிட்டது .மேலும் திமுக MLA களுக்கு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியதாக பார்க்கப்படுகிறது .அண்ணா திமுக தொண்டர்களுக்கு எந்த நற்பயனும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது .எனவே தொண்டர்கள் அனைவரும் இவர்கள் இருவரை நம்பி உறுப்பினராக சேருவதற்கு விருப்பம் காட்டவில்லை .ஆனால் திரு .கே.சி.பழனிசாமி அவர்கள் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் தொண்டர்கள் அனைவருக்கும் சுமார் ஒரு கோடி உறுப்பினர் அட்டையை வழங்கி அந்த தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் .

Share on: