எம்ஜிஆர் மனதை மாற்றிய சில நிகழ்வுகள் !!

தலைமை பதவிக்கு வேட்புமனு பெற சென்றவர்கள் அடித்து விரட்டப்பட்டனர் .அவர்களில் அதிமுக தொண்டங்கப்படுவதற்கு தூண்டுகோலாக இருந்த சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஓம்பொடி பிரசாத்தும் ஒருவர் என்பதுதான் சோகம் .அவர் எம்ஜிஆர் மன்றத்துக்காரர் .1972 அக்டோபர் 17 அன்று அதிமுக தொடங்கப்படுவதற்கு முன் பல தரப்பட்ட சமாதான முயற்சிகள் நடைபெற்றன .அப்போது எம்ஜிஆர் மனதை மாற்றிய சில நிகழ்வுகள் நடைபெற்றன .அவற்றில் ஒன்று .எம்ஜிஆர் மன்றங்களின் தலைமை பொறுப்பாளர் முசிறி புத்தனும் ,ஓம்பொடி பிரசாத்தும் பட்டினப்பாக்கத்தில் தாக்கப்பட்டது .சென்னை பிளாசா தியேட்டரில் எம்ஜிஆர் படம் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் அடித்து விரட்டப்பட்டனர் .அனைவரும் மாம்பலத்தில் இருந்த எம்ஜிஆர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர் .அப்போது அப்பாவு (கி )தெருவில் இயங்கிவந்த தென்சென்னை எம்ஜிஆர் ரசிகர் மன்ற செயலாளர் தெய்வ சிகாமணி ‘1.10.1972 முதல் 17.10.1972 வரை-தொடக்கமும் முடிவும் ‘என்ற கட்டுரையில் இது பற்றி விரிவாக பதிவு செய்துள்ளார் .இப்படியான பின்னணி கொண்ட அதிமுகவில் தான் 2016-ல் ஜெயலலிதா மறைவிற்கு பின் இன்று வரை தொடர் களேபரங்கள்

Share on: