சரியான நேரத்தில்! இந்தியாவிற்கு உதவும் ரஷ்யா! பார்சல் அனுப்பப்படும் பயங்கர ஆயுதம்! பாகிஸ்தான் காலி?


இந்தியாவிடம் அதிநவீன R-37M ஏவுகணைகளை விற்பனை செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவுடன் ஆலோசனைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.

R-37M ஏவுகணைகள் ஹைப்பர் சோனிக் வேகத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது இது. இது வானத்தில் விமானம் மூலம் பூமியில் உள்ள இலக்குகளை தாக்க கூடியது. இது 300-400 கிலோ மீட்டர் தூரத்திற்கு எளிதாக சென்று தாக்கும் திறன் கொண்டது. மேக் 6 வேகத்தில் செல்ல கூடியது. அதாவது 1 மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது.

இதனால் போர் சமயத்தில்.. வானத்தில் இருந்து R-37M ஏவப்படும் பட்சத்தில், அந்த ஏவுகணைகளை தடுப்பது மிகவும் கடினம். அதிலும் எதிரி நாட்டு போர் விமானங்களை குறி வைத்தால், அந்த போர் விமானங்கள் இதில் இருந்து தப்பித்து செல்ல முடியாத சூழல் ஏற்படும். விமானப்படையில் பாகிஸ்தானை விட கூடுதல் பலம் பெற இந்தியா தீவிரமாக முயன்று வரும் நிலையில்தான் இந்த முடிவை ரஷ்யா எடுத்துள்ளது.

ரஷ்யாவின் விம்பல் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட R-37M ஏவுகணை வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் (AWACS), டேங்கர் விமானங்கள், எதிரி நாட்டு தீவிரவாத மையங்கள் , தளவாடங்கள் போன்ற உயர் மதிப்புள்ள இலக்குகளை எளிதாக தாக்கி அழிக்க முடியும்.

இப்படிப்பட்ட அதி அதிநவீன R-37M ஏவுகணைகளை இந்தியாவிடம் விற்பனை செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவுடன் ஆலோசனைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இது 510 கிலோ எடை கொண்டது. அதில் கூடுதலாக வெடிபொருட்களை சேர்க்கும் பட்சத்தில் அதன் எடை 60 கிலோ மேலும் உயரும். ரஷ்யாவின் Su-30, Su-35, Su-57, MiG-31BM, 272 Su-30MKI, MiG-35, போன்ற போர் விமானங்களில் பயன்படுத்த முடியும். ரஷ்யாவின் பல்வேறு மிக், சுகோய் விமானங்களை இந்தியா பயன்படுத்துகிறது.

இந்த நிலையில்தான் இந்த ஏவுகணைகளை விற்பனை செய்ய ரஷ்யா தீவிரமாக முயன்று வருகிறது. அதேபோல் இந்தியாவிடம் எஸ் . 400 போன்ற சிறப்பான அதிநவீன ஏவுகணை மறிப்பு சிஸ்டம் இருக்கும் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து மேலும் சில புதிய ஏவுகணை மறிப்பு சிஸ்டம்களை மற்றும் ரேடார்களை இந்தியா வாங்க உள்ளது. முக்கியமாக ஸ்டெல்த் விமானங்களை கூட கண்டுபிடிக்கும் ரேடார் சிஸ்டங்களை இந்தியா வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்திய ரஷ்யா அரசாங்கத்திற்கு இடையேயான (G2G) ஒப்பந்தத்தின் மூலம் மேம்பட்ட ஓவர்-தி-ஹாரிஸன் (OTH) ரேடார் அமைப்பை சேர்ந்த “கன்டெய்னர்-S” ரேடார்களை, குறிப்பாக 29B6 “கன்டெய்னர்” ரேடாரை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ரஷ்யாவும் மீண்டும் தொடங்கியுள்ளன. ஸ்டெல்த் விமானங்களை கண்டுபிடிக்கும் வகையில் இந்த ரேடார் சிஸ்டங்களை இந்தியா வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிநவீன ரஷ்ய OTH ரேடார் அமைப்பான Container-S ரேடார், நீண்ட தூர வான்வெளி கண்காணிப்பு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை கண்டறிதலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான கண்டறிதல் வரம்பைக் கொண்ட இந்த ரேடார் இந்திய வான்பரப்பை இரும்பு போல பாதுகாக்கும்.

வழக்கமான ரேடார் அமைப்புகள் கண்டுபிடிக்க முடியாத தூரங்கள் மற்றும் உயரங்களில் கூட இதனால் ரேடார் கதிர்களை செலுத்த முடியும். இது ஸ்டெல்த் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி அச்சுறுத்தல்களை அடையாளம் காணும் திறன் கொண்டது. ரஷ்யாவின் மொர்டோவியாவில் உள்ள கோவில்கினோ அருகே அமைக்கப்பட்டு உள்ள முதல் Container-S ரேடார், டிசம்பர் 2013 இல் செயல்பாட்டுக்கு வந்தது. 2019 இல் உக்ரைன் போரில் ரஷ்யா மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத்தான் இந்தியா வாங்க உள்ளது. கண்டெய்னர்-எஸ் ரேடார், அல்லது 2986, என்பது உயர் அதிர்வெண் (HF) பேண்டில் இயங்கும் ஒரு OTH ரேடார் ஆகும், இது மேற்பரப்பு அலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதனால் எந்த ஒரு விமானத்தையும் கண்டுபிடிக்க முடியும்.

3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் வான்வழி இலக்குகளைக் கண்டறிந்து, சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Share on: