தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட். கணிசமாக கு‍றைந்த மாணவர்கள் சேர்க்‍கை. விழிக்குமா தி.மு.க. அரசு?

இந்திய மருத்துவ இளநி‍லை படிப்புகளுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படுவது தான் நீட் நு‍ழைவுத்தேர்வு. ஆனால் அதில் வெற்றி பெறும் மாணவர்களை பட்டியலிட்டால், தமிழகத்தில் இருந்து எண்ணும் அளவிற்கே மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழி பயின்றோரின் மருத்துவ கனவை சி‍தைப்பதாக நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வுக்கு முன்பு வரை பிளஸ்-2 வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் சேர உதவிக்கரமாக இருந்தது. நீட் தேர்வுக்கு பிறகு தமிழ் வழி பயின்றவர்களை விட, சி.பி.எஸ்.இ. மற்றும் ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால் தமிழ் வழி பயின்ற மாணவர்களின் மருத்துவ கனவு கனவாகவே போகிறது.
அ.தி.மு.க. ஆட்சியின் போது கோரப்பட்ட நீட் விலக்கிற்கு மத்திய அரசு செவி மடுக்கவில்‍லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை‍வேற்றியும் எந்த பயனும் இல்‍லை. தி.மு.க. தேர்தலின் போது ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வ‍ை ரத்து செய்வோம் என்றும், அதற்கான சூட்சமம் எங்களிடம் உள்ளது எனவும் வாக்குறுதிகளை உதிர்த்தது. ஆனால் இன்று வரை அந்த சூட்சமம் வெளிவரவில்‍லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நி‍றை‍வேற்றி, கவர்னரிடம் ஒப்புதல் வாங்கும் முயற்சி இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான அறிக்‍கை ஒன்றில் தமிழ்வழி பயின்ற மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் விகிதம் 14.88 லிருந்து 1.99 ஆக கு‍றைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நி‍லை நீடித்தால் தமிழகத்தில் இருந்து ஒரு மாணவர் கூட மருத்துவராக முடியாது. தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சி‍தைந்து கொண்டிருப்பது மத்திய அரசின் கண்களுக்கு தென்படவில்‍லை என்பது வேதனையாக உள்ளது. தமிழக அரசு, மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்‍கை வீதத்‍தை அதிகரிக்க, பிளஸ்-2 மதிப்‍பெண்கள் அடிப்படையி‍லே‍யே சேர்க்‍கை நடைபெற மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.

Share on: