நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2021

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மக்கள் நகராட்சி தலைவர், பேரூராட்சித்தலைவர் மற்றும் மேயர் அவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2011க்கு பிறகு நடைபெறவே இல்லை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மக்கள் நகராட்சி தலைவர், பேரூராட்சித்தலைவர் மற்றும் மேயர் அவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
ஆளுகின்ற தி.மு.க 2006 இல் நேரடி நகர்ப்புற தேர்தலுக்குப் பதில் மறைமுக தேர்தல் கொண்டுவந்தது.
2011 இல் மீண்டும் அதிமுக ஆட்சி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நேரடி தேர்தல் நடத்த ஆணையிட்டார்.
2016 இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற நிலை வரும்போது ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை மோசமாகப் போனது.
பிறகு அவர் காலமானார். அதன் பின் உள்ளாட்சித் தேர்தல் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் நடைபெறவில்லை.
தொடர்ச்சியாக அதிமுக உறுப்பினர்களின் மீது பல்வேறு வழக்குகள். பின்பு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி கிராமப்புறங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. அதுவும் வெறும் 27 மாவட்டங்களுக்கு மட்டும்.விடுபட்ட மாவட்டங்களுக்கு இப்போது தி.மு.க ஆட்சியில் நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில் தான் நகராட்சி தலைவர், பேரூராட்சித்தலைவர் மற்றும் மேயர் தேர்வு நேரடி தேர்தல் மூலமாகவா அல்லது மறைமுக தேர்தல் மூலமாகவா என்ற கேள்வி எழுகிறது. திமுக கூட்டணிக் கட்சிகளோ நேரடி தேர்தல் நடத்தக் குரல் கொடுத்தவண்ணம் உள்ளனர்.
நேரடி தேர்தல் நடத்துவதன் மூலம் கீழ்மட்டத்தில் இருக்கும் வேட்பாளர்கள் மிக இயல்பாக நட்சத்திர தலைவர்கள் ஆக முடியும் அது போக அவர்களுக்குக் களத்தில் பணியாற்றப் பயிற்சி கிடைக்கும் நிச்சயமாகச் சட்டமன்றத்தில் ஜொலிப்பதற்கு வாய்ப்புண்டு. நேர்மையான முறையில் எந்தவித அரசியல் அழுத்தங்களின்றி பணபலம் இன்றி நேர்மையான முறையில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுமா? அதில் மக்கள் நேரடியாக தங்கள் மாநகராட்சி நகராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்படுமா?

Share on: