நீட் தேர்வு தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான கனவுகளைக் கொண்ட பல மாணவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைத்துள்ளது!


அதிகக்‌ கல்விக் கட்டணம்‌ செலுத்த முடியாததால்‌ வேறுவழியின்றி, தங்களது மருத்துவக்‌ கனவை நனவாக்கிட உக்ரைன்‌ போன்று பிற நாடுகளுக்குச் சென்று படித்துவரும் மாணவர்கள் உக்ரைனிலிருந்து வெளியேற முடியாமலும்‌-தங்களது மருத்துவக்‌ கனவு
என்ன ஆகுமோ என்ற கவலையிலும்‌, இன்னல்களைச் சந்தித்து வரும்‌
மாணவர்கள்‌ குறித்து மத்திய அரசு தெரிவித்து வரும்‌ கருத்துகள்‌ ஏற்புடையது அல்ல.
மத்தியில் ஆளும் பாஜக அரசு அமல்படுத்திய நீட் தகுதித் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவுகளைச் சிதைக்கும் நோக்கில் உள்ளது.
நீட் தேர்வு தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான கனவுகளைக் கொண்ட பல மாணவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைத்துள்ளது. இந்த நீட் தேர்வின் காரணமாகப் பல மாணவர்கள் உக்ரைன், சீனா போன்ற பிற நாடுகளுக்கு மருத்துவம் பயிலச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது மற்றும் சில மாணவ கண்மணிகள் தங்களது மருத்துவ கனவு நினைவாகாத காரணத்தால் உயிரை மாய்த்தும் கொண்டுள்ளனர்.
பணம் & செல்வ பலம் பொருந்தியவர்கள் மட்டுமே மருத்துவ பயில இயலும் என்று நிலை தற்போது இந்தியாவின் அணைத்து மாநிலங்களிலும் நிலவி வருகிறது. எனவே இந்த நீட் தேர்வை நடைமுறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கைவிட்டு உயர்கல்வி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்குச் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: