வரித்துறை திமுக அரசின் மீது கடுமை காட்டினால் அதை அவர்கள் தாங்கி நிற்பார்களா

செந்தில் பாலாஜி சாதுரியமாக தனக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட மோதலை, திமுகவிற்கும் வருமான வரித்துறைக்கும் என்று மாற்றிவிட்டார்.

இதை உணராத ஸ்டாலின் அவர்களும் “PTR -இன் விஷயத்தில் அது அவர் தனிப்பட்ட விவகாரம் அவர் பார்த்துக்கொள்வார்”என்று ஒதுங்கிக்கொண்டு செந்தில் பாலாஜி விஷயத்தில் மட்டும் தேவைக்கு அதிகமாக அவரை ஆதரித்து அனைத்து திமுகவினருக்கும் பிரச்சனையை தேடிக்கொண்டார் .ஏன் செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஸ்டாலின் ஆதரவு தருவது ஏன் என்று திமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது .

வருமான வரித்துறையினர் தமிழ்நாடு முழுவதும் திமுகவை சார்ந்தவர்கள் மீது சற்று கடுமை காட்டினால் போதும்,திமுகவின் பொருளாதாரம் மற்றும் ஆதரவு குறையும்.ஏனென்றால் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்த பொழுது அவரது ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரின் கார் கண்ணாடிகளை உடைத்த பிரச்சனை பேசும் பொருளாக மாறி உள்ளது .எனவே அவர்கள் திமுக அரசின் மீது கடுமை காட்டினால் அதை அவர்கள் தாங்கி நிற்பார்களா
Share on: