புரட்சி தலைவர் எம் ஜி ஆர் விதிகளின் படி நீதிமன்றத்திற்கு சென்றவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கருதப்படவேண்டும் ,ஆனால் எல்லா நிலைகளிலும் இவர்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் விதிகளை அடிப்படை தொண்டர்களால் தான் தலைமை தேர்ந்தெடுக்கபபடவேண்டும் என்கின்ற விதிகளை இவர்கள் பின்பற்றவில்லை .மேலும் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுக அமைச்சர்களுக்கு மருத்துவ கல்லூரி ஒதுக்கியது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளார் .இதற்கு பின்னால் ஏதேனும் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது .அடுத்து திரு,ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தர்ம யுத்தத்தில் அவர் வைத்தம் கோரிக்கை என்னவென்றால் அடிப்படை தொண்டர்களால் மட்டும் தான் தலைமை தேர்ந்தெடுக்கப்படவேண்டும் ,ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து இந்த இயக்கம் மீட்கப்படவேண்டும் ,அம்மாவின் மரணத்தில் இருக்கின்ற மர்மங்கள் வெளியில் வர வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்தார் .ஆனால் அவர்கள் சொன்னதிற்கு நேர்மாறாக அவர்களும் சேர்க்க வேடனும் என்று சொல்லுவது அநியாயத்திற்குரியதாக பார்க்கப்படுகிறது .மேலும் அடிப்படை தொண்டர்கள் தேர்ந்தேடுக்கப்படவேண்டும் என்று அன்று ஏன் அவர் கூறவில்லை .இந்த இரண்டும் பேரும் இவர்களுக்குள் இருக்கின்ற பிரச்சனையை ஒன்று கலந்து பேசாமல் இருவரும் மாறி மாறி குறை கூறிக் கொண்டு செல்வது அதிமுக விற்கும் ,அதனை நம்பி இருக்கின்ற தொண்டர்களுக்கும் இருவரும் ஏமாற்றுவது போல் பார்க்கப்படுகிறது