
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் அஜிஷா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது ஒன்றரை வயதாகிறது. குழந்தைக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு, ஹைட்ரோகெபாலஸ் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் தலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் இயற்கை உபாதை கழிக்கும்போது வெளியே வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தார்குழந்தைக்கு வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் கை நிறம் மாற தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் அஜிஷா செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். மருந்து செலுத்துவதால் ஏற்பட்ட நிறம் மாற்றம் ஒரு பிரச்சனையும் இல்லையென கூறியுள்ளார். இதனையடுத்து சில மணி நேரத்திலேயே குழந்தையின் கை முழுவதுமாக நிறம் மாற தொடங்கியது.பரிசோதித்தவர்கள், குழந்தையின் வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தையின் வலது கை தோள்பட்டை வரை முழுவதுமாக அகற்றப்பட்டதுசெவிலியர்களின் கவனக்குறைவே குழந்தையின் கை அழுகியதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக சுகாதாரத்துறை 3 துறை மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார்