
கந்துவட்டி கொடுமையால் தங்கவேல் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கந்துவட்டி கொடுமையால் நடக்கும், விவசாயிகளின் தொடர் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. விவசாயியின் மரண வாக்குமூலத்தின் படி, அதற்கு காரணமான கூட்டுறவு வங்கி அலுவலர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இதுபோல் துயர சம்பவம் நிகழாமல் இருக்க, தனியாரிடம் கடன் பெற்ற விவசாயிகளின் விவரங்களை சேகரிக்க வேண்டும். அவர்கள் பெற்ற தொகையை கூட்டுறவு வங்கிகளே ஏற்க வேண்டும். வரும் காலங்களில் கூட்டுறவு வங்கிகளில் மட்டும் விவசாயிகள் கடன் பெறும் வகையில், அதிக கடன் தொகை வழங்க வேண்டும்.
குழுவில் இணைய