நகைச்சுவையான பதிவு!

: ஹலோ சார், உங்களுக்கு என்ன வயசாகுது?

: 50.

: உங்க வெயிட்டென்ன, ஹைட்டென்ன?

: 70 கிலோ, 170 செமீ.

: கோவிட் வேக்சின் போட்டுக்கீட்டீங்களா?

: ஆமா, பூஸ்டர் வரைக்கும் போட்டுக்கிட்டேன்.

: சுகர், பிரஷர்ன்னு ஏதாச்சும்?

: இல்ல.

: உங்க ஃபேமிலில யாருக்காச்சும் இதெல்லாம் இருக்கா?

: இல்ல.

: எதாச்சும் சர்ஜரி பண்ணி இருக்கா?

: இல்ல.

: ஏதாச்சும் மெடிக்கல் ஹிஸ்டரி இருக்கா?

: இல்ல.

: கடைசியா எப்ப ஹெல்த் செக்கப் பண்ணீங்க?

: மே மாசத்துல.

: என்ன சொன்னாங்க?

: Absolutely fit. மலையத் தூக்கி என் தோள்ல வச்சா கூட ரெண்டு கிலோமீட்டர் அப்படியே நடப்பேன்.

: எதாச்சும் அலர்ஜி இருக்கா?

: இல்ல…. உங்களுக்கு என்ன வேணும்? நீங்க எந்த ஆஸ்பத்திரில இருந்து கூப்டுறீங்க?

: நான் டாக்டர் எல்லாம் இல்ல. அமலாக்கத்துறை ஆஃபீஸர். உங்க வீட்டுக்கு ரெய்டு வந்திருக்கோம், அதான் மொதல்ல மெடிக்கல் செக்கப் பண்ணிக்கிட்டேன். கொஞ்சம் கதவைத் தொறக்கறீங்களா?

Share on: