
திரு கே சி பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் zoom மூலமாக கலந்து கொண்ட கலந்துரையாடலில் கூறியிருப்பதாவது ,ஆளும் கட்சியான திமுக இந்த இரண்டு வருடத்தில் மக்களிடையே மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி வைத்துள்ளது .அதேபோல பாஜகவும் இந்த 30 வருடத்தில் அதிகளவு அவப்பெயரை மக்களிடையே சம்பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளார் .மேலும் கலந்துரையாடலின் பொழுது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிமுக தனித்து நின்று வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் .
மேலும் பாஜக இந்திய அளவில் பெரிய கட்சியாக கூட இருக்கலாம் .ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை மக்களிடையே அவர்களின் ஆட்டம் செல்லாது என்றும்,அண்ணாதிமுகவிற்கு தான் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கு உள்ளது என்றும் ,பாஜக வேண்டாம் என்று சொல்பவர்கள் தான் தமிழகத்தில் ஏராளமாக இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்