
இந்த விளம்பர மாடலை மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்களை பார்த்தால் Scotland Yard-க்கு இணையான தமிழ்நாடு காவல் என்று மார்தட்டிக்கொண்ட தமிழக காவல்துறை தற்பொழுது வலிமை இழந்துவிட்டதா?
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் வெறும் சம்பிரதாய அறிக்கைகள் செல்லாது. சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் இல்லாவிட்டால் நீங்கள் ஆள கையாளாகாதவர்கள் ஆகிவிடுவீர்கள். மக்கள் பாதுகாப்பே முக்கியம் என்று கூறிவிட்டு மக்களை பாதுகாக்காமல் இருக்கும் நீங்கள் எப்படி இந்தியாவை பாதுகாக்க தகுதி உடையவர்களாவீர்கள் ?