திருப்பத்தூரில் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்.. பாஜக நிர்வாகி கைது!


அடிதடி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்த விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி வினோத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி அமைப்பாளராக வினோத் என்பவர் உள்ளார். அடிதடி வழக்கில் ஒன்றில் சாட்சியம் அளிக்க விசாரணை அதிகாரியான உதவி காவல் ஆய்வாளர் ஜெகநாதனை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதால் பாஜக நிர்வாகி வினோத் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர்
Share on: