
எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்ததாகவும் அப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பெங்களூருக்கே சென்ற எம்.ஜி.ஆர் விளம்பரமே இல்லாமல் எப்படி தீர்வு கண்டார்
காவிரி விவகாரத்தில் கர்நாடகா இப்படி அடம் பிடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் காவிரி பிரச்சினை வரும் போது அவர் அதை எப்படி கையாண்டார்
காவிரியில் இதுவரை போதிய நீர் திறந்து விடப்படாததால் டெல்டாவில் பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. பெங்களூருக்கு கடந்த வாரம் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் காவிரி குறித்து பேசினாரா? டி.கே.சிவக்குமாரிடம் தண்ணீர் கேட்டாரா? என்றால் உதட்டை பிதுக்கிவிட்டு துரைமுருகனை டெல்லிக்கு அனுப்பியதாக கூறலாம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் கூட ஒரு முறை தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.
பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார். தண்ணீரை குடிக்கவே இல்லையே ஏன்?: எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார். கொடுக்க மாட்டேன் என்கிறாரே?: அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ”தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?” என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர். அவர்தான் எம்ஜிஆர்!: அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.
சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை கொண்டு வந்து விட்டார். அவர்தான் எம்ஜிஆர்! எனவே தான் தலைமுறைகள் கடந்தும் தமிழர்கள் நெஞ்சில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்