அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என அதிமுக அடிப்படை உறுப்பினரும் வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்து தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என ராம்குமார் ஆதித்தன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தார்.
இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை…