
நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது .தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் பிரதான காட்சிகள் அனைத்தும் தங்களை தயார்படுத்தி வருகின்றன .பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது ஆட்சியில் இருக்கிறது .அதனை வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும் தீவிர களப்பணியாற்றி வருகின்றது ,தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது .இதற்காக டெல்லியில் நாளை கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பாஜக நடத்துகிறது .இந்த கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான அதிமுக பங்கேற்கிறது .அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார் .இதற்காக நாளை காலை அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார் .பின்னர் மாலை நடைபெற உள்ள கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார் .