
எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிர்ப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் அறிவிப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் தொடர்ந்து நீடித்து வரும் உட்கட்சி மோதல். சசிகலா, டிடிவி தினகரன் வரிசையில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்து யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் செங்கோட்டையனுடைய பெயர் அடிபட்டது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைவதற்கு முன் செங்கோட்டையன் அடிக்கடி டெல்லி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார்.
ஆனால் கூட்டணி அமைந்த பின் செங்கோட்டையன் அமையதியாகவே இருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வரும் இந்த சூழலில் வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேசவுள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மண்டல அரசியல் முக்கியமானவராக திகழும் செங்கோட்டையனின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. உட்கட்சி பிரச்சனை வெடிக்க போகிறதோ என்ற அச்சமும் அதிமுகவினரிடம் பரவலாக காணப்படுகிறது.
இதற்கு பின்னால் பாஜக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டா அல்லது அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான யுக்தியா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!