செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது அவசியம்! நீதிபதி அதிரடி!


செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இரண்டாவது நாளாக நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அதில் அமலாக்கத் துறை தரப்பும் மேகலா தரப்பும் தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா தனது வாதங்களை முன் வைத்த போது குறுக்கிட்ட நீதிபதி காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்க முடியும். அதனால் நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியதாகவும், காவலில் எடுத்திருந்தால் முதல் 15 நாட்களை கருத்தில் கொள்ளக் கூடாது என கோர முடியாது என்றார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை எனவும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் குறிப்பிட்டார்.
Share on: