
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓபி ரவீந்திரநாத். தற்போது இவர் ஓபிஎஸ் அணியில் இருந்தாலும் அதிமுக சார்பில் மக்களவைக்கு சென்ற ஒரே ஒரு உறுப்பினர் அவர் மட்டும்தான்.
இந்த நிலையில் இவர் வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்துள்ளதாகவும், பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் கூறி அவர் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் இன்று அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிந்தவுடன் வழக்கு தாக்கல் செய்ய 45 நாட்கள் என்ற கால நிர்ணயம் இருக்கிற பொழுது. அந்த வழக்கின் தீர்ப்பு ஏன் குறிப்பிட்ட காலத்திற்குள் (சுமார் 90 நாட்களுக்குள்) வழங்கப்பட கூடாது. தாமதிக்கக்ப்பட்ட தீர்ப்புகளால் எந்தவித பலனும் இல்லை.